Thursday, 15 December 2016

Achyranthes aspera-2

தமிழர்களோடு ஒன்றிய மூலிகை முறைகள்

நாயுருவி.

வேலுக்கு பல் இருகும்

வேம்புக்கு பல் துலங்கும்

பூலுக்கு போகம் பொழியுமே

ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே

நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்

நாயுருவி (Achyranthes aspera) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ

ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது
.
அதீத பசி, மூலம், கண் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இதன் வேர், விதை, இலை ஆகியவற்றால் செய்த ரசம் அல்லது பொடி பயனளிக்கும் என நம்பப்படும், பொதுவாக சாலையோரங்களில் காணப்படும் ஒரு புதர்ச்செடி.

பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்னும் அற்புத மூலிகை ஆகும்.

நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

நவ கிரகத்தில் நாயுருவி புதன் கிரகத்தை குறிக்கும்   புதன் கிரகத்திற்குக் கோவில் ஒன்று அமைத்து பகவானுடன், ஞானாதேவி, நாயுருவி செடி, இம்மூன்றையும் ஒரே சமயத்தில் வணங்குகின்றார்கள். இதனால் இக்கிரகத்தின் நன்மைகள் கிடைக்கும் என்றும், உயிரைக் குடிக்கும் நோய்களான கிட்னி ஃபெயிலியர், எய்ட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் நம்புகின்றனர்.

துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.

விதையைச் சோறு போல் சமைத்து உண்ணப் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, புலால் கூடாது.
 நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.

நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.

நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

கதிர்விடாத இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி நாளும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியன குணமாகும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

ஆறாத புண்-ராஜ பிளவை, விடக்கடி ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணமாகும்.

20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக் கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம் குணம் பெறும்.

10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.

சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் நாயுருவி...

இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு. மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, கொஞ்சங் கொஞ்சமாய் அந்தப் பாறையில் துளையிட்டு, பாறைக்கு மேலே வளர்ந்து விடும். இந்தத் தன்மையைக் கொண்டே சித்தர்கள் நாயுருவியை மருந்தாக்கினர்.

அதாவது, நம் உடலில் உண்டாகும் கட்டிகள், கழலைகள் போன்றவற்றை நாயுருவி குணப் படுத்தும் என்று நம்பி, நாயுருவியை மருந்தாக்கினர். சிறுநீரகத்தில் உண்டாகும் கட்டி (ஈஹ்ள்ற்), கற்கள் (நற்ர்ய்ங்ள்) போன்றவற்றை குண மாக்கும் தன்மை நாயுருவிக்கே உள்ள தனிச்சிறப்பாகும்.

நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும். 

சித்தர்கள் அருளிய சிறுநீரகம் காக்கும் சிறப் பான மருந்தினைக் குறிப் பாய் வரைகிறேன்.

நாயுருவி வேர், சிறுபீளை வேர், சாரணை வேர், சிறுகீரை வேர், சிறு நெருஞ்சில் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து பால் விட்டு அவித்து உலர்த்திக் கொள்ளவும். பின்னர் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் காலை- மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டுவர, சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், ரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்றவை அதிசயமாய் குணமாகும்.

சிறுநீரக நோய்கள் பல வருடங்களுக்கு முன்பே அதன் அறிகுறிகளைக் காட்டும். அதை நுட்பமாய் உணர்ந்து சித்தர்கள் அருளிய மருந்துகளை மிகச் சிரத்தையுடன் உட்கொண்டு வந்தால், சிறுநீரகம் செயல்படும் திறனை ஒழுங்குபடுத்தி விடலாம். வரும்முன் காக்க வள மையான மருந்துகள் சித்த மருந்துகள் மட்டுமே!

காய்ச்சல் விலக...

நாயுருவி இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து, அத்துடன் பத்து மிளகு, சிறிது வெல்லம் சேர்த்து விழுதாய் அரைத்துச் சாப்பிட, அனைத்து வகையான காய்ச்சல்களும் விலகும்.

தீவிரமான காய்ச்சல் தகிக்கும்போது, நாயுருவி இலையை சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, நீரை வெதுவெதுப்பாய் அடிக்கடி பருகி வர, காய்ச்சல் படிப்படியாகத் தணியும்.

வயிற்றுவலி விலக...

நாயுருவி இலைச்சாற்றுடன் துளி பெருங் காயம் சேர்த்துச் சாப்பிட, வயிற்றுவலி உடனே விலகும். இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி சாப்பிட்டு வர, முறையற்ற மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும்.

வெள்ளைப் படுதல் குணமாக...

நாயுருவி இலைச்சாற்றில் கடுக்காய்த் தூள் இரண்டு கிராம் அளவில் சேர்த்துச் சாப்பிட்டு வர, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் உடனே குணமாகும். மேலும் பெண்களின் மர்மப் புண்களும் ஆறும்.

மூலநோய் குணமாக...

உள்மூலம், வெளிமூலம், கீழ்மூலம், ரத்த மூலம் போன்ற மூலநோயின் அனைத்து வகைகளையும் குணப்படுத் தும் அற்புத மூலிகை நாயுருவியாகும். இன்றும் கிராமங்களில் ரத்த மூலத்தை உடனே நிறுத்த நாயுருவியையே மருந் தாக்குகின்றனர்.

நாயுருவி இலைச்சாறு 60 மி.லி. எடுத்து சிறு பாத்திரத்தில் இட்டு காய்ச்சி சுண்ட வைத்து, அதில் இரண்டு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பின்னர் இரண்டு சின்ன வெங்கா யத்தையும் நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டு நாட்டுக் கோழி முட்டையை உடைத்துச் சேர்த்து நன்கு கிளறவும். இதனைச் சாப்பிட, மூலத்தில் உண்டாகும் ரத்தக் கழிச்சலானது உடனே தீரும்.

வெட்டுக் காயங்கள் ஆற...

நாயுருவி இலையை 100 கிராம் அளவில் அலசி எடுத்து, அதை 500 மி.லி. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சவும். எண்ணெய் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி ஆற வைத்து, எண்ணெயில் உள்ள இலைகளை விழுதாய் அரைத்து மீண்டும் எண்ணெயிலேயே கலந்து விடவும். இந்த எண்ணெயைப் பூசி வர, புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள் போன்றவை உடனே ஆறும்.

உடல் இரும்பைப்போல் உறுதியாக...

நாயுருவி அரிசியை முறைப்படி சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பைப்போல் உறுதியாகும் என்று சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.

50 கிராம் நாயுருவி அரிசியைச் சாப்பிட்டால் இரண்டு வேளை பசியைத் தாங்கும் சக்தி கிடைக்கிறது. நாயுருவி மிகத் திறனுள்ள ஒரு உணவாகும்.

மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு ஆகியன உண்டாகும்.

நாயுருவி வேரும் நேர்மறை சக்தியும்..

நாயுருவிக்கு "மாமுனி' என்றொரு பெயருண்டு. மாமுனி என்பது மகாசித்தனைக் குறிப்பதாகும். அஷ்டமா சித்துகளையும் முறையே பயின்று பரம் பொருளோடு கலக்கும் வல்லமை மாமுனிகளுக்கு உண்டு. இறை தேடும் பண்டைய சித்த மரபினர் நாயுருவி வேரால் தங்களது பற்களைத் துலக்கி வந்துள்ளனர். அதுவும் நாயுருவியின் வேர் களிலேயே வடக்கு நோக்கிச் செல்லும் வேருக்கு விசேஷ சக்தி இருப்பதாய் நம்பப்படுகிறது.

நாயுருவி வேரால் பல் துலக்கி வர, வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். நம் பண்டைய தமிழ் சமூகம், நாயுருவி வேரை மைபோல் செய்தும் உபயோகித்து வந்துள்ளது.

நாயுருவி வேரை பால் விட்டவித்து உலர்த்தித் தூள் செய்து கொண்டு, தினசரி இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு, சித்தபிரம்மை போன்ற குறைபாடுகள் முற்றிலுமாய் விலகும். நாயுருவி வேர் மிக வசித்துவம் தரும்.

நாம் கோவில் மற்றும் வீடுகளில் வளர்க்கும் யாகத்தில்கூட ஆலங்குச்சி, அரசங்குச்சி, நாயுருவிக் குச்சி போன்றவற்றையே உபயோகிக்கி றோம். இதன் காரணம் என்னவெனில், இவற்றை யாகத்திலிட்டு பூஜை செய்து, மந்திரங்களை ஜெபிக்கும்பொழுது, பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் ஈசனின் ஆசியை ஈர்த்து, நமக்குத் தருவதாய் நம்பப்படுகிறது.

நீங்கள்கூட நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கிப் பாருங்கள். உங்கள் முகம் தேஜஸ் அடையும்; அழகு பெறும். வார்த்தைகள் நளினமாய் வெளிப்படும். உங்கள் பேச்சை ரசிக்கவும் ஒரு கூட்டம் உருவாகும். நேர் மறைச் சக்தியின் (டர்ள்ண்ற்ண்ஸ்ங் ஊய்ங்ழ்ஞ்ஹ்) ஒட்டுமொத்த உருவமும் நீங்களாகி விடுவீர்கள்.