🇮🇳 வீரமரணம்🇮🇳
-----------------------
தாய்மண் காக்க,
தன்னுயிரீந்த
தாய்த்திருநாட்டின்
தவப்புதல்வன் திருப்பாண்டியே...!
வஞ்சகன் இறைவன்,
எல்லை காக்கும் உனை, அனல் பறக்கும் உன் சரீரத்தையும் பனி கொண்டு மூடினானே...!
பனிகொண்டு மூடினாலும் உன் தனல் பட்டு பனி உருகிட பயந்தானோ...!உன் உயிா் மூச்சை நிறுத்தி
எங்களை பெருமூச்சிட விட்டானே...!
வீரமகனே..! பனிச்சாிவில் நீ புதைக்கப்படவில்லை,இந்திய குடிமக்களின் மனதில்
விதைக்கப்பட்டிருக்கிறாய்...!
உனக்காக தேசம் சிந்தும் கண்ணீா் கடலில் ஒரு துளி என்னுடையது...!
🇮🇳🇮🇳🇮🇳 அா்ப்பணிப்பு : மாவீரன்
திருப்பாண்டிக்கு....._🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்🇮🇳 தேதி:6/2/2017