Thursday, 30 March 2023

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்:

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்: 

தப்பித்தவறி கூட இப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்!

 ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது,
மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்
நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை
1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
3,நிலையில் அமரக்கூடாது
4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,
12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது
13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது
கூடாத சில விஷயங்கள்!
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும்
மற்றும் அக்கினி, சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!
மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது,
முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது, அது மிகப்பெரிய தோஷமாகும்!

Saturday, 25 March 2023

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
https://www.facebook.com/groups/305917699863621/
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

Monday, 6 March 2023

கவிதை -பெண்மையின் பெருமை...!

••••••••••••••••••••••••••••••••••••••••••
பெண்மையின் பெருமை...!
•••••••••••••••••••••••••••••••••••••••••

வங்க கடலோரம் சென்னை என்ற மாநகரம்,

மாநகர மத்தியில் மகப்பேறின் மருத்துவம்,

மகப்பேறு மருத்துவத்தில் மணி மகுட மகத்துவம்,

பெண்மையின் தாய்மை காக்கும் தமிழகத்தின் தலைமகள்,

தனிப்பெரும் தகுதியினை தன்னகத்தே கொண்டவள்,

தரணி போற்றும் தாய் சேய் நலத்தை தாய்மையுடன் காப்பவள்,

ஆா்எஸ்ஆா்எம் என்ற பெயா்சொல்லை  கொண்டவள்,

பெயா்ச்சொல்லின் காரணப்பெயரை பண்புத்தொகையால் வென்றவள்,

தாய்க்குருவியின் கூட்டுக்குள்ளே சாந்த சொரூபி  மருத்துவா்,

குஞ்சுகளை குறைவின்றி காக்கும் சாந்தி என்பது அவாின்  திருப்பெயா்,

உழைப்பாற்றலால் உயா்ந்து நிற்கும் செவிலிய கண்காணிப்பாளரையும் யாம் மறவோம்,
சேனைப்படை செவிலியா்களையும் என்றென்றும் யாம் மறவோம்.

வாழ்க பெண்மை,
வளா்க அவா்களின் தனித்தன்மை.

அனைவருக்கும் சா்வதேச மகளிா் தின நல்வாழ்த்துகள்.💐💐💐

அன்புடன்...
க.இளங்கோவன்,
06/03/2023

Thursday, 2 March 2023

ராமனின் அதிசய பயணம் பகுதி –5

ராமனின் அதிசய பயணம் பகுதி –5 

அயோத்தியில் புறப்பட்டு, இலங்கைத் தீவுக்கு வந்து விட்டு, மீண்டும் அயோத்திக்குப் போன ராம பிரான் 5113 நாட்களுக்கு நடந்து உலக சாதனை படைத்தான். அவன் சென்ற இடமெல்லாம் புனிதமானது; அவன் தொட்டதெல்லாம் பொன் ஆனது; அவன் கண் பட்ட இடமெல்லாம் அருள் சுரந்தது. இந்தியாவில் எங்கு சென்றாலும், இது ராமர் வந்த இடம், இது பஞ்ச பாண்டவர் வந்த இடம் என்று சொல்லுவதில் வியப்பொன்றும் இல்லை.

நாநிலம் வியக்கும் வீரர் பெரு மக்கள், மாபெரும் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் நடந்து வந்தால், உலகமே வரவேற்காதா! வியக்காதா!

இதோ ராமனின் 128 மண்டகப்படிகளில் கடைசி கட்டம்; இந்த ஐந்தாவது பகுதியுடன் ராமன் பயணம் நிறைவு பெறுகிறது. அலெக்ஸாண்டர் நடக்க வில்லை; குதிரையில் வந்தான்! ராமன் நடந்தான். ஆதி சங்கரரும், ராமனைப் பின்பற்றி நடந்தார். இமயத்திலிருந்து தமிழ் இலக்கணம் எழுத தென்னகம் வந்த அகஸ்தியர், ஒரு வேளை பல்லக்குகளைப் பயன்படுத்தி இருக்கலாம். ராமனோ என்றும் பாத சாரி! உலக இலக்கியங்களில் இது போல யாரும் இல்லை; ஹோமரின் கிரேக்க கதா பாத்திரங்கள் குதிரையிலும் கப்பலிலும் சென்றனர். இந்து மத வீரகளோ உலகின் மிகப்பெரிய நாட்டை (அக்காலத்தில்) நடந்தே கடந்தனர். அவர்களால் இந்த மண் புனிதம் பெற்றதா? புனித மண் என்பதால் அவர்கள் நடந்தார்களா? சிந்திக்க வேண்டிய விஷயம்!

106.கபிஸ்தலம் (தஞ்சை வட்டம்)

ஹனுமார் தாவிச் சென்ற இடம்

107.பாபநாசம் சிவன் கோவில்

கர, தூஷண, திரிசிரஸ் என்ற பிராஹ்மண அசுரர்கள்ளைக் கொன்ற பாபம் நீங்க சிவனை ராமன் வழிபட்ட இடம்

108.கோடிக்கரை (வேதாரண்யம்)

முதலில் ராமனிடம் எஞ்சினீயர் நீலன் கொடுத்த ப்ளூப்ரிண்ட் படி இங்கிருந்து அணை கட்ட திட்டமிட்டனர். பின்னர் ராமன் அந்த திட்டத்தைக் கைவிட்டு தனுஷ்கோடி சென்றான். அவன் ஒரு ஆலமரத்தடியில் இருந்து ஆலோசானை செய்கையில் பறவைகள் காச்சு மூச்சென்று கத்தின ராமன் உஷ் என்று சொன்னவுடன் அவை அதிசயமாக அடங்கிவிட்டன; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடலில் இது பற்றியுள்ளது. அகநானூறு 70ம் பாடலில் மேல் விவரம் காண்க)

109.உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில்

ஸீதா தேவியை மீட்கும் விஷயத்தில் வெற்றி கிடைக்கப் பிரார்த்தித்த இடம்

110.தேவிப்பட்டணம்/ நவபாஷாணம்

இங்கு ராமர் நவக்ரஹங்களை வழிபட்டார்.

111.திருப்புள்ளானி / தர்ப சயனம்

கடல் பயணத்தில் வெற்றி பெற ராமன் வருண பகவானை பிரார்த்தித்த இடம்

112.புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோவில்

ஜடாயுவுக்குத் தர்ப்பணம் செய்த இடம்; வடக்கிலும் இப்படி ஒரு ஸ்தலம் உள்ளது. ஆண்டு தோறும் திதி செய்யப்படுவதால் இரண்டும் சரியாக இருக்கலாம்.

113.சேதுக்கரை

இங்கு இலங்கைக்கான பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார் ராமபிரான்

114.தங்கச்சிமடம் வில்லூன்றி தீர்த்தம்

இங்கே வானரப் படைகளுக்காக ராமர் வில் மூலம் ஒரு ஊற்றை உண்டாக்கினார்.

115.கந்தமாதன் பர்வத, ராமேஸ்வரம்

இங்கிருந்து ராமர் கடலின் விஸ்தீரணததைக் கண்டார்.

116.அக்னி தீர்த்தம்

ராமர் குளித்த புனித நீர்நிலை

117.ராமேஸ்வரம் கோவில்

ராமர் பூஜித்த சிவலிங்கம்

118.தனுஷ்கோடி

ராவணனை வென்ற பின்னர்,  விபீஷணன் வேண்டுகோளின் பேரில், பாலத்தைப் பிரித்த இடம்

119.திரு அப்பனுர்- ராமர் பாலம் மண்

பாலம் கட்ட ராமர் 14 புனித இடங்களிலிருந்து மண் எடுக்க வேண்டும் என்றும் அதில் அப்பனூர் ஒரு இடம் என்றும் தல புராணம் சொல்லும். ராமர் கொண்டுவந்த 2 யானைகள் இறக்க்வே அவைகளை இங்கு புதைத்ததாகவும் அங்கே இப்பொழுது கண்மாய்கள் இருப்பதகவும் மக்கள் நம்புகின்றனர். இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உளது

மீண்டும் அயோத்தி சென்றபோது

120.தில்லை விளாகம் கோதண்டராமர் கோவில்

ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமர் வந்த இடம்.திருவாரூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது (சிதம்பரத்தையும் இப்பெயரால் அழைப்பர்; இது வேறு தலம்).

இங்கு ராம சரம் என்று பொறிக்கப்பட்ட அம்புடன் கூடிய அழகாக்ன ராம விக்ரஹம் உள்ளது. பங்குனி மாத ராம நவமி உற்சவத்தில் 11ஆவது நாளன்று மான் வஹனத்தில் ராமர் பவனி வருவது ஒரு அரிய காட்சி; வேறெங்கும் இல்லாத புதுமை!

121.நம்புநாயகி அம்மன் கோவில், ராமேஸ்வரம் தீவு

முன்னர் தனுஷ்கோடியில் இருந்த கோவில்  கடல் உள்ளே வர வர, இடம் மாற்றப்பட்டு இப்போதுள்ள இடத்துக்கு வந்தது; இங்கு ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததாக தல புராணம் சொல்லும்.

122.காஞ்சி விஜயராகவப் பெருமாள் கோவில் (திருப்புட்குழி)

இங்குள்ள ஜடாயு புஷ்கரணியில் ராமர் குளித்ததாக அதீகம்

123.வடுவூர் கோதண்டராமர் கோவில்

ராமன் இலங்கைக்குச் செல்லும் போதும் அயோத்திக்குத் திரும்பும் போதும் இங்கு வந்ததாகச் சொல்லுவர். இரண்டும் சாத்தியமே

124.பதர்ஷா (நந்தி க்ராமம)

ராமனின் புஷ்பக விமானத்தைக் கண்டு மக்கள் ஆரவாரம், கூதுகலம் அடைந்த இடம்

125.பரத குண்டம்

ராமரும் பரதனும் கட்டித் தழுவி ஆனனதம் அடைந்த இடம்

126.ஜடா குண்டம்

ராமர் முதலில் தனது தம்பிகளின் முடிகளைச் சுத்தம் செய்து பின்னர் தனது தலை முடியையும் அலம்பிய குளம்.

வால்மீகி ராமாயணம், ஆங்காங்குள்ள தல புராணங்கள் முதலியவற்றின் அடிப்படையில் டாக்டர் ராமாவ்தார் ஷர்மா தொகுத்த பட்டியல் இது; தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் நான் சில இடங்களை மாற்றியுள்ளேன். இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு பட்டியலை மேலும் நீட்டலாம். 5113 நாட்களில் ராம லக்ஷ்மணர்கள் இன்னும் பல இடங்களுக்குச் சென்றிருப்பது சாத்தியமே.

ராமன் நாமம் வாழ்க; ராமன் புகழ் வெல்க!
                      -முற்றும்-