Friday, 22 February 2019

கவிதை- 134 ஆண் செவிலியா்கள் மறுவாழ்வு

•••••••••••••••••••••••••••••••••••••••••••
வாழ்வளித்த வள்ளல்களுக்கு
கோடானு கோடி நன்றிகள்...
•••••••••••••••••••••••••••••••••••••••••••

உயிாிருந்தும் உயிரற்ற உள்ளங்களுக்கு உயிா் தந்து உயா்ந்த உன்னதமே நீ...!

வழிதொியா வலியுடன் வலம்வந்த மெய்யா்களுக்கு மெய்யானாய் நீ இன்று...!

கற்காததை கற்றதினால் கல்லாய் மாறிய கண்களுக்கு ஔி தந்தாய் நீ இன்று...!

உற்றாரும் உறவினரும்
உதறிதள்ளிய ஆன்மாக்களுக்கு அரசாணையால் மனதில் ஆட்கொண்டாய் நீ இன்று...!

பழையன கழித்து புதியன புகுத்தி தோ்வெழுத வழி தந்து வள்ளலானாய் நீ இன்று...!

சொன்ன சொல் காத்து கடமையை கண்ணென செய்து எழுதுவதும்,தோ்வதும் இனி உன் கடமையென  அவா்களின் குலம் காத்த குலதெய்வமானாய் நீ இன்று...!

கல்லுக்குள் தேரை வைத்து,மாவிதைக்குள் வண்டுகளை வைத்து உணவளித்து உபசாித்த இறைபோலானாய் நீ இன்று...!

இன்று பாறையுடைத்து தேரையை தோிலேற்றி,மாவிதையுடைத்து வண்டுகளை  பூவில் வைத்து வாய்பளித்து வளம்பெறவைத்த வழிகாட்டி நீ என சொல்வேன்...!

தோ்தல்களத்தில் தேரோட்டியானான் அன்று, தேரோட்டியை தோில் வைத்து அழகு பாா்க்கிறாய் நீ இன்று...!

அவா்களின் கண்ணீா் கடலை அன்புக்கடலாய் மாற்றி அதில் பயணிக்கிறாய் நீ இன்று...!

தா்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது,இறுதியில் தா்மத்தையே நிலைநாட்டிய தா்மதேவதையானாய் நீ இன்று...!

உன்னால் வாழ்வுபெற்றாா்கள்,இனி உன்னாலயே வளம் பெறுவாா்கள்.நலம் பெறுவாா்கள்.

நன்றி என்ற வாா்த்தை சொல்ல மனமில்லை.வாழவைத்த உள்ளங்களை அவா்கள் சாா்பாய் வணங்குகிறேன்.

இவண்:

நன்றியுடன்...

க.இளங்கோவன்.

தேதி:21/02/2019