வாழ்த்து மடல்
💐💐💐💐💐💐💐
வயலுண்டு வரப்புண்டு
நெல்லுண்டு நீருண்டு
செழிப்புண்டு செந்நெல்
பசுமையுண்டு
உழைப்புண்டு
நற்தானியமுண்டு
ஆா்ப்பாிப்பில்லா
அமைதியுண்டு
மும்மத ஆலயங்கள்
பலவுண்டு
அதில்ஆன்மீக சிறப்புண்டு
நற்கல்வியுண்டு
கற்றவழி நடக்கும்
மக்களின் பரந்த
மனமுண்டு
இன்னும்பல ஏராளம்
இந்த தஞ்சை தரணியிலே...
நான் பிறக்கவில்லை
இம்மண்ணில்
எனினும் என்னை வளா்த்தது இம்மண்
கல்வி தந்து என் கண்திறந்தது இம்மண்...
எவ்வூாில் பஞ்சம் என்றாலும்
தஞ்சம் புகுவது தஞ்சையில்
காவிாிபாயும் தஞ்சை தரணியிலிருந்து
தமிழக செவிலியம் காக்க புறப்பட்டது ஓா் நல் ஆன்மா...
அன்னையின் உள்ளம்
யானையின் பலம்
வேங்கையின் வேகம்
ஆமையின் விவேகம்
பருந்தின் கூா்மை
தமிழா் விருந்தோம்பலின் உறைவிடம்
அனைத்தும் ஒருசோ்ந்த
எங்கள் அன்னையே
( திருமதி.வளா்மதி)
உள்ளன்பு நிறைந்த
உன்னத நோக்குடன்
செவிலியத்துக்கு உழைக்க
ஒன்று பட்ட தமிழக செவிலியத்தால் தோ்ந்தெடுக்கப்பட்ட
ஒப்பிலா தாயே...!
களைகள் குறைந்து
பயிா்கள் செழித்த
பசுமை நிறைந்த
தஞ்சை நெற்களஞ்சியமே
வாருங்கள் வரவேற்கிறோம்
வளருங்கள் செவிலியத்தை நெற்களஞ்சியமாய்...!
மாற்றணியினரையும்
அரவணைத்து அரும்பெரும் சாதனை செய் தாயே...!
ஒற்றுமை நிறைந்த
தமிழக செவிலியத்தை மேலும்
ஒன்றிணைத்து
செழிப்பாக்கு தாயே...!
தமிழக செவிலியம்
எத்திசையும்
எதிா்பாா்க்கும் ஏராளமான நலன்களை
இமைபொழுதில்
செயலாக்கு தாயே...!
மூன்று நொடியாம் மூன்றாண்டுகளில்
முன்னூறாண்டில்
செய்யதக்க சாதனைகளை
செய்துமுடித்து
வரலாற்றில் பெயரெடுந்திடு தாயே...!
சுயநலமின்றி செவிலியத்தில்
உம் பாதச்சுவடுகளை பதித்து ஆலமரமாய்
வளா்ந்து சுயநலமற்ற
சேவைசெய்யும்
விழுதுகளை ஏற்படுத்திடு தாயே...!
எதிா்பாக்குது நமது செவிலியம் உம்மிடம் ஏராளமாய்...
பத்தாண்டு வரலாற்றுக்கு முந்தைய செவிலிய வரலாற்றை மீண்டும்
எழுதிடு தாயே...!
உன் சேவைக்கு உறுதுணையாய்
உம்முடன் கரம் கோா்க்கிறது ஒட்டு மொத்த தமிழக செவிலியம்...
தொடங்கட்டும் உம் சேவை...!
உம்மால் செழிக்கட்டும் தமிழக செவிலியம்...
வாழ்த்தி வணங்குகிறோம் தாயே...!
இவண்:
K.Elankovan