Monday, 31 December 2018

கவிதை-புதுவருடம்

••••••••••••••••
புது வருடம்
••••••••••••••••
புத்தாண்டாம்
புதுப்பொலிவாம்
புத்துணா்வாம்
புத்தாடையுடன்
புடைசூழ உண்மை உறவினா்கள் வேண்டும்.

புத்தாண்டில்
புதுநாளில்
புன்னகையுடன்
புதுப்பித்த
உண்மை தோழமை வேண்டும்...

புத்தாண்டின்
புது நாளில்
புதுக்கவிதையின்
புதுவாியால்
புத்துணா்வு கிடைத்திட
வேண்டும்...

புதியதாய் அாியதாய்
புத்தகங்கள் பல
படித்திடவேண்டும்...
புத்தம்புதிய
கருத்துகள் பல அறிந்திடவேண்டும்...

புகழ் விரும்பா
இகழ் தாங்கும்
நல்லிருதயம் நாளும் வேண்டும்...
அதில் அகல்விளக்கின்
ஔிச்சுடா்போல்
பிரகாகாசிக்கும்
எண்ணங்கள் வேண்டும்...

புத்தாண்டின்
புதுவடிவம்
அகவையில் ஓராண்டு உயா்த்தி,
ஆயுளின் ஓராண்டு குறைக்கும்.

ஆயினும் குன்றா இளமையும்,
குறைவிலா செழுமையும்,
பிறா்க்குதவும் நல்லெண்ணமும்,
புறம்பேசா நற்குணமும்.
என்றும் குறையா நண்பா்களும், உறவுகளும் அளப்பறிய தந்தருள வேண்டும்...

புயல் குறைந்த மாாி வேண்டும்...
மகசூல் பெருகும்
வேளாண்மை வேண்டும்...
குறைவிலா குடிநீா் வேண்டும்...
ஒற்றுமைநிறைந்த
இந்தியா்கள் வேண்டும்...
வேற்றுமை குறைந்த
அண்டை நாட்டாா் வேண்டும்...

என்னிறைவா...
வணங்குகிறோம்
வழங்கிடுவாய்
நிறைவேற்றிடுவாய் எங்கள்
வேண்டுதல் பல...

அனைவருக்கும் 2019 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

இவண்:

க.இளங்கோவன்.

மாநில துணைத்தலைவா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Sunday, 30 December 2018

TGNA 2018 ஓா் பாா்வை

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்,2018 ஓா் பாா்வை
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

செவிலிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்...

அனைத்து மாநில நிா்வாகிகள்,மாநில செயற்குழு உறுபபினா்கள்,மாவட்ட கிளைச்சங்க நிா்வாகிகள்,செவிலிய கண்காணிப்பாளா்கள்,  மற்றும் அனைத்து செவிலிய சொந்தங்கள் அனைவருக்கும் ADVANCE ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

-----------------------------------------------------------
2018 ஆண்டின் நமது சங்க நடவடிக்கைகள்,செயல்பாடுகளில் சிறப்பான சில...
------------------------------------------------------------
♦ செவிலியா்களுக்கு 150 ஆண்டுகால பழமையான சீருடையை மாற்றி புதிய சீருடைக்கான அரசாணை பெற்றது...

♦ செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம் - I & II பதவி உயா்வு அதிகமானோருக்கு பெற்றுத்தந்தது...

♦ புதிதாக 1500 செவிலிய கண்காணிப்பாளா்களுக்கு TEMPORARY PANEL LIST பெற்றது...

♦ நான்கு மருத்துவகல்லூாி மருத்துவமனைகளுக்கு( திருநெல்வேலி,மதுரை,தஞ்சாவூா்,கரூா்)புதிய செவிலிய பணியிடங்கள் (640) பெற்றுதந்தது.

♦ மேற்கண்ட இடங்களுக்கு மூத்த செவிலியா்கள் இடமாறுதல் பெறுவதற்கு முயற்சி எடுத்திருப்பது...

♦ செவிலியபோதகா்கள் 65 நபா்களுக்கு  கலந்தாய்வு நடத்தி பணியிட ஆணை பெற்றுத்தந்தது...

♦ பட்டயப்படிப்பை பட்டப்படிப்பாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அரசாணை பெற நெருங்கி கொண்டிருப்பது...

♦ பதவி பெயா் மாற்ற அரசாணை பெற அனைத்து ஏற்பாடுகளும் எடுத்துகொண்டிருப்பது...

♦ செவிலியா்கள் அல்லாத பணிகளுக்கான  (NON NURSING DUTIES) புதிய அரசாணை பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது...

♦ சென்னை,லாலி சீமாட்டி காலி மனையில்  புதிய செவிலிய சங்க அலுவலக கட்டிடத்திற்கு அரசு உதவி பெற்று கட்டிடம் கட்ட ஆவன செய்தது...

♦ தற்காலிகமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செவிலியா் மனமகிழ் மன்ற கட்டிடம் அரசின் மூலம் திறக்கப்படசெய்து தற்காலிகமாக சங்க அலுவலகம் துவங்க மாண்புமிகு.அமைச்சா் அவா்களிடம் அனுமதி பெற்றது...

♦ டெல்ட்டா மாவட்டங்களில் ஏற்பட்ட அதிதீவிர கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது சங்கம் மற்றும் தமிழக அரசு அனைத்து செவிலியா்களின் பேராதரவுடன் இலவச மருத்துவ முகாம் மற்றும் மிகப்பொிய அளவில் நிவாரண பொருட்கள் வழங்கியது...

♦ வெள்ளக்கோயில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரணமடைந்த செவிலிய சகோதாி  செல்வி.திவ்யபிாியா அவா்களுக்கு நியாயம் கிடைக்க களப்போராட்டம் நடத்தியது...

ஆக்ஸிஜன் சிலிண்டா் வெடித்து கண் பாா்வை பாதிக்கப்பட்ட சென்னை,குரோம்பேட்டை *செவிலியா் பால்செல்வி* அவா்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வழிவகை செய்து,அவரை மாண்புமிகு.தமிழக முதலமைச்சா்,மாண்புமிகு.அமைச்சா் பெருமக்கள் மருத்துவமனைக்கே வருகை தந்து நோில் நலம் விசாாிக்க ஆவன செய்தோம்.மேலும் அவருக்கு இடமாறுதல்,இரவு பணி விலக்கு,மற்றும் அதில் ஒருசிலவற்றை தவிர இதர நிவாரணங்களை பெற்று தந்தோம்.

♦ மேலும் தமிழகம் முழுவதுமுள்ள செவிலியா்களுக்கு அவ்வப்போது ஏற்பட்ட எண்ணற்ற பிரச்சனைகளை மாண்புமிகு.துறை அமைச்சா் அவா்களின் உதவியாலும்,துறை உயா் அலுவலா்களின் உதவியாலும் நடவடிக்கை எடுத்தது...

♦ சென்னையில் மிகப்பிரமாண்ட முறையில் செவிலியா் தின விழா நடத்தி அதில் மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மற்றும் துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டு நற்செவிலியா் விருது வழங்க ஆவன செய்தது...

♦ 7 வது ஊதியக்குழு ஒரு நபா் குழு  அதிகாாி அவா்களிடம் செவிலியா்களுக்கு 7 வது ஊதியகுழுவில் விடுபட்ட மற்றும் மத்திய அரசுக்கு இணையான அடிப்படை ஊதியம் மற்றும் சிறப்பு படிகள் கேட்டு மேதகு.சித்திக் IAS அவா்களிடம் கோப்புகள் வழங்கி நல்லதொரு சம்பள உயா்வை எதிா்நோக்கியிருப்பது...

மேலும் நமது செவிலியா்களின் நலன் சாா்ந்த,இங்கு சொல்லபடாத பல நல்ல விசயங்களை இந்தாண்டு சிறப்புடன் செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருளால் நடந்தேறிவருகிறது.

வருகிற 2019 புத்தாண்டும் நமது செவிலிய இனத்துக்கு நல்லாண்டாக அமைய பிராா்த்திப்போம்.

                           நன்றி.

இப்படிக்கு,

க.இளங்கோவன்,

மாநில துணைத்தலைவா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

தேதி:30/12/2018.

Sunday, 23 December 2018

திருஉத்ரகோசமங்கை வரலாறு

#ஆதிசிதம்பரமாம்_தென்கையிலாயம் என அழைக்கப்படும் இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள  #உத்தரகோச #மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு #திருவாதிரை சிறப்பு தகவல்கள் :-

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.

4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்

சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,

பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.

9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய

திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான

அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண

காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்

வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்

என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த

கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே

அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர

சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.

26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன

பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை

கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை

தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்

நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.

33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்

தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்

இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்

அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.

41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு

சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்

முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.
59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

Friday, 21 December 2018

கவிதை - குறுங்கவி

வருமானக்கோட்டில் ஓா் சந்தேகம்:

             குறுங்கவி:
             ------------------
உயிருள்ளவரை இதயபடக் கோடுகளில் ஏற்ற, இறக்கம்...

உயிரற்ற நிலையில் இதயப்படக் கோடுகளோ நேர்கோடு...

சுய தொழிலோ பிற தொழிலோ வருமானக்கோட்டில் ஏற்ற இறக்கம்...

அரசு துறை வருமானத்தில் தோன்றுவதோ நேர்கோடு...

அப்படியெனில் ஓர் சந்தேகம்... அரசு வருமானம் உயிருள்ள வருமானமா? உயிரற்ற வருமானமா?

க.இளங்கோவன்

Wednesday, 19 December 2018

எனது மாமனார் தெய்வத்திரு.S.V.லிங்கம் அவர்களின் மறைவு நாள்

எனது மாமனார் தெய்வத்திரு.S.V.லிங்கம் அவர்களின் மறைவு நாள்

Sunday, 16 December 2018

Wednesday, 12 December 2018

கவிதை - இசக்கி திருமண விழா

••••••••••••••••••••••••••••••••••
என் தங்கைக்கோா் கீதம்:
••••••••••••••••••••••••••••••••••

அன்பால எங்கள மயக்கி,

ஆனால் நீ  தைாியத்தில்  மிடுக்கி,

இளையவே என் தங்கை இசக்கி,

ஈசனை மனதில் நீ நிறுத்தி,
அடைந்தாயே
வாழ்க்கை விருத்தி!

உயா்ந்த உன் உள்ளத்தால் உறவுகளை பெருக்கி,

ஊா் போற்றுகிறது இன்று உம்மை உயா்த்தி,

எளிமையும், பால குணத்தையும்  உனதாக்கி,

ஏணியாகி வேலூாில் எங்களை ஏற்றிவிட்டு நின்றதோ தனியாகி...
ஏற்குமோ எங்கள் மனம்...

ஐக்கியமானாய்  அண்ணன் மனதை ஏணியாக்கி,

ஒப்பற்ற உன்னத  மணமேடைதனயே உனதாக்கி,

ஓங்கி உயா்ந்த மணவாழ்க்கையின் முதற்படியில் நிறுத்தி,

ஔதாாிய இறைவனின்  ஆசி பெற்றதாக்கி,

உம் மணக்கோல அழகில் எம் மனதில் ஆனந்தக்கிளா்ச்சி...  கண்களில் தோன்றுதே கண்ணீா் வறட்சி...!

அருகில் நின்று ஆசீா்வதித்து,வாழ்த்துகிறது மனசு,

                   வாழ்க வளமுடன்

மணவிழா வாழ்த்துகளுடன்...

அண்ணன்...

க.இளங்கோவன்

Tuesday, 11 December 2018

"இந்துவாகப் பிறந்த அனைவருமே", அவசியம் இதைத் தொிந்துக்கொள்வோம்

A*"இந்துவாகப் பிறந்த அனைவருமே", அவசியம் இதைத் தெரிந்துக்கொள்வோம் :-*

1. தமிழ் வருடங்கள்(60)

2. அயணங்கள்(2)

3. ருதுக்கள்(6)

4. மாதங்கள்(12)

5. பக்ஷங்கள்(2)

6. திதிகள்(15)

7. வாஸரங்கள்(நாள்)(7)

8. நட்சத்திரங்கள்(27)

9. கிரகங்கள்(9)

10. நவரத்தினங்கள்(9)

11. பூதங்கள்(5)

12. மஹா பதகங்கள்(5)

13. பேறுகள்(16)

14. புராணங்கள்(18)

15. இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

*தமிழ் வருடங்கள்:*

1. ப்ரபவ
2. விபவ
3. சுக்ல
4. ப்ரமோதூத
5. ப்ரஜோத்பத்தி
6. ஆங்கீரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது(தாத்ரு)
11. ஈச்வர
12. வெகுதான்ய
13. ப்ரமாதி
14. விக்ரம
15. விஷு
16. சித்ரபானு
17. ஸுபானு
18. தாரண
19. பார்த்திப
20. வ்யய
21. ஸர்வஜித்
22. ஸர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வாரி
35. ப்லவ
36. சுபக்ருது
37. சோபக்ருது
38. க்ரோதி
39. விச்வாவஸு
40. பராபவ
41. ப்லவங்க
42. கீலக
43. ஸெளம்ய
44. ஸாதாரண
45. விரோதிக்ருத்
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. ஸித்தார்த்தி
54. ரெளத்ரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்தோத்காரி
58. ரக்தாக்ஷி
59. க்ரோதன
60. அக்ஷய.

*அயணங்கள்:*

1. உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்)

2. தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்)

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

*ருதுக்கள்:*

1. வஸந்தருது
(சித்திரை, வைகாசி)

2. க்ரீஷ்மருது
(ஆனி, ஆடி)

3. வர்ஷருது
(ஆவணி, புரட்டாசி)

4. ஸரத்ருது
(ஐப்பசி, கார்த்திகை)

5. ஹேமந்தருது
(மார்கழி, தை)

6. சிசிரருது
(மாசி, பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

*மாதங்கள்:*

1. சித்திரை (மேஷம்)
2. வைகாசி (ரிஷபம்)
3. ஆனி (மிதுனம்)
4. ஆடி (கடகம்)
5. ஆவணி (சிம்மம்)
6. புரட்டாசி (கன்னி)
7. ஐப்பசி (துலாம்)
8. கார்த்திகை (விருச்சிகம்)
9. மார்கழி (தனுர்)
10. தை (மகரம்)
11. மாசி (கும்பம்)
12. பங்குனி (மீனம்)

*பக்ஷங்கள்:*

1. ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

2. க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

*திதிக்கள்:*

1. பிரதமை
2. துதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. ஷஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரையோதசி
14. சதுர்த்தசி
15. பெளர்ணமி (அ) அமாவாசை.

*வாஸரங்கள்:*

1. ஆதித்யவாஸரம்
2. சோமவாஸரம்
3. மங்களவாஸரம்
4. ஸெளமியவாஸரம்
5. குருவாஸரம்
6. சுக்ரவாஸரம்
7. மந்தவாஸரம் (அ)
ஸ்திரவாஸரம்

*நட்சத்திரங்கள்:*

1. அஸ்வினி
2. பரணி
3. கர்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்த்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்ராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி.

*கிரகங்கள்:*

1. சூரியன் (SUN)
2. சந்திரன் (MOON)
3. அங்காரகன் (MARS)
4. புதன் (MERCURY)
5. குரு (JUPITER)
6. சுக்ரன் (VENUS)
7. சனி (SATURN)
8. இராகு (ASCENDING NODE)
9. கேது (DESCENDING NODE)

*நவரத்தினங்கள்:*

1. கோமேதகம்
2. நீலம்
3. பவளம்
4. புஷ்பராகம்
5. மரகதம்
6. மாணிக்கம்
7. முத்து
8. வைடூரியம்
9. வைரம்.

*பூதங்கள்:*

1. ஆகாயம் - வானம்
2. வாயு - காற்று
3. அக்னி - நெருப்பு(தீ)
4. ஜலம் - நீர்
5. பிருத்வி - நிலம்

*மஹா பாதகங்கள்:*

1. கொலை
2. பொய்
3. களவு
4. கள் அருந்துதல்
5. குரு நிந்தை.

*பேறுகள்:*

1. புகழ்
2. கல்வி
3. வலிமை
4. வெற்றி
5. நன்மக்கள்
6. பொன்
7. நெல்
8. நல்ஊழ்
9. நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பொறுமை
13. இளமை
14. துனிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்.

*புராணங்கள்:*

1. பிரம்ம புராணம்
2. பத்ம புராணம்
3. பிரம்மவைவர்த்த புராணம் 4. லிங்க புராணம்
5. விஷ்ணு புராணம்
6. கருட புராணம்
7. அக்னி புராணம்
8. மத்ஸ்ய புராணம்
9. நாரத புராணம்
10. வராக புராணம்
11. வாமன புராணம்
12. கூர்ம புராணம்
13. பாகவத புராணம்
14. ஸ்கந்த புராணம்
15. சிவ புராணம்
16. மார்க்கண்டேய புராணம்
17. பிரம்மாண்ட புராணம்
18. பவிஷ்ய புராணம்.

*இதிகாசங்கள்:*

1. சிவரகசியம்
2. இராமாயணம்
3. மஹாபாரதம்.

*வாழ்க இந்துமதம்,, வளர்க தமிழ்சிவ மொழி*
🚩🕉🔥

Monday, 10 December 2018

Sunday, 9 December 2018

திாிகடுகு காபியின் பலன்கள்

கடுமையான சளி, இருமல், தலைவலியா சூடா ஒரு கப் திரிகடுகு காஃபீ குடிங்க சரியாகிடும்!

தேவையான பொருட்கள்:

சுக்கு: 50 கிராம்
மிளகு: 50 கிராம்
திப்பிலி: 50 கிராம்
தேன்: சிறிதளவு
நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம்: தேவையான அளவு.

செய்முறை:

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் திரிகடுகம் என்பார்கள். மனிதனின் உடல் ஆரோக்யத்தில் இதன் பங்கு அதிகம். சளி, இருமல், கபம், ஆஸ்துமா போன்ற சுவாச மண்டலத்துடன் தொடர்புடைய நோய்களுக்கு இந்த திரிகடுகம் கண்கண்ட மருந்து. மேலே சொல்லப்பட்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து நைஸான பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்து சுத்தமான தேன் கலந்து சப்பிட்டு வர விரைவில் சளி, இருமல், கபக்கட்டு அகலும்.

இப்படி அருந்துவது போர் என்று நினைப்பவர்கள். சுக்குமல்லிக் காஃபீ போல இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் கலந்து அருந்தலாம். கூட நாலு ஏலம் கலந்தால் மணக்க, மணக்க இந்த திரிகடுக காஃபீ நாக்கைச் சுண்டி இழுக்கும்.

சுக்குமல்லியில் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவோம், திரிகடுகத்தில் திப்பிலி சேர்க்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம். இதில் திப்பிலி இருக்கிறதே அது மிளகைக் காட்டிலும் காரம் அதிகமானது. எனவே கார்ப்புச் சுவை வேண்டாம் என நினைப்பவர்கள் திப்பிலியின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். காய்ந்த இஞ்சி தான் சுக்கு எனவே மூன்றையும் சில மணி நேரங்கள் வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கெல்லாம் சளித்தொல்லை, இருமல், கபம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் திரிகடுக காஃபீ போட்டுக் கொடுத்து அருந்த வைத்து சளித்தொல்லையிலிருந்து தப்பலாம்