Wednesday, 27 April 2022

நன்மை தரும் நவக்கிரகங்கள்​

நன்மை தரும் நவக்கிரகங்கள்​

நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன.

சூரியன் - ஆரோக்கியம்,

தலைமைப் பதவி

சந்திரன் - கீர்த்தி, சிந்தனை சக்தி

அங்காரகன் - செல்வம், வீரம்

புதன் - அறிவு, வெளிநாட்டு

யோகம்,

நகைச்சுவை உணர்வு

வியாழன் - நன்மதிப்பு, போதிக்கும்

ஆற்றல்,

சுக்ரன் - அழகு, அந்தஸ்து,

நல்வாழ்க்கை

சனி - சந்தோஷம்,

ஆயுள் விருத்தி

ராகு - பகைவர் பயம் நீங்குதல்,

பணவரவு அதிகரித்தல்

கேது - குல அபிவிருத்தி

Sunday, 17 April 2022

30+40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிடவேண்டிய வாழ்க்கையின் சுவாரசியமான 10விஷயங்கள்!...

*30+40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிடவேண்டிய வாழ்க்கையின் சுவாரசியமான 10விஷயங்கள்!...*

#அனுபவம்:- 1
30 வயதிற்கு மேல் கட்டாயம் திருமணம் முடித்திருக்க வேண்டும், தாய் தந்தையின் உதவியை நாடியோ அல்லது மனைவி, உடன் பிறந்தோர், சொந்தக்காரர், போன்ற யாரிடமும் உங்கள் சொந்த செலவிற்காக நிற்க கூடாது, உங்களுக்கு என ஒரு வருமானம் தரும் தொழில், வேலையோ கட்டாயம் இருக்கவேண்டும், 30 வயதிற்கு மேல் நிலையான வருமானம் வேலையும் இல்லையென்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள், அது உங்களை மேலும் துன்பப்படச்செய்யும்...

#அனுபவம்:- 2
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் வயசு போனால் திரும்ப வராது, கூடவே மகிழ்ச்சியும் போய்விடும், 40 வயதிற்குள் உலகம் வேண்டாம், நம்ம இந்தியாவிற்குள்... நீங்கள் சுற்றுலா மேற்கொள்ள வேண்டும், மனைவி மக்களுடன் சென்றால் இன்னும் ஆனந்தமே... புது புது இடம், இனம், மக்கள், மொழி, என புதிய கலாச்சாரம் உங்களை ஆச்சரியப்பட செய்யும், இவ்வுலகில் இப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்...

#அனுபவம்:- 3
ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 40 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும், இங்கே யாருதான் பிடித்த வேலையை செய்கிறார்கள் என்கிறீர்களா? நாம் செய்யும் வேலையில் ஒரு நேர்மை, ஒரு நியாயம், இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

#அனுபவம்:- 4
தோல்வி!
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான். ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள அனுபவமின்றி தவிக்கும் நிலை ஏற்படலாம்...

#அனுபவம்:- 5
முதலீடு!
சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை கொண்டு கூட வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும், அல்லது யாருக்கும் தெரியாமல் வங்கியில் சேர்த்து வைப்பதும், நல்லது நீங்கள் பணம் சேமிக்கிறீர்கள் என்று உங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தால் அதற்கு என ஏதாவது  புதிதாக முளைக்கும் அதனால்தான் வருமானத்தின் கால் பங்கை சேமித்து வைப்பின்... அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்கு உதவிடும்...

#அனுபவம்:-6
30 வயதிற்குள் நேர்மையான மற்றும் உண்மையான நட்பை தக்க வைத்துக்கொள்ளுங்க,
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் உங்களுக்கு தோள் கொடுக்க ஓரு தோழமை வேண்டும், 40 வயது வரை உங்களுக்கு நண்பர்களே இல்லையென்றால் உங்கள் குடும்பத்தினரை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் வேற வழியே இல்லை...

#அனுபவம்:- 7
பிடிக்காவிடில் பிரிவு!
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா? வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.

#அனுபவம்:- 8
சேமிப்பு
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.

#அனுபவம்:- 9
கைதேர்ந்தவர்!
நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும், அதில்தான் உங்களின் (கெத்து) மதிப்பு அடங்கியிருக்கிறது...

#அனுபவம்:- 10
நீங்கள் நீங்களாகவே இருங்கள்! 30 வயது வரை எப்படி இருந்தீரோ! 40 வயதிலும் அப்படியே இரும்... இந்த சமூகம் உங்களை நன்கு கவனிக்க கூடியது, மற்றவர்களுக்காக, அல்லது பணத்திற்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டால், இருக்கும் மரியாதையும் போகுமே தவிர உங்களுக்காக யாரும் சிலை வைக்க போவதில்லை, ஆதலால் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

"நிச்சயமாக துன்பத்தில்தான் இன்பம் இருக்கிறது, பிரச்சினையையும், துன்பமும் உங்களுக்கு மட்டுமல்ல... மேற்கூறிய யாவும் 30 வயதிலிருந்து 40 வயதிற்குள் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய உங்கள் வாழ்க்கையின் கட்டாயமாகும், பணம் மட்டுமே சந்தோஷத்தை ஒருநாளும் கொடுக்காது, பணத்தால் கிடைக்கும் சந்தோஷம் நீண்ட நாளும் நிலைக்காது, நாம் செய்யும் செயலும், நமது குடும்பமும், சுற்றும் சுற்றியுள்ள நட்பும், ஆகச்சிறந்த நமக்கு வேண்டிய மகிழ்ச்சியை இவைகளும் கொடுக்கும்."...

*🍃Sri Yoga & Naturopathy*🍃

*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp  9952133415*

Friday, 8 April 2022

கவிதை-முன்னாள் அமைச்சருக்கு

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நெஞ்சிருக்கும்வரை தங்களின் நினைவிருக்கும்,

உயிருள்ளவரை தங்கள் உதவிகளின் உணா்விருக்கும்.

உலகில் நானுள்ளவரை  முக்குல உறவே அண்ணா உம் நினைவிருக்கும்,

உம்  அசைவுகள் யாவும் என் எண்ண ஓட்டத்தை என்றும் நிறைந்திருக்கும்,

உம்மீது எங்களுக்குள்ள அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்,

உன் மருவருகையை எம் விழிகள் வழியெங்கும் வைத்து காத்திருக்கும்,

உம் பிறந்தநாளாம் இன்று உம் தங்கை வாழ்த்தின் வருகை சற்று சோா்ந்திருக்குமே தவிர ஓய்ந்திராது.

இன்று நீவிா் பெற்ற வாழ்த்து மழையின் முடிவில் வானவில்லாய் என் வாழ்த்துரை.

வாழ்க வளமுடன் அண்ணா.💐💐💐

அன்புடன்...

K.வளா்மதி,
மாநில பொதுச்செயலாளா்,
தமிழ்நாடுஅரசு நா்சுகள் சங்கம்.

Thursday, 7 April 2022

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.