Monday, 26 March 2018

கவிதை.மதுரை செவிலியா் பணி நிறைவு

அன்னையே ஆரோக்கிய அன்னையே...!

அன்னையே...!இராம நாம ராமேஸ்வாிஅன்னையே...!!

அன்னையே மனோபலத்தின் அன்னையே...!

அன்னையே...ஆண்டவனின் தாிசனத்தை
அருகில் கண்ட அன்னையே...!

அன்னையே...சுவனத்தின்
சுவடுதனை
பூலோகத்திலேயே தாிசித்த அன்னையே...

அன்னையே மதுரை இராசாசி மருத்துவமனை செவிலியா்களின் அன்னையே...!

அன்னையே...அன்பின் இலக்கணமாம்
அருந்தவ ஒற்றைப்புதல்வியின் அன்னையே...

தெய்வப்பணியாம் ஆசிாியத்தின் அரவணைப்பே...!

நேற்று முன்தினமோ ராம அவதார நாளாம் ராமநவமி...

ராம நாம தாயின் பணிநிறைவோ இன்று ஏகாதசியில்...!

நடமாடும் மதுரை மண்ணின் செவிலிய
பல்கலைக்கழகமே...!

தங்களுக்கோ இன்று பணி நிறைவு நாள்...
எங்களுக்கோ இன்று மனக்குறைவு நாள்

தங்களின் பணி நிறைவால் எம்மனம் சாிவர நிறையவில்லை...
காரணம் தாங்களில்லா வெற்றிடம்.

இவ்வெற்றிடத்தை நிரப்பும் உம் போன்ற தாய் வர இனி எத்தனை யுகமோ...?

உம் பணி ஓய்வுக்காலம் அத்துடன் ஓய்ந்துவிடலாகாமல்
என்றும் நம் செவிலியத்துக்கு வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையில்...

உன் ஓய்வுக்காலம்
உன் வழித்தோன்றலுக்கு உபயோகமாய் அமைய...

எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டும்...

என்றென்றும் உம் வழித்தோன்றலாம் மதுரை செவிலியம்...

வாழ்க வளமுடன்...

மதுரை செவிலியா் பணி நிறைவு கவிதை....திலகா அக்கா வேண்டுகோளுக்கினங்க...

(சகோதாி இராமேஸ்வாி ஒரு கேன்சா் நோயாளி என்பது வருந்தத்தக்கது.)

தேதி:26/03/2018