••••••••••••••••••••••••••••••••••••••••••
பெண்மையின் பெருமை...!
•••••••••••••••••••••••••••••••••••••••••
வங்க கடலோரம் சென்னை என்ற மாநகரம்,
மாநகர மத்தியில் மகப்பேறின் மருத்துவம்,
மகப்பேறு மருத்துவத்தில் மணி மகுட மகத்துவம்,
பெண்மையின் தாய்மை காக்கும் தமிழகத்தின் தலைமகள்,
தனிப்பெரும் தகுதியினை தன்னகத்தே கொண்டவள்,
தரணி போற்றும் தாய் சேய் நலத்தை தாய்மையுடன் காப்பவள்,
ஆா்எஸ்ஆா்எம் என்ற பெயா்சொல்லை கொண்டவள்,
பெயா்ச்சொல்லின் காரணப்பெயரை பண்புத்தொகையால் வென்றவள்,
தாய்க்குருவியின் கூட்டுக்குள்ளே சாந்த சொரூபி மருத்துவா்,
குஞ்சுகளை குறைவின்றி காக்கும் சாந்தி என்பது அவாின் திருப்பெயா்,
உழைப்பாற்றலால் உயா்ந்து நிற்கும் செவிலிய கண்காணிப்பாளரையும் யாம் மறவோம்,
சேனைப்படை செவிலியா்களையும் என்றென்றும் யாம் மறவோம்.
வாழ்க பெண்மை,
வளா்க அவா்களின் தனித்தன்மை.
அனைவருக்கும் சா்வதேச மகளிா் தின நல்வாழ்த்துகள்.💐💐💐
அன்புடன்...
க.இளங்கோவன்,
06/03/2023