Wednesday, 28 March 2018

கவிதை-வளா் அக்கா பிறந்த நாள்

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மதிப்புமிகு.திருமதி.K.வளா்மதி அவா்களின் பிறந்த நாள் வாழ்த்துமடல்:
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

ஆயிரமாயிரம் அன்பின் கரங்கள் உன்னுடன் சோ்ந்திருக்க...
உமது யானை பலத்துக்கு குறையேது...?

அன்பின் வாழ்த்து வளையங்கள் வழிநெடுகும் காத்திருக்க...
உமது வல்லமையில் குறையேது?

இராஜாங்க கருணைக்கண் உம்மீது பட்டிருக்க தமிழக செவிலியத்தின் மேன்மையில் குறையேது...?

கோட்டை முதல் குமாி வரை கூட்டத்தின் துணையிருக்க உன் ஊக்கத்துக்கு குறையேது...?

உம் பாசத்தின் பொங்கி வரும் நீரூற்று  உள்ளமெங்கும் பொங்கிநிற்க உன்  செவிலிய சொந்தங்களின் எண்ணிக்கையில் குறையேது...?

உம் எண்ணமெலாம் செவிலியா்களின் மேன்மையின்மீதிருக்க...
உன் எதிா்கருத்து தோழிகளின் எண்ணிக்கையும் நலிந்திடுமே...!

உன் நோ்கருத்து கொள்கையால் எதிா்கருத்து தோழிகளும் உன்னருகில் வரும்காலம் வெகுதொலைவிலில்லை...

இன்னும் பல்லாண்டு பல பிறந்த நாள் கண்டிடவே எங்கள் உளமெலாம் இறைசக்தியை வேண்டிடுதே...

வாழ்த்திட வயதில்லை என்பதாலே என் இருகரம் சோ்த்து வணங்குகிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா...

அன்புடன்...
க.இளங்கோவன்,

Monday, 26 March 2018

மூட்டு வலிக்கு எளிய இயற்கை மருத்துவம்...

மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவத்தின் மூலம் சில எளிய வழிமுறைகள்...!
  🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦

மூட்டு வலி ஏற்படுவதற்கு சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின்  காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.


குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். வெங்காயத்தை, கடுகு எண்ணெய்  உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இரண்டு  தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கத்தான் இலைப்  பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து அருந்தலாம்.


சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Just kiding

கவிதை.மதுரை செவிலியா் பணி நிறைவு

அன்னையே ஆரோக்கிய அன்னையே...!

அன்னையே...!இராம நாம ராமேஸ்வாிஅன்னையே...!!

அன்னையே மனோபலத்தின் அன்னையே...!

அன்னையே...ஆண்டவனின் தாிசனத்தை
அருகில் கண்ட அன்னையே...!

அன்னையே...சுவனத்தின்
சுவடுதனை
பூலோகத்திலேயே தாிசித்த அன்னையே...

அன்னையே மதுரை இராசாசி மருத்துவமனை செவிலியா்களின் அன்னையே...!

அன்னையே...அன்பின் இலக்கணமாம்
அருந்தவ ஒற்றைப்புதல்வியின் அன்னையே...

தெய்வப்பணியாம் ஆசிாியத்தின் அரவணைப்பே...!

நேற்று முன்தினமோ ராம அவதார நாளாம் ராமநவமி...

ராம நாம தாயின் பணிநிறைவோ இன்று ஏகாதசியில்...!

நடமாடும் மதுரை மண்ணின் செவிலிய
பல்கலைக்கழகமே...!

தங்களுக்கோ இன்று பணி நிறைவு நாள்...
எங்களுக்கோ இன்று மனக்குறைவு நாள்

தங்களின் பணி நிறைவால் எம்மனம் சாிவர நிறையவில்லை...
காரணம் தாங்களில்லா வெற்றிடம்.

இவ்வெற்றிடத்தை நிரப்பும் உம் போன்ற தாய் வர இனி எத்தனை யுகமோ...?

உம் பணி ஓய்வுக்காலம் அத்துடன் ஓய்ந்துவிடலாகாமல்
என்றும் நம் செவிலியத்துக்கு வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையில்...

உன் ஓய்வுக்காலம்
உன் வழித்தோன்றலுக்கு உபயோகமாய் அமைய...

எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டும்...

என்றென்றும் உம் வழித்தோன்றலாம் மதுரை செவிலியம்...

வாழ்க வளமுடன்...

மதுரை செவிலியா் பணி நிறைவு கவிதை....திலகா அக்கா வேண்டுகோளுக்கினங்க...

(சகோதாி இராமேஸ்வாி ஒரு கேன்சா் நோயாளி என்பது வருந்தத்தக்கது.)

தேதி:26/03/2018

Friday, 2 March 2018

பனங்கற்கண்டின் பயன்கள்

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடும்

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.
இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
#1 :
அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

#2:
உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

#3:
உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

#4:
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

#5:
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

#6:
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

#7 :
உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

#8:
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

Tips to the parents of board exam students

Dear Parents,

Congratulations !

Your child is appearing for his boards ...

Its indeed a proud moment that your child has excelled beautifully in his journey till STD 10th.

But dear parents, now that they are starting with their exams, next 20 days is going to be crucial from them as well as you too.
Lot of mood swings, sadness, enthusiasm, relaxed behavior,  rudeness etc can be expected from the children.
And it's ok since lot of unnecessary stress has been built up by our education system , when it comes to Board Exams.

Let's support our children. ..

How you can do that?🤔

Some simple tips which can be implemented from your end, to help your child cope up with the stress.

1..Please wake them up in the morning with a positive stroke, a touch/ hug  which a child expects from his parents.

2.. Start your child's day with a positive statement - I love you,come let's start this beautiful day together etc

3.. Take care about the communication you have with your child, before s/he leaves for his exams. I am sure you will excel, I am sure you will give your best, all luck to you, I will be waiting for you to come back sweetheart....etc

4.. Do not let your anxiety pass on to your child. Whatever the situation is, last moment positive support from your end will give a boost to your child's confidence

5..When the child comes back, please avoid asking only how was the exam, instead ask....how was the experience....
Let's unwind for the day, let's go out for sometime / let's have a cup of coffee together etc

Avoid talking about the subject.

Gone is gone...you can't alter that but atleast you can support the child for the coming one.

6.. Please ensure that a very happy and healthy atmosphere is given to the child in the house during his exams.

Avoid unnecessary arguments within the family, differences can be solved later;
Don't forget- that will affect your child and that will add to his stress

7..Please play soft instrumental music while the child is having his breakfast or relaxing with you

8..Avoid giving marks target to the child.He is sensible enough to understand his targets

9..Keep fresh flowers in the house, that brings lots of positivity in the house

10..Avoid nagging for any reasons

11..With a positive stroke, make the child sleep..your two minutes will give him sound sleep for some hours, that will help the child to combat with the situation

12...Avoid advice pls, give the child his space

13..Stand by your child even if the exam has not gone as per your or his expectations..It's ok...

14..Most important:
From today, don't let the child meet the relatives or friends, last moment negative statements or expectations might prove detrimental for the child.

Lots of love to your child and
Yes - you please be calm, be patient and all luck to you too , my dear parents.

By:
Child Psychologist Riddhi Doshi Patel

வயதுக்கு வந்த மகளை பராமாிபபது தாயா?தந்தையா?

*வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?*
*அப்பாவா ?*

*🌻உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !*

*உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான்* *என்கிறார்கள் பல அறிஞர்கள் !*

*🗣தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !*

*💃ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் ! தன்னம்பிக்கை வளர்ப்பவர் !*
*நம்பிக்கை ஊட்டுபவர் !* *பண்புகளை ஊட்டுபவர் !*

*வழிகாட்டி !*
*என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்*.

*ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?*

*அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.*

*🗣ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்*.

*🗣ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்*.

*🌻எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது*.

*💃சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில் , அழகழகாய்* *ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி , பென்சில்  , இரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்*.
*என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்*.

*💃மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்*.

*🌷திடீரென ஒரு நாள் பார்த்தால் , சட்டென்று வளர்ந்து நிற்பாள். "என் டாடி சூப்பர் " என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ,* *"டாடிக்கு ஒண்ணும் தெரியாது "என்று பல்டி அடிப்பாள்*.

*🌷எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல் , மன மாற்றங்கள் தான்*!

*🗣என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல*.

*அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள்*

*🌻ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்* *உங்கள் மகள் உங்கள் மகள் தான்*
*உங்கள் மீதான பாசமும் , அன்பும் , கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்*.

*🌻ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில் தான் மாற்றங்கள்*

*"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி " என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்....* *எனக்கு இது வேணும்*.
*முடியுமா ?!* *முடியாதா ? " என பிடிவாதம் பிடிப்பாள்*.

*உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள்*.

*ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்*.

*அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி*.

*🌷நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்*.

*💃"நல்லது ன்னா அப்பா ஒத்துப்பார் "*

*என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர " அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது " என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது*.

*🗣பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்*. *அது தான் முக்கியம்.*

*🌷ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்*

*"என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது*.

*நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்*.

*🌷இன்னொரு விஷயம் , *உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.*
*அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.*

*உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ ,* *தலையைக் கோதிப்* *பாராட்டுவதோ ,*
*செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை*.

*அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.*

*ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.*

*மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.*

*நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்*.

*💃அவள் பள்ளியிலோ , கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,*
*அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.*

*வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்*

*🗣நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்*.

*சரி ! மதிக்கிறீர்கள்*.

*சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா ?*
*இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்*.

*டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது*.

*சுற்றி வளைத்து எதையும் பேசாமல் , உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள் , அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்*.

*💃டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்*.

*ஆனந்தம் , கவலை , எரிச்சல் , சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.*

*சக தோழிகளின் கிண்டல் , படிப்பு , அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.*

*அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்*.

*"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"*

*என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !*
*💃எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்*.

*அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள்*.*

*நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு*.

*💃அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.*

*உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை*.
*எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்*.

*அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்*.

*"அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாரு ன்னு தெரியாது " என்னும் நிலமை வந்தால் சிக்கல் தான்.*

*💃அவளுடைய படிப்பு , நட்பு , எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும்*.

*"அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.*

*🗣குறிப்பாக ஆண்களைப் பற்றியும் ,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்*.

*வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்*.

*சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்*.

*🌷ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால் , பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்*.

*பெண்ணின் திருமண வயது வரும்போது " அப்பா தான் உலகம் "எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்*,
*பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்*.

*👨‍👩‍👧~சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.~*
*_"ஸ்ட்ராங் ஃபாதர்ஸ்,ஸ்ட்ராங் டாட்டர்ஸ்"_*
*என்னும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்*.

*👨‍👩‍👧"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் "என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்*.

*👨‍👩‍👧~"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.~**

*அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்*

*💃இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம்*

🙏🙏🙏

*- படித்ததில் பிடித்தது*.