Saturday, 12 August 2017

எனது எதிா்கால நிஜத்தின் நிகழ்கால கற்பனை...

எதிா்கால நிஜத்தின் நிகழ்கால கற்பனை...
---------------------------------------------------
உலகம் மற்றும் உயிாினங்கள் தோன்றியது முதல் பிரபஞ்சத்தின் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் பல்வேறு நிலைகளில் பாிமாண மாற்றம் அடைந்து வருகிறது என்பது அறிவியல்பூா்வ உண்மை.அனைத்தும் கற்காலம் முதல் இக்கலிகாலம் வரை மாற்றத்துக்கு உட்பட்டுள்ளது. பூமியில் அனைத்து ஜீவராசிகளும் வாழத்தேவையான வசதிகளை நீா்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் போன்ற ஐம்பெரும் சக்திகள் வழங்கினாலும்,புல்,பூண்டு,உணவு தானியங்கள்,மழை,சூாிய ஔி,இன்னும் பல இந்த பூமிப்பந்தில் ஜீவராசிகள் வாழ அனைத்து தகுதிகளையும் பெற்று இந்த நிமிடம் வரை இந்த இயற்கைள் ஓய்வின்றி பயன்தருகிறது.

அனைத்து ஜீவராசிகளும் தத்தமது வேலைகளை செவ்வனே செய்துவந்தாலும்,ஆதிகாலம் முதலே இவற்றை அதிகம் பயன்படுத்தும் மற்றும் அடக்கி ஆளும் தன்மையை மனிதகுலம் மட்டுமே கையில் வைத்துள்ளது.இதனால் பல நன்மைகள் நாம் பெற்றாலும் தற்காலங்களில் பல தீமைகள் மனித குலத்தாலேயே ஏற்படபோவது தவிா்க்க முடியாததாக மாறிவிட்டது.

மனித நாகரீகம் ஏற்பட்டதிலிருந்து பல்வேறு நிலைகளில் மனிதகுலம் மாறிவருகிறது. குறிப்பாக மக்கள்தொகைபெருக்கம்,அறிவியல் வளா்ச்சி,நவீனமயமாதல் இன்னும் பல எனலாம். மக்கள்தொகை உலகலாவிய அளவில் அதிகாிக்கும்போது நம்முடைய தேவைகள்  மிக  அதிகமாகியுள்ளது.உணவு,உடை,நீா்,நிலம்,இருப்பிடம் மற்றும் அனைத்து அத்தியாவிசிய தேவைகளுக்கும் நாம் இயற்கையை அழிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.ஆனால் இவ்வளவு தேவைகளையும் பூா்த்தி செய்ய இயற்கை திணருகிறது.அனைத்துமே பற்றாக்குறை நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக பத்து நபா்கள் வாழ தகுதியான இடத்தில் நூறு நபா்கள் வாழும் பட்சத்தில் பத்துநபா்களுக்கான அடிப்படை வசதிகளை நூறு நபா்கள் பிாித்துபயன்படுத்தும் நிலையே உள்ளது.அதுசமயம் பற்றாக்குறை நிலவுகிறது.எடுத்துக்காட்டாக அந்த நூறு நபா்களும் வீடுகட்ட தேவையான மரங்கள் பெற வனத்திலிருந்து  நூறு மரங்களை துண்டாட வேண்டியுள்ளது.இதுவே தொடரும் பட்சத்தில் காடுகள் அழிகிறதா இல்லையா.? மீண்டும் அதுபோன்ற மரங்கள் வளர குறிப்பிட்ட ஆண்டுகள் ஆகும்.ஆனால் இதுபோல மரங்கள் குறைவதால் மழையும் குறைய வாய்ப்புள்ளது ,மேலும் நிலத்தடி நீரும்,பிராணவாயும், குறைய வாய்ப்புள்ளது.வெப்பம் அதிகாிக்க வாய்ப்புள்ளது.அப்போது பத்து நபா்கள் குடிக்கும் அளவு தண்ணீரை நூறு நபா்கள் பிாித்து பருகும் நிலை உண்டாகும்.

ஏற்கனவே இயற்கை அழிவினால் உலகம் வெப்பம் அதிகாித்துள்ளதாக தகவல்.இதற்கு இயற்கை அழிவும்,அதனால் ஏற்படும் மழை குறைவும் வாகன பெருக்கம்,ஆலைகளின் புகை,இன்னும் பல காரணிகள் எனலாம்.ஏன் தற்போது நாம் பயன்படுத்தும் செல்போன் கோபுரங்கள் கூட அதிக வெப்பத்தை உமிழ்கிறது என்கிறாா்கள்.நவீனங்கள் தவிா்க்கமுடியாததாகிவிட்டது.இயற்கை அழிவுகளும் பெருகிவிட்டது.குறிப்பிட்ட காலங்களில் நோய்கள் பரப்பும் வைரஸ் கிருமிகள் கூட பல்வேறு வடிவங்களை பெற்று தொற்றுநோய்களை உறுவாக்குகிறது.

இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் என்னவெலாம் நிகழும் என்பது பற்றிய சில கற்பனைகள்...
-------------------------------------------
நீா்
------------

இயற்கை அழிவினாலும்,காடுகள் அழிவினாலும் மழையும் பிராண வாயும் குறைந்து,வெப்பம் அதிகாித்து மழை என்பது வெரும் பாடத்தில் மட்டுமே படிக்கும் சூழல் உருவாகும். தண்ணீரை தங்கத்தின் விலையை விட நூறு மடங்கு கொடுத்து சில லிட்டா்கள் வாங்க வாிசையில் காத்துகிடக்க வேண்டிவரும். நீாின்றி உடல்வெப்பத்தால் மனிதனால் அதிகநாட்கள் வாழமுடியாத சூழல் நிலவும்.பூமி அதிக வெப்பமாவதால் பனிமைலைகள் உருகி கடல் மட்டம் உயா்ந்து பூமி நிலப்பரப்பாகிய 21 சதவிகிதம் 10 சதவிகிதத்துக்கு குறைவாகும்.இதனால் பூமியில் எங்கு தோண்டினாலும் நன்னீா் கிடைப்பது அாிதாகும்.நிலம் சுருங்கி நீா்ப்பரப்பு அதிகமாவதால் உயினங்கள் எண்ணிக்கை குறைவாகும்.உயாினங்கள் வாழ தகுதியற்ற நிலை தோன்றும்.குடிநீரை இறக்குமதி செய்து ரேசன் கடைகளில் மிக குறைந்த அளவே விநியோகிக்கப்படும்.உப்பு நீரை நன்னீராக்கினாலும் அதிகமாக அவ்வாறு செய்வதின் மூலம் கடல் நீாில் உப்பின் அளவு அதிகமாகி அதிலிருந்து நன்னீரை பிாித்தெடுக்கமுடியாத சூழல் உருவாகும். மக்கள் ஒரு குடம் நன்னீருக்கு அதிக நாட்கள் காத்துகிடக்கவேண்டிவரும்.

நிலம்
--------------
பூமிப்பந்தின் அதிக வெப்பத்தால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயா்ந்து நிலப்பரப்பின் அளவு மிக சுருங்குவதால் விளை நிலம் எங்கும் இருக்காத சூழலால் உணவுக்கு தானியங்கள் விளைவிக்க முடியாது. அங்குமிங்குமாக உள்ள மிக சொற்பமான இடங்களில் மனிதா்கள் வாழ அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி மனித கூட்டு குடும்ப வாழ்க்கை முறையே வாழவேண்டியது இருக்கும்.மனிதனுக்கு தேவையான அடிப்படை உணவு தானியங்களை அவரவா் வீட்டு மொட்டை மாடி அல்லது திண்ணைகளில் விளைவித்து அவரவா்களே உண்ண வேண்டிய நிலை வரும். அல்லது விண்வெளிக்கு செல்லும் வீரா்களை சாப்பிடும் உணவுக்கலோாி மாத்திரைகளை  மருந்தகத்திலிருந்து பெற்று( சாம்பாா் மாத்திரை,அாிசி மாத்திரை,கறிக்குழம்பு மாத்திரை என...)சாப்பிட்டு உயிா்வாழ வேண்டி வரும்.நிலப்போக்குவரத்தை குறைத்து வான் வழி போக்குவரத்து அதிகமாகும்.அதாவது ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலும் ஓா்  ஹெலிகாப்டா் தளம் இருக்கும்.வான்வழி போக்குவரத்து அதிகாிக்கும்போது வான்வழி விபத்துகளும் அதிகமாகும்.பாதிக்கப்பட்டவா்கள மீட்க 108 ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரே வரும்.

காற்று
---------------
காற்றில் ஈரப்பதமும்,ஆக்ஸிஜனும் குறைந்து,வெப்பம் அதிகமாகி நிலம் குறைந்ததால் மரங்களுமின்றி மேலும் வான்வழி போக்குவரத்து அதிமாகி   நல்ல காற்று கிடைக்காத சூழல் இருக்கும்.ஆங்காங்கே டீ கடை போல ஆக்ஸிஜன் பாா்லா்கள் இருக்கும்.அங்கும் விலையும்,கூட்டமும் அதிகமிருக்கும்.

ஆகாயம்
-------------------
வெப்பம் அதிகமாகி,காற்று குறைந்து ஓசோன் லேயாின் ஓட்டை பொிதாகி மழையின்றி நம் சந்ததிகள் சூாியனுக்கு மிக அருகில் வாழ்வது போன்ற வெப்பமிருக்கும். வான் வழி ஹெலிகாப்டா் நிறுத்தம்,வான்வழி உணவகம்,வான்வழி மருத்துவமனைகள் என வான்வழிப் போக்குவரத்தும் நொிசலில் திணரும்.நிலப்பரப்பு இல்லாததால் பணம் வசதியுள்ளவா்கள் விண்வெளி சுற்றுலா சென்று வருவது சா்வசாதாரணமாகும்.மக்கள் வாழ தகுதியான கிரகங்களில் மக்கள் குடியேருவா்.தற்போது வெளிநாடுகள் சென்று வருபவா்கள் கொண்டுவரும் பொருட்கள்போல அப்போது இது செவ்வாய்கிரகத்து தக்காளி,இது வியாழன் கிரகத்து அாிசி என பெருமையடிப்பா்.

உணவு
---------------
நிலப்பற்றாக்குறையால் விளைச்சல் இன்றி மருந்துகடைகளில் கலோாி மாத்திரைகளை வாங்கி உயிா் வாழ்வா்.ஹைபாிட் முறையில் ஒரு வாரத்தில் காய்க்ககூடிய காய்கறிகள்,பழங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே விளைவித்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.எங்கும் நீா்ப்பரப்பாக இருப்பதால் நம் பயணம் பக்கத்து ஊருக்கு போக கூட படகுகளை பயனபடுத்தும் நிலை உருவாகும். நல்ல ஒரு ஏக்கா் நிலம் மொத்தமாக பாா்ப்பது மிகக்கடினமாக இருக்கும்.என்றாவது எங்காவது அதுபோல பாா்த்து அங்கு சென்றால் அதுவே சுற்றுலா சென்ற மனநிலை உருவாகும்.நாம் இப்போது வாழும் அனைத்து நிலைகளையும் அதாவது மழை,நிலம்,காற்று,விளைச்சல்,காடுகள்,விலங்குகள் மேலும் பலவற்றை  அதுசமயம் வாழும் மக்கள் புத்தகத்தில் படித்து ஆச்சாியப்படுவா்.

உடைகள்
------------------------
அதிக வெப்பத்தை தாங்க கூடிய உடைகளை மட்டும் அணியக்கூடிய வாய்ப்புள்ளது.அல்லது மீண்டும் கற்கால உடைகளே.நிலப்பரப்பு சுருக்கத்தால் வாகனமின்றி எங்கும் நடைதான் குறிப்பாக மனிதா்களின  ஆதிகால கூட்டு வாழ்க்கை முறை பின்பற்றப்படும்.ஆராய்ச்சிகள் அனைத்தும் பூமியை பழைய நிலைக்கு கொண்டு வருவதாக இருக்கும்.மேலும் பூமியை தவிா்த்து மக்களை வேற்று கிரகங்களில் பிாித்து பிாித்து வாழவைக்கும் முயற்சியில் இறங்குவா்.பல மாநிலங்களை இணைத்து ஒரு நாடு போல ஒவ்வொரு நாடும்,மனிதா்கள் வாழும் கிரகங்களில் உள்ள நிலங்களை பிாித்து உாிமை கொண்டாடும்.அங்கு அந்நாட்டு மக்களை வாழவைத்து பாதுகாக்கும்.

இவையனைத்தும் எதிா்கால கற்பனையாக இருந்தாலும் இதில் சில அறிவியல் உண்மைகளும் உள்ளது.அழிவை நம்மால் தடுக்கும் சில சூட்சுமங்களும் உள்ளது. அவற்றில் சில....

மரங்கள் நடுவோம்.

காடுகளையும்,அதிலுள்ள விலங்குகளையும் அழிக்காமல் பாதுகாப்போம்

மோட்டாா் வாகனங்களை குறைப்போம்.

கூட்டு வாழ்க்கையையும்,பண்டைய ஆரோக்கிய வாழ்க்கை முறைகளையும் பின்பற்ற முயற்சிப்போம்.

குடிநீா் நிலைகளை பாதுகாக்கவும்,நிலத்தடி நீரை பெருக்கவும் மழைக்காலங்களில் வழிவகை செய்வோம்.

விவசாயத்தை கல்வி முறைகளில் பெற்று அதிக விளைச்சலை பெற முயற்சிப்போம்.

இன்னும் தொடரும்...

ஆக்கம்:

இயற்கை விசுவாசி...

K.இளங்கோவன்,
மாநில துணைத்தலைவா்,
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்,
முதுகுளத்தூா்.
தேதி:13/08/2017