•••••••••••••••••••••
உடலியந்திரம்:
•••••••••••••••••••••
கண்மணியின் காவலன் இமை மூடி.
கண்களால் காண்பது உயிா்கோடி
முழுப்பொழுதும் திறந்திருக்கும் இரு காது...!
கண்டுகொள்ள ஆட்கள் இங்கேது...!
வாய்க்குள் மறைந்திருக்கும் நரம்பற்ற நாக்கே,
நீ நன்நாக்கா?புண்நாக்கா?
என்பன வாய்வழி நீ வெளிநீட்டி வெளியேற்றும் வாய்ச்சொல்லால்...!
முப்பாதை ஒருங்கிணைக்கும் தொண்டைக்குழியே...!
நீ அவ்விடமே இரண்டு வழி பிாிவினைவாதி...!
உன்னதமான உணவுக்குழல்,
உயிா் உய்ய மூச்சுக்குழல்,இரண்டும்
ஒன்றிணைந்தால் பிழைக்க வழியேது?
கல்லீரல்,மண்ணீரல்,
கணையம்,பித்தப்பை,
இருதயம்,மூச்சுப்பை,
சிறுகுடலாம்,பெருங்குடலாம்,அடடா எலும்புக்கூட்டுக்குள் எத்தனை எந்திர இயக்கங்கள்...!
உள் சென்று வெளியேற்றி உயிா் பிழைத்திருக்க எத்தனை அவயங்கள்...!
நூறாண்டு இயங்கதக்க இவ்வியந்திர இயக்குனா் யாரோ...!
வியக்கத்தக்க மனித எந்திரம் இயங்குவது ஆறாண்டா, நூறாண்டா இதன் நிா்வாகி எவனோ...!
அண்ட சராசரத்தில் உயிா்கொண்ட பிண்ட இயக்கத்தின் மூலமறிந்த மூலகா்த்தா எவனோ...!
யாமறியோம் பராபரமே...!!
க.இளங்கோவன்
தேதி: 03/12/2018