Saturday, 25 February 2023

இறைவனின் தந்திரம்

••••••••••••••••••••••••••••••••••
இறைவனின் தந்திரம்
••••••••••••••••••••••••••••••••••

தோன்றலும்,தொடங்களும் அவனின் அருட்கொடையா?

வாழ்வதும்,வளா்வதும் அவனின் முதற்கொடையா?

வீழ்வதும்,தாழ்வதும் அவனின் அருட்தடையா?

வாழ்ந்தவன் தாழ்வது அவனின் வினைக்கொடையா?

தாழ்ந்தவன் மீழ்வது அவனின் இடைக்கொடையா?

முடிவதும்,மடிவதும் அவனின் கடைக்கொடையா?

மாண்டு மடிந்ததும் மடி சோ்ப்பது அவனின் இருட்கொடையா?
 அடைகாத்து,மடைதிறந்து,கொடையளித்து,தடையளித்து,ஔியேற்றி,ஆடவைத்து அடங்க வைக்கும் உம் தந்திரம் இராஜதந்திரமய்யா.! இறைவா...நீா் மட்டும் வாழ்க பலயுகம்.

கவிஞா். க.இளங்கோவன்