♥ விடியலுக்கு முன் விளக்கேற்றி வழிபட்டு வாழ்வில் விடியலை பெறுவோம். (தொடர்ச்சி) ♥.
♥ பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணிக்குள் தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும்.
♥ நெய் அல்லது நல்லெண்ணெய் பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி மட்டுமே வீட்டில் தீபம் ஏற்ற உபயோக படுத்த வேண்டும். பல எண்ணெய்களை கலந்தோ, நெய்யுடன் எண்ணெய் கலந்தோ, கலர் துணி திரி, நூல் திரி போட்டோ வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது; தேவைப்பட்டால் அப்படி கோவில்களில் மட்டுமே தீபம் ஏற்றலாம்.
♥ கோவில்களில் எள்ளை எரிக்கக்கூடாது. சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள்ளை படையல்போல வைத்துவிட வேண்டும்.
♥ கோவில்களில் கடலை எண்ணெயில் தீபம் ஏற்றக்கூடாது. நெய் மற்றும் சில எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். நாம் தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு ஏற்றபடி நமக்குப் பலன் கிடைக்கும்.
♥ நல்லெண்ணையில் தீபம் ஏற்றினால்…
♥ நல்லெண்ணை தீபம் எல்லா தெய்வங்களுக்கும் ஏற்றது. நல்லெண்ணை தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டால் இல்லத்தில் நன்மைகள் பெருகும்.(வீட்டிலும், கோவிலிலும் இந்த தீபம் ஏற்றலாம்.)
♥ நெய்யில் தீபம் ஏற்றினால்…
♥ நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது. நெய் தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதோடு, இல்லத்தில் நன்மைகள் பெருகும்.(வீட்டிலும், கோவிலிலும் இந்த தீபம் ஏற்றலாம்.)
♥ விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் .!
♥ விளக்கெண்ணெய் தீபம் தேக நலம் தரும். புகழ் ஓங்கும். நல்ல நட்பு வாய்க்கப் பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கச் செய்யும். சுகங்கள் பெருகும். சுற்றத்தாரும் சுகம் அடைவர். இல்லற இன்பம் கிட்டும். (கோவிலில் மட்டும் இந்த தீபம் ஏற்றலாம்.)
♥ மூன்று எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் .!
♥ வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றினால் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மைகள் வந்து சேரும். திருஷ்டி விலகும். செய்வினை கோளாறுகள் மட்டுப்படும். (கோவிலில் மட்டும் இந்த தீபம் ஏற்றலாம்.)
♥ செய்வினை கோளாறுகளை முற்றிலுமாக நீக்க, 7 எலுமிச்சம்பழங்களை (கோவில் கொடி மரத்துக்கு முன் சூலம் இல்லாவிட்டால் 4 எலுமிச்சம்பழங்கள் போதும்.) வீட்டிலுள்ள அனைவருக்கும் திருஷ்டி சுற்றுவது போல சுற்றி எடுத்துக்கொண்டு குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு செல்லுங்கள். காளியம்மன் அல்லது அதர்வண காளிஅம்மனுக்கு அமாவாசை தினத்தில் காலை 6 மணிக்கு முன்பாகவே கோவில் வளாகத்துக்குள் சக்கரை பொங்கல் வைக்க ஆரம்பித்து விடலாம். அமாவாசை தினத்தில் காலை 6 மணி முதல் 7- 30 மணிக்குள்ளாக, கருவறையில் இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது சேலை அணிவித்து, அம்மன் கையில் 1 எலுமிச்சம்பழம் வைத்து, கருவறையில் இருக்கும் அம்மனின் சூலத்தில் மூன்று எலுமிச்சம்பழங்களை குத்திவிட்டு, புது மண்பானை புது கரண்டி உபயோகித்து செய்த சக்கரை பொங்கல், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு படையல் செய்து தூப, தீப ஆராதனையுடன் வணங்கி உங்கள் வேண்டுதலை சொல்ல வேண்டும். சக்கரை பொங்கல் பிரசாதத்தை நீங்களோ உங்களை சேர்ந்தவர்களோ சாப்பிடக்கூடாது. பொங்கலை பசுமாடு அல்லது பறவைகள் சாப்பிட வைத்துவிடுங்கள். அவை சாப்பிட ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டாம். பொங்கல் செய்ய உபயோகித்த புது மண்பானை புது கரண்டி பொங்கல் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு ஆகிய அனைத்தையும் கோவிலிலேயே விட்டுவிட்டு, கோவிலை மூன்று முறை சுற்றி வந்து கொடி மரத்தை வணங்கி கொடி மரத்துக்கு முன் சூலம் இருந்தால் அதில் மூன்று எலுமிச்சம்பழங்களை குத்திவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு போகவேண்டும்; இடையில் யார் அழைத்ததாலும், எந்த தடை ஏற்பட்டாலும், நிற்கவோ திருப்பி பார்க்கவோ கூடாது.
♥ ஐவகை எண்ணெய்களையும் கலந்து தீபம் ஏற்றினால்.!
♥ நெய், எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்), விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் பூஜை செய்தால் அம்பிகையின் அருள் தட்டாமல் கிட்டும். சகல நலன்களும் பெறலாம். (கோவிலில் மட்டும் இந்த தீபம் ஏற்றலாம்.)
♥ தீபம் ஏற்றும் திசை கிடைக்கும் பலன்கள.!
♥ கிழக்கு திசை நோக்கி தீபமேற்றினால் வாழ்வின் அனைத்துத் துன்பங்களும் தீரும்.
♥ மேற்கு திசை நோக்கி தீபமேற்றினால் கடன் தொல்லை தீரும், சனீஸ்வரரால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும், வீட்டில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அகலும், குடும்ப ஒற்றுமை கூடும்.
♥ வடக்கு திசை நோக்கி தீபமேற்றினால் செல்வம் பெருகும், திருமணத் தடைகள் அகலும், மங்கள காரியங்கள் நடைபெறும்.
♥ தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது.
♥ தீபம் ஏற்றும் முகங்களும் பலன்களும்…
♥ ஒருமுகம் கொண்ட தீபம் ஏற்றினால், வாழ்வில் மத்திமமான பலன் ஏற்படும்.
♥ இரண்டு முக தீபத்தால், குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
♥ மும்முக தீபம், புத்திர சுகம் தரும்.
♥ நான்கு முக தீபம் பசு, பூமியால் லாபம் கிட்டும்.
♥ ஐந்து முக தீபம் செல்வவளம் மலையெனப் பெருகும். புண்ணியங்கள் பெருகும். ஐந்துமுகத் திரி போட்டு தீபமேற்றுவது மிக நல்லது.
♥ தீபம் ஏற்றும் திரியும் பலனும்…
♥ பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
♥ வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் பெருக்கும்.
♥ புதிய மஞ்சள் பருத்தி துணி, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களிலிருந்து விடுபட உதவும்.
♥ புதிய சிவப்பு பருத்தி துணி திருமணம் மற்றும் குழந்தை பெறும் தடைகளை நீக்கி மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவுகின்றது.!
♥ முற்பிறவி வினைப் பயன்கள் தொலைய, செல்வவளம் பெருக தாமரைத் தண்டு நார் திரியில் தீபம் ஏற்றலாம்.
♥ மழலை வரம் வேண்டுவோர் வாழை நார் திரியில் தீபம் ஏற்றலாம். வாழை நார் திரியில் தீபம் குற்றங்களையும், ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது
♥ தெய்வங்களுக்கு ஏற்ற எண்ணெய்கள்.!
♥ மகாலட்சுமியை நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
♥ நாராயணனுக்கு நல்லெண்ணெயையும் இலுப்ப எண் ணெயையும் கலந்து தீபம் ஏற்றி வழி படவேண்டும்.
♥ விநாயகரை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
♥ அம்பிகையை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.
♥ அனைத்து தெய்வங்களையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.