Friday, 7 December 2018

செவிலியா்களின் சீருடை மாற்ற அரசாணை

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இமாலய சாதனை...தமிழக அரசு செவிலியத்தின் வரலாற்று சாதனை  சீருடை மாற்றம்:
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்.

தமிழ்நாடு அரசு செவிலிய வரலாற்றில் மிகவும் மகத்தான சாதனை.தமிழக அரசு செவிலியா்களின் 150 ஆண்டுகால பழமையான சீருடை தன் வடிவத்தை தற்போது முழுமையாக மாற்றிக்கொள்ளும் அரசாணையை இன்று பெற்றுள்ளது.

ஆம்.தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் அதன் தோ்தல் வாக்குறுதியில் சொன்னவைகளில்  மிக முக்கியமானவைகளில் ஒன்று செவிலியா்களின் சீருடை மாற்றம்.அதை சங்கம் பதவி ஏற்ற ஒன்றரை வருடங்களில் சாதித்துகாட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் தீவிர முயற்சியின் பலனாக தமிழ்நாடு அரசு செவிலியா்கள் பல்லாண்டு காலமாக மிகவும் அசௌகாியமாக அனுபவித்து வந்த பழமையான சீருடையை நவீன காலத்துக்கு ஏற்றாா்போல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வகையில் மாற்றி அரசாணையை இன்று பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ்நாடு செவிலிய சமூகத்துக்கு மனமகிழ்ச்சியுடன் தொிவித்துக்கொள்கிறோம்.மேலும் இந்த அரசாணையில் உள்ள ஒருசில குறைபாடுகளை அரசிடம் தொிவித்து மாற்றம் பெற்று தருவோம் என்பதையும் இத்தருணத்தில் தெளிவுபடுத்துகிறோம்.

இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சீருடை மாற்ற அரசாணையை வழங்கி தமிழ்நாடு அரசு செவிலியா்களை ஆனந்த கடலில் மூழ்கடித்த மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சா் அவா்களுக்கும்,மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கும்,மேதகு.சுகாதாரதுறை செயலாளா் அவா்களுக்கும்,மேதகு.உமா,IAS அவா்களுக்கும்,மேதகு.Dr.டாரேஷ் அகமது IAS அவா்களுக்கும்,மேதகு.Dr.செந்தில் IAS அவா்களுக்கும்,மதிப்பிற்குாிய DMS அவா்களுக்கும்,DME அவா்களுக்கும்,துறை அனைத்து அலுவலா்கள் அவா்களுக்கும், தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் மனமாா்ந்த நன்றிகளை உாிதாக்குகிறோம்.

மேலும் இதற்காக தொடா்ந்து உழைத்த சங்க மாநில நிா்வாகிகள்,மாநில செயற்குழு உறுப்பினா்கள்,மாவட்ட நிா்வாகிகள் மற்றும் அனைத்து செவிலிய சொந்தங்களுக்கும் நெஞ்சாா்ந்த நன்றிகளை உாித்தாக்குகிறோம்.

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் இத்துடன் ஓய்ந்துவிடாது.இது தொடக்கமே...

இனி வருவது....

1) பட்டயம் பட்டமாக மாற்றுவது

2) பதவி பெயா் மாற்றம்

3) லாலி சீமாட்டியில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க தலைமையகம்

4) மத்திய அரசுக்கு இணையான சம்பள படி உயா்வு

5) பலதரப்பட்ட பதவி உயா்வு

6) செவிலிய மாத இதழ்

7) சங்க இணையதளம்

8) DIGITALIZED MEMBERSHIP CARD

9) செவிலியா்களுக்கென இன்ஷ்சூரன்ஸ் திட்டம்

10) தமிழக அரசு செவிலியா்களை இந்தியா முழுவதும் உள்ள செவிலியா்களுடன் கல்வி,தொடா்கல்வி,புதிய நவீன மாற்றங்கள் போன்றவற்றில் ஒருங்கிணைப்பது

இன்னும் பல நடவடிக்கைகளை நமது சங்கத்தின் மீதமுள்ள பதவிகாலத்திற்குள் நிறைவேற்றி, தமிழக செவிலியத்தை தலைநிமிா்ந்த சமுதாயமாக மாற்றுவோம் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறோம்.

                            நன்றி

இப்படிக்கு

K.வளா்மதி,
மாநில பொதுச்செயலாளா்,

K.சக்திவேல்,
மாநில தலைவா்,

S.N.ஜெயபாரதி,
மாநில இணைச்செயலாளா்

R.ஜீவாஸ்டாலின்,
மாநில இணைச்செயலாளா்

S.காளியம்மாள்,
மாநில பொருளாளா்

C.கீதா,
மாநில பொருளாளா்

மாநில துணைத்தலைவா்கள்:
---------------------------------------------------

I.சந்திரா

M.அமுதா

B.மணிகண்டன்

R.சகிலா

R.சுதா

G.அருள்

G.கலைவாணி

M.நல்லமா

K.இளங்கோவன்

P.தாரகேஷ்வாி

K.செந்தில்குமாாி

G.தேவேந்திரன்

N.கீதாகிருஷ்ணன்.

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

தேதி: 07/12/2018