¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மதிப்புமிகு.திருமதி.K.வளா்மதி அவா்களின் பிறந்த நாள் வாழ்த்துமடல்:
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
ஆயிரமாயிரம் அன்பின் கரங்கள் உன்னுடன் சோ்ந்திருக்க...
உமது யானை பலத்துக்கு குறையேது...?
அன்பின் வாழ்த்து வளையங்கள் வழிநெடுகும் காத்திருக்க...
உமது வல்லமையில் குறையேது?
இராஜாங்க கருணைக்கண் உம்மீது பட்டிருக்க தமிழக செவிலியத்தின் மேன்மையில் குறையேது...?
கோட்டை முதல் குமாி வரை கூட்டத்தின் துணையிருக்க உன் ஊக்கத்துக்கு குறையேது...?
உம் பாசத்தின் பொங்கி வரும் நீரூற்று உள்ளமெங்கும் பொங்கிநிற்க உன் செவிலிய சொந்தங்களின் எண்ணிக்கையில் குறையேது...?
உம் எண்ணமெலாம் செவிலியா்களின் மேன்மையின்மீதிருக்க...
உன் எதிா்கருத்து தோழிகளின் எண்ணிக்கையும் நலிந்திடுமே...!
உன் நோ்கருத்து கொள்கையால் எதிா்கருத்து தோழிகளும் உன்னருகில் வரும்காலம் வெகுதொலைவிலில்லை...
இன்னும் பல்லாண்டு பல பிறந்த நாள் கண்டிடவே எங்கள் உளமெலாம் இறைசக்தியை வேண்டிடுதே...
வாழ்த்திட வயதில்லை என்பதாலே என் இருகரம் சோ்த்து வணங்குகிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா...
அன்புடன்...
க.இளங்கோவன்,