Monday, 31 October 2016

பசும்பொன் ஐயாவின் வரலாற்றில் சில....

♥தேசிய தலைவர் "தேவர் ஜயாவை"பற்றி தெரிந்து கொள்ளுங்கள்♥

♦தேவர் ஜயாவை "ஜாதி தலைவர்" என்று நினைத்து கொண்டிருப்பவா்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அவா் ஒரு "தேசிய தெய்வீக தலைவர்" என்று அறியலாம்...

♦வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல.சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு...

♦அதிசய ஆன்மிக அரசியல்வாதி...

♦34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

♦நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார்.இருவரும் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதப்போரட்டத்தில் ஈடுபட்ட உண்மையான போராளிகள்.

♦நேதாஜி தனது அம்மாவிடம் "உங்களுடைய கடைசி மகன் இவன்" என்று தான் அறிமுகம் செய்துவைத்தார்.

♦"அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்" என்றார் நேதாஜி.

♦தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.

♦நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்துவிட்டு காங்கி்ரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர்.கட்சியின் தமிழக தலைவராக இருந்தார் தேவர்.

♦அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.

♦நேரு விலைபேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.

♦மூன்று முறை MP யாகவும்,மூன்று முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

♦பிரச்சாரம் என்று தன் தொகுதி பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.

♦எனக்கு,என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை... நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.

♦பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

♦ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.

♦அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.

♦இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டைவிட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும்,வென்றார்... பதவியேற்காமலே மறைந்தார்.

♦காமராஜர் சாதாரண இளைஞராக இருந்தபோது, அவருக்கு சொத்தாக இரு ஆடுகள் வாங்கி, வரிகட்டி,வாக்குரிமை வாங்கி, தேர்தலில் போட்டியிடச்செய்து வெற்றிபெற வைத்தார். தேவர் இல்லையென்றால் "காமராஜர் என்ற பெயரே" தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்காது.

♦அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.

♦இரயிலில் இலவசமாகப் போகமாட்டார்.

♦சம்பளம் எதுவும் வாங்கமாட்டார்.

♦அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்கமாட்டார்.

♦கையைத் தலைக்கு வைத்து திண்ணையில் தூங்குவார்.

♦வாழ்வில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்.

♦இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள்,தாடி வளர்த்தவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.

♦ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார்.தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணை சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.

♦சொத்துக்கள் பெரும்பகுதியை "தலித் சகோதரா்களுக்கு"எழுதிக் கொடுத்தவர்♦

♦"சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்" என்றார்♦

♦"தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்" என்றார்♦

♦ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர்.டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையை கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப்போனது மன்றம்...திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்... தூக்கிவைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.

♦ஜோதிடம்,சிலம்பம், குதிரையேற்றம்,துப்பாக்கி சுடுதல் என அனைத்து வகைக் கலைகளையும் அறிந்தவர்.

♦நேதாஜி இறந்துவிட்டார் என காங்கிரசும், ஆங்கிலேயர்களும் கட்டிய கதையைத் தகர்த்தெறிந்தவர்.இறுதிவரை நேதாஜி தேவருடன் மட்டுமே ரகசிய தொடர்பில் இருந்தார்.

♥ஆன்மிகத்தின் அடையாளம்♥

♦தன் வாழ்நாள் முழுதும் பெண் வாடையே படாதவர்.

♦"உங்கள் அழகு மீசை பிடித்துள்ளது" ஒரு பெண் கூறியதால் , ஆண்மையின் அடையாளமான தன் மீசையை நீக்கிவிட்டு இறுதிவரை வாழ்ந்தவர்.

♦தான் படுத்த படுக்கையாக இருக்கும் போதும் தனக்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் செவிலியரை ஒரு பெண் தன் உடலைத் தொடக்கூடாது என்று மறுத்தவர்.

♦இறுதிக் காலத்தில் "ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தாங்கள் இன்னும் பல ஆண்டு காலம் வாழலாம்" என்று மருத்துவர்கள் கூற, "இறைவன் கொடுத்த உடலை குறையின்றி மீண்டும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறி,அறுவை சிகிச்சையை மறுத்து, உயிரை மாய்த்துக்கொண்டவர்.

♦பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப்போகும் நாளை முன்னரே கணித்துக் கூறியவர்.

♦இந்து மதத்தின் தத்துவங்களை இவரளவுக்கு யாரும் அறிந்திருக்க முடியாது.

♦ஒரு கூட்டத்தில் முஸ்லீம் மத போதகர்களே ஆச்சர்யப்பட்டு "எங்களது மதத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதவற்றையும் தேவர் தெரிந்து வைத்திருக்கிறார்" என்றனர்.அந்த அளவு முஸ்லீம்,புத்த, கிறிஸ்தவ மதம் மற்றும் சன்மார்க்க கருத்துக்களிலும் தெளிந்திருந்தார்.

♦அவர் இறந்ததும் அவர் வளர்த்த மயில்கள் தன் உயிரை மாய்த்தது.மன்னவன் வரலாறு மண்ணில் எழதின மயில்கள்.

♦சித்த வித்தையில் உயர்ந்தும் நைஷ்டீக பிரம்மச்சரியத்தின் உச்சத்தைத் தொட்டும் ஈடிணையற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் தேவர். அதனாலே சித்தவித்தையில் உள்ளவர்களுக்கும் நைஷ்டீக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்களுக்கும் அவரது சீடர்களால் நடத்தப்படும் “குருபூஜை” என்ற சிறப்பு பூஜையானது தேவருக்கு வருடந்தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. பால்குடம் எடுத்தல், முளைப்பாரி வளர்த்தல், முடிக்காணிக்கை செலுத்துதல் முதலிய செயல்களின் மூலம் மக்கள் தேவரை தெய்வமாக வணங்குகின்றனர்.

♥நேருவை தவிர்த்த தேவர்♥

♦நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனபோது உலக முக்கியஸ்தர்கள் பலர் ஆசிய ஜோதி என போற்றி அவரை சந்திக்க நினைத்தனர். ஆனால் நேருவோ, "நான் ஃபார்வர்டு ப்ளாக் தலைவர் முத்துராமலிங்கத்தேவரை சந்திக்க விரும்புகிறேன்" எனக்கூறி சந்தித்து கைகுலுக்க கை நீட்டினார்."என் தலைவனை (நேதாஜி) காட்டிக்கொடுத்த கையை நான் தொடமாட்டேன்" எனக்கூறி நிராகரித்துவிட்டார்.

♥ராஜாஜி போற்றிய தேவர்♥

♦ஒருமுறை மூதறிஞர் ராஜாஜி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது. அக்காலத்தில் பிரபலமான மூன்று பிரம்மச்சாரிகளின் பெயர்களைக் கூறி, இவர்களுடைய பிரம்மச்சரியத்திலே எது உயர்ந்தது எனக்கேட்டது அக்கேள்வி.அந்த மூன்று பேரில் முதலாமவர் இராமகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவரும், தமிழகத்தின் முதல் கல்வி அமைச்சருமான, காந்தியவாதி திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள். இரண்டாமவர் பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்கள். மூன்றாமவா் திரு.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள். இக்கேள்விக்கு பதிலளித்த ராஜாஜி, “அவிநாசிலிங்கம் செட்டியார் அல்லது காமராஜரது படத்தைக் கூட முத்துராமலிங்கத்தேவரின் படத்தினருகில் வைத்துவிடாதீர்கள்” என்றார்.

♥கண்ணதாசன் வியந்த தேவர்♥

♦புகை,மது,மாது, மாமிசம் என சகல கெட்ட சுவாசம் கொண்ட நான் சொல்கிறேன்.இந்த உலகில் உண்மையான, ஒழுக்கமான, பிரமச்சாரி உண்டென்றால் அது உத்தம சீலர் பசும்பொன் தேவர் அவர்கள்
மட்டுமே" என்றார் காவிய கவிஞர் திருமிகு.கண்ணதாசன் "இந்து மதத்தின் பொக்கிஷம்" எனப்படும் தனது "அர்த்தமுள்ள இந்துமதம்" நூலில்.

♦வரலாற்று ஆய்வாளர் திரு.மருதுபாண்டியன் "நான் ஆராய்ச்சி செய்யாத தலைவர்களே இல்லை...நான் ஆராய்ந்தவர்களிலேயே மிகப்பெரும், மிகச்சிறந்த தலைவர் தேவர்தான் என்கிறார் ( Youtupela jayatv Maruthupandian speech)

♦இவையனைத்தும் நான் அறிந்தவற்றில் சிறு அளவே.நான் அறிந்தது ஒரு சிறு அளவே.இப்பேர்ப்பட்ட மாபெரும் உன்னத மகானின் பெருமைகளை அடுக்கி கொண்டே போகலாம்🙏🏻

♥தேசியமும்,தெய்வீகமும் தனது இருகண்கள் என்று வாழ்ந்த தேவா் ஜயா சாதி தலைவா் அல்ல...சாதித்த தலைவா்♥

♥தேசிய தலைவர் தேவர் ஜயா புகழ் ஓங்குக❤

தேவர் ஐயாவின் குரு பூஜையான  இந்நன்னாளில் வணங்கி மகிழ்வோம்🙏🏻🙌🏻😊😘

செவிலியா் சங்க வரலாறு...

TAMILNADU Govt NURSEs Association   வரலாறு ( திருமதி.க.பாப்புராஜன் அம்மையார் முன்னால்  மாநில பொதுச்செயலாளர் TGNA ,13.06.1987-ல் வெள்ளி விழா பதிப்பிலிருந்து )                                                                                                          (பாகம் 01/2016 நாள் 31.10.16 )                                                                                       என் இனிய சகோதரியே இன்னும் எத்தனை நாளம்மா ?                                                                                                                                                         அன்றொருநாள்                                                                                                              1960-ம் ஆண்டிலேயே அருமை நர்சு சமுதாய சகோதரிகளும்,சகோதரர்களும் வார்டுகளில் அங்குமிங்கும் ஓடியாடி மிகவும் கவனத்துடனும், சுறுசுறுப்புடனும் மிகுந்த கனிவுடனும் பிணியாளர்களின் துயர் நீங்க பணிபுரிகின்றனர்.                                                                                                                                                                                  அவ்வேளையிலே வார்டிற்குள் நுழைந்த மருத்துவர், அறியாமல் நடந்த சிறு பிழை கண்டு கோபங்கொள்கிறார் . நர்சுகளை நோக்கி வசைமாரிப் பொழிகின்றார். இன்முகம் கொண்ட இனம் சந்ததியினர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தாங்கள் அணிந்த சீருடையின் வெண்மை நிறத்தைப் போன்றே வெள்ளை உள்ளம் கொண்டோராய் எதனையும் கருத்தில் கொள்ளாது "பிணியாளர் சேவையே பிறப்பிளான் சேவை " என்னும் முதுமொழிக்கேற்ப தமது சேவையினைத் தொடர்கின்றனர். நாட்கள் நகர்கின்றது, நர்சுகள் சமுதாயம் தமிழகத்திலே ஒரு நசுக்கப்பட்ட சமுதாயமாகவே நடத்தப்படுகின்ற அவலநிலை தொடர்கின்றது.                                                                                                                                     எண்ணத் தொடங்கினர் அண்ணன் எட்வர்ட் அவர்களும் ,அண்ணன் பாலசுந்தரம் அவர்களும் எடுத்துரைத்தனர்.                                                                                 அவர் தம் கருத்தினை ஏன் நமக்கு (நர்சுகளுக்கு) என்று ஒரு சங்கம் தமிழகத்தில் அமைத்துக் கொள்ளக் கூடாது. ஏற்றுக் கொண்டனர் இக்கருத்தினை அருமை சகோதரர்கள் திரு. P.சீனிவாசன் மற்றும் திரு.காமாட்சிநாதன் போன்றோர்கள் திரு.சோமசுந்தரம், திரு.ராமமூர்த்தி அனைவரும் ஒன்று கூடி அருமை சங்கம் அமைக்க கருத்தொருமித்து காரியத்தில் இறங்கத் தொடங்கினர்.ஆதரித்தவர்கள் சிலருண்டு' அவர்களைக் கண்டு அஞ்சி ஓடியவர்கள் பலருண்டு, எனினும் அன்பு சகோதரர் திரு.P.சீனிவாசன் அவர்களின் அயராத உழைப்பாலும் , விடாமுயற்சியாலும் வெற்றி கண்டனர்.       மேற்கூறியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கூட்டமைப்பு ஏற்படுத்தினர் எனினும் அந்தோபரிதாபம் கூட்டமைப்பு என்னும் அங்கத்திற்கேற்ற தலைமை கிடைப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது தயங்கினோர் ஏராளம், நமக்கேன் இந்த வம்பு என்று ஒடி ஒளிந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம், எனினும் பாரதமாதாவின் பண்பான அங்கங்களில் ஒன்றான பைந்தமிழ் நாட்டினிலே புலியை முறத்தால் அடித்துத் துறத்திய மாதர் குலத்திலுதித்த மங்கையாம் திருமதி.பாஸ்கரன் அம்மையார் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று அபயகரம் கொடுத்தார்கள். என்பது அன்றைய சங்க வரலாறு.                                                                                         அன்பிற்கினிய சகோதரிகளே,சங்கம் அமைக்கப்பட்டது, அரசு அங்கீகாரம் பெற்றது. 19.01.1961ம் ஆண்டினிலே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில சங்க நிர்வாகிகள் என்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் என்றும் உருவாக்கப்பட்டு மாநாடுகள் நடத்தப்பட்டது. செயற்குழு, மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள், மாவட்டந்தோறும் நடைபெற்றது.                                                                         மாநில அளவிலான நிர்வாகிகள் கூடினர்.                                                       நர்சுகளின் சேவைத் திறன் பற்றி பேசப்பட்டது. மாநில அளவில் நர்சுகள் தங்களது கருத்துக்களைப் பரிமாரிக் கொள்கின்ற நற்பலனைப் பெற்றனர் .                                                                    செயற்குழு மற்றும் பொதுக்குழுவின்  வாயிலாக தீர்மானங்கள் நிறைவேற்றி அவ்வப்போது அரசிற்கு அனுப்பப்பட்டது.தமிழ்நாடு அரசு நர்சுகளின் சங்க கோரிக்கைகள் அவ்வப்பொழுது ஓரளவு  கவணிக்கப்பட்டு அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறிது சிறிதாக நர்சுகளின் துயர் துடைக்கப்பட்டது. எனினும் தமிழ்நாடு அரசு நர்சுகள் என்பவர்கள் ஒரு வழியில் ஓரிடத்தில் சற்று ஒதுக்கி வைக்கப்பட்டார்களே தவிர ஏனைய அரசு ஊழியர்களைப் போல் அவர்கள் முழுமையான உரிமை பெற்று தங்களுக்கு முன் நின்று அச்சுறுத்தும் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.                                                               பதவி உயர்வு என்ற ஒரு தகுதியினை நர்சுகள் பெற்றிருந்தாலும் அது ஒரு கானல் நீராகவே காட்சியளிக்கத் தொடங்கியது. தளிர் நடை போட்டு வந்த நர்சுகள் தளர்ந்த நடைபோட்டு, பின்தவழ்ந்த நடைபோட்டாலும் கூட காலங்கள் பல கடந்து நர்சாகப் பணியேற்று ஆண்டுகள் 26 ஐ எட்டிப் பிடித்தாலும் ஏனோ பதவி உயர்வு என்ற தகுதி மட்டும் கிட்ட நெருங்கவே அஞ்சுகின்றது என்ற அவலநிலை நம்மை ஆட்கொண்டது எனினும் நர்சுகளுக்கே உரிய தனித்தன்மை கொண்ட நாம் இன்னல்கள் பல இருப்பினும்  அதனை மின்னலாக மறைத்து விட்டு, இன்முகத்துடன் இனிய உலா வந்து பிணியாளர்களைப் பேணிக் காக்கும் பணியினை பாங்குடன் செய்யத் தவறியதில்லை. இது நாம் வெறும் அலங்காரத்திற்காக கூறிய வார்த்தைகளல்ல.                                                                                                          அன்றாட நமது பணி வாழ்க்கையில் கண்கூடாகக் காண்கின்ற கண்ணுக்கினிய காட்சி. அப்படியே ஆண்டுகள் பல கடந்து 26-ம் ஆண்டின் பணிக்கால இறுதியிலேயே பதவி உயர்வென்ற ஒன்று நம்மைப் பதுங்கி எட்டிப் பார்த்தாலும் அந்தோ பரிதாபம் நான் என்னவென்று எடுத்துரைப்பேன்? அன்று நர்சுகளின் தரத்திற்குக் கீழே இருந்த அரசு ஊழியர்களெல்லாம் எட்டாக் கனியாக ஏற்றம்மிகு சம்பள விகிதமெனும் நிலையில் ஊதியக் குழுக்களின் பரிந்துறையில் உயர்ந்து விட்டநேரத்தில் பத்தாண்டு பணி புரியும் நர்சுகளுக்கு ஈடாகவே 26 ஆண்டுகள் கழித்து பதவி உயர் வென்னும் எட்டாப் பழத்தைக் கொட்டாவி விட்டுப் பெற்ற நமது நர்சிங் மேற்பார்வையாளர்கள் ஊதியம் பெறுகின்ற தாழ் நிலையினைப் பெற்றோம் எனினும் என் உத்தம சகோதரிகளே.      ஊதியக்குழு பரிந்துரைப்பற்றி உங்களுக்கொன்றும்    தெரியாது , ஊதிய விகிதம் பற்றி உங்கள் உள்ளத்தில் ஓர் எண்ணமுமில்லை.                                                                                       ஏனென்றால் வெள்ளை உள்ளம் கொண்ட உங்கள் நினைவெல்லாம்  பிணியாளர் என்னும் பிள்ளைகள் கொள்ளை கொண்டு விட்டார்களே ,அவர்களைப் பேணிக்காப்பதில்   வெரும்பொழுதைக் கழிக்கப் பழகிவிட்ட உங்களுக்கு ஊதிய விகிதம் பற்றி உணர்வதற்கு நேரமெங்கே? ஏனைய அரசு ஊழியர்கலெல்லாம் விடுமுறை    எடுத்தாலும் மிகவும் அத்தியாவசியப் பணியென்று கூறி முக்கியமாக நாட்டிலே கடையெடுப்பு, ஊர்திகள் ஓட்டாமை என்ற நிலை  ஏற்பட்டாலும் கூட 4 KM நடந்தே வந்து என்னுடன் பணி செய்து கிடப்பதே என்னும் பாங்கினை கடைபிடிக்கின்றாய்., எனினும் அதே அத்தியாவசியப் பணியிலிருக்கும் நமது மருத்துவர்களுக்கு அண்மை காலமாக அளிக்கப்படுகின்ற சரிகட்டு விடுப்பு, சிறு விடுப்பு , மற்றும் வார விடுப்பு ,பணி விடுப்பு போன்ற விடுப்புகள் அளிக்கப்படும் அதே வேளையில் பெண் பணியாளராகிய நமக்கும் அதே நிலையில் புணிபுரிந்தும் இந்தச் சலுகைகள் மறுக்கப்படுவதை உணர்ந்தாயோ.?                                   ஏன்? பெண்ணாகப் பிறந்து விட்ட பேதைகளே!                                                      நாம் என்று எண்ணாத நாட்களிலே நமது துன்பங்கள் , துயரங்கள் துடைக்கப்படவேண்டுமென்று அரசிற்கு நமது சங்கத் தீர்மானங்கள் மூலமாகவும் நிர்வாகிகள் மூலமாகவும் தூதுவிடாத நேரமில்லை........ ம். ...நாம் கண்ட பலன் நீண்ட மெளனம் சங்க நிர்வாகிகளுக்கு அதிகாரிகளின்  அச்சுறுத்தல் ஏன் நமக்கு இந்த அவலநிலை சிந்தித்தோம் செயல்பட தொடங்கினோம். ஆண்டுகள் பல கடந்தும் நீண்டு கிடந்த நமது துயரங்களுக்கு வடிகால் அமைக்க விடிவு காலமே இல்லையா என்று எண்ணத் தொடங்கிய பின் தான் - நமது அணுகுமுறைகள் பற்றி ஆராய ஆரம்பித்தோம் விடை கிடைத்தது.நமக்கு விமோசனம் கிடைக்க வழி பிறந்தது .சங்கம் தழைத்தோங்க அங்கத்தினர்கள் முழு ஆதரவை நல்கினர்.மத்திய சங்கம் உயிர் பெற்று விட்டது.                                      உங்களுக்கு உறுதுணையாக நாங்கள்  இருப்போமென கிளைச் சங்கங்கள் கிளர்ந்தெழுந்தன.சங்கத்தின் அங்கத்தினர் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியது. எங்கும் உத்வேகம் ஏற்பட்டது. சங்க எழுச்சியையும் அங்கத்தினரின் ஆர்வத்தையும் .சங்க நிர்வாகிகளின் அணுகுமுறைகளையும் அறிந்து கொண்டது அரசு. எனினும் நமக்கு விடிவுகாலம் விரைவில் பிறக்குமா?   நான்காவது ஊதியக் குழு நம்மை நோக்கி வந்தது. நமது உணவுப்படி என்னும் சலுகையை சரட்டெனப் பரித்து மறுத்தது. தமிழகமெங்கும் உள்ள அனைத்து நர்சுகளையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. சங்க நிர்வாகிகள் பலவழிகளிலும் முயன்றும் பயனளிக்கவில்லை என கண்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் தோன்றி 25 ஆண்டுகளில் செய்யாத ஒரு மாபெரும் புரட்சி செய்ய ஆரம்பித்தோம். ஆம் சீருடையில் தலைநகரில் ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பிருந்து நமது அவலநிலையை அரசிற்கு வெளிக்காட்டினோம். துன்பத்திலும் ஒரு இன்பம் .உண்ணா நோன்பிருந்த வேலையிலே புரட்சித் தலைவர் .பொன்மனச் செம்மல் அவர்களின் கனவான பார்வை நம்மேல் படும் பாக்கியம் பெற்றோம். நல்ல உள்ளம் கொண்ட அன்றைய நமது சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே அவர்கள் நாம் உண்ணா நோன்பிருந்த இடத்திற்கு ஓடோடிவந்து என் அருமை சகோதரிகளே. நீங்கள் அனைவரும் ஏன் உங்களை வருத்திக் கொள்கின்றீர்கள் உங்கள் தேவையை உடனே பூர்த்தி செய்கின்றேன் எனக்கூறி உறுதியளித்தார்.                                       மரியாதைக்குரிய     சுகாதாரத்துறை செயலர் அவர்களும் நமது சங்க நிர்வாகிகளை அன்புடன் அழைத்து ஆறுதல் சொல்லி நமது குறைகளை கனிவுடன் கவனிப்பதாக வாக்களித்தார். மதிப்பிற்குரிய    மருத்துவ கல்வி இயக்குனர் அம்மையார் அவர்களும் நமது நிர்வாகிகளைப்    பரிவுடன் அழைத்துப்பேசி நமது கோரிக்கைகள் பற்றி பரிந்துரை செய்வதாக வாக்களித்தார்கள்.     என்ன ஆச்சரியம் சகோதரிகளே, உண்ணா நோன்பிருந்து எண்ணி எட்டு நாட்களில் நமது உணவுப்படி திரும்ப அளிக்கப்படுவதாகவும் , அத்துடன் நமது நீண்ட நாள் கோரிக்கையாகிய சீருடைப் படி உயர்த்தித் தரப்படுவதாகவும், அரசிடமிருந்து நமக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும் இனிய செய்தி வந்தது.                                                                             எப்படி   சகோதரிகளே எண்ணிப் பாருங்கள் ஒற்றுமையின் வலிமையை ஒருங்கிணைப்பின் உண்மையை .எனினும் இன்னும் நமது முக்கியமான குறை தீர்ந்தபாடில்லை என்ற காரணத்தால்   முச்சந்திக்கு    வரவும் முனைந்து விட்டோம். நர்சுகளின் ஊர்வலம் என்றதும் ஊரே திரண்டு விட்டதைப் போன்று சென்னை மாநகரிலே எங்கும் வெண்ணிற ஆடை வேதியர் கூட்டம் கண்டு வியக்கத் தொடங்கினர் மக்கள் செய்தியறிந்த இன்றைய மக்கள்நலவாழ்த்துறை  அமைச்சர் மாண்புமிகு.         திரு.ப.உ.சண்முகம் அவர்களும் அதே மரியாதைக்குரிய சுகாதாரத் துறைச் செயலர் அவர்களும், மதிப்பிற்குரிய மருத்துவ கல்விதுறை இயக்குனர் அவர்களும் நமது நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு    மக்கள் திலகமாம், மாதர் குலத்தை காக்க தன்னே சக்கரம் நீட்டி வந்த கார்முகிலாம் தர்மத்தின் காவலர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தும் பெரும் பாக்கியத்தை அளித்தனர்.                                                                                                                      கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களையுடைய கோமகன் நாம் அனைவரும் இன்ப அதிர்ச்சி பெறுகின்ற வகையிலே நமது கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக் கொண்டதோடு 20 ஆண்டுகள் பணி புரிந்த நர்சுகளுக்கும், நர்சிங் பயிற்சியாளர் நிலை 2 ற்கும் முறையே 1045 ரூ என்றும் 1340 ரூ என்றும் ஊதிய விகிதம் மாற்றியமைக்க உத்தரவிட்டார். எண்ணிப் பார்த்தீர்களா சகோதரிகளே இது ஏன் என்று. ஒற்றுமை , ஒருங்கிணைப்பு , மறந்து விடாதீர்கள் .சங்கம் அமைத்து 25 ஆண்டுகளில் பெற முடியாத சில சலுகைகளை தாய்குலத்தின் தானைத் தலைவர் அவர்களின் பொன்னாட்சி காலத்திலே பெற்றோம் என்றால், இது சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய நர்சுகள் சமுதாயத்தின் பொற்கால மன்றோ .                                          சங்கம் சீராக செயல்படுவது கண்டு சகிக்காத சிலர் நம்மிடையே உண்டு. அவர்கள் சங்க உணர்வை உறுப்பினர்களிடமிருந்து மங்க வைப்பதில் மிகவும் அக்கறை எடுத்து செயல்படுகின்றனர். பயிர் வளர்ந்தால் சில புற்களும் வளர்வது இயற்கைதானே? அவற்றை இனம் கண்டு களை எடுக்க வேண்டியது சங்கக்கடமை  என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விட வேண்டாம்.     நமது உரிமையை கேட்டுப் பெறுகின்ற அதே வேளையில் நமது கடமையிலும் நாம் கண்ணாயிருக்க வேண்டியது தலையாய கடமை என்பதை மனதில் கொண்டு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் நமது இன்றைய மாண்புமிகு முதல்வர் அவர்களின் கொள்கைக் கேற்ப கண்ணியம்காத்து காலந் தவறாமையைக் கடைபிடித்து கடமை ஆற்றிக் கட்டுப்பாட்டுடன் பொது நல சேவையில் ஈடுபட்டு இன்பம் காண வேண்டுகிறேன். சங்கத்தின் அங்கங்களே,சங்கம் சாதித்தது சிலவுண்டு, சங்கம் சாதிக்க வேண்டியது பலவுண்டு. எனவே குடத்தினுள் விளக்காய் இருந்த நமது சங்கம் குன்றின் மேல் இட்ட விளக்காய் விளங்கும் நிலை மாறாதிருக்க சங்கம் நமக்கு என்ன செய்தது?                                                                                                                  என்னும் வினாவை விடுத்து சங்கத்திற்கு நாம் என்ன செய்தோம் என்னும் வினாவிற்கு விடைகாண விரைந்தோடி வாருங்கள்.                                                                                                                                                         இதுவே நமது சங்கம் வெள்ளி விழா காணும் இப் பொன்னான நன்னாளில் நான் உங்களுக்களிக்கும் நல்வரவு..                                                                                     வாழ்க நம் ஒற்றுமை , வளர்க நம் சங்கம். , கடமையைச் செய்வோம் உரிமையைப் பெறுவோம்.                                                                               அன்புடன் திருமதி.க.பாப்புராஜன் , முன்னால் மாநில பொதுச் செயலர் TGNA, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் ,இருப்பு மதுரை. ( தொடரும்....)                                                                              தகவலுக்காக V.மணிமாறன் - சின்னமனூர் GH-தேனி, N.கணேசன் - ஸ்டான்லி - சென்னை-1.

Wednesday, 12 October 2016

வாகன பதிவு எண்ணை தொிந்து கொள்ள...

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.

எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.

விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:

TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை

■ நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639

● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No - 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000
18001 / 044- 28592828

● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599

● வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424

● ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

● ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445

● சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற பேரில் கொடுமைகள் புரிந்தால்: 95000 99100 ( SMS )

● மனித உரிமைகள் ஆணையம்: 044-22410377

● மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639

● போலீஸ் SMS : 9500099100

● போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS: 9840983832

● போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103

● வங்கித் திருட்டு உதவிக்கு: 98408 14100

● வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155

நன்றி- முகநூல்