Monday, 21 February 2022

விளக்கேற்றும் முறை

♥ விடியலுக்கு முன் விளக்கேற்றி வழிபட்டு வாழ்வில் விடியலை பெறுவோம்.  (தொடர்ச்சி) ♥.

               ♥ பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணிக்குள்  தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும்.
               ♥ நெய்  அல்லது  நல்லெண்ணெய் பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி   மட்டுமே வீட்டில்  தீபம்  ஏற்ற  உபயோக படுத்த வேண்டும். பல எண்ணெய்களை கலந்தோ, நெய்யுடன் எண்ணெய் கலந்தோ, கலர் துணி திரி, நூல் திரி போட்டோ வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது; தேவைப்பட்டால் அப்படி கோவில்களில் மட்டுமே தீபம் ஏற்றலாம்.
               ♥ கோவில்களில்  எள்ளை எரிக்கக்கூடாது.  சனீஸ்வரனுக்கு  நல்லெண்ணெய்   தீபம்  ஏற்றி,  எள்ளை  படையல்போல  வைத்துவிட  வேண்டும்.
               ♥ கோவில்களில்   கடலை எண்ணெயில்  தீபம் ஏற்றக்கூடாது.   நெய் மற்றும் சில எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். நாம் தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு ஏற்றபடி நமக்குப் பலன் கிடைக்கும்.
♥ நல்லெண்ணையில்  தீபம் ஏற்றினால்…
               ♥ நல்லெண்ணை  தீபம் எல்லா  தெய்வங்களுக்கும்  ஏற்றது. நல்லெண்ணை தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டால்  இல்லத்தில் நன்மைகள் பெருகும்.(வீட்டிலும், கோவிலிலும் இந்த  தீபம்  ஏற்றலாம்.)
♥ நெய்யில் தீபம் ஏற்றினால்…
               ♥ நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது. நெய் தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதோடு, இல்லத்தில் நன்மைகள் பெருகும்.(வீட்டிலும், கோவிலிலும் இந்த  தீபம்  ஏற்றலாம்.)
♥ விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் .!
               ♥ விளக்கெண்ணெய் தீபம் தேக நலம் தரும். புகழ் ஓங்கும். நல்ல நட்பு வாய்க்கப் பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கச் செய்யும். சுகங்கள் பெருகும். சுற்றத்தாரும் சுகம் அடைவர். இல்லற இன்பம் கிட்டும்.  (கோவிலில்  மட்டும்   இந்த  தீபம்  ஏற்றலாம்.)
♥ மூன்று  எண்ணெய்  கலந்து  தீபம் ஏற்றினால் .!
               ♥ வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றினால் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மைகள் வந்து சேரும்.  திருஷ்டி விலகும். செய்வினை  கோளாறுகள்  மட்டுப்படும்.  (கோவிலில்  மட்டும்   இந்த  தீபம்  ஏற்றலாம்.)
               ♥ செய்வினை  கோளாறுகளை  முற்றிலுமாக  நீக்க,   7  எலுமிச்சம்பழங்களை  (கோவில்  கொடி மரத்துக்கு  முன்  சூலம்  இல்லாவிட்டால்   4  எலுமிச்சம்பழங்கள்  போதும்.)   வீட்டிலுள்ள  அனைவருக்கும்   திருஷ்டி  சுற்றுவது  போல  சுற்றி  எடுத்துக்கொண்டு  குடும்பத்தினர்  அனைவரும்   கோவிலுக்கு  செல்லுங்கள்.   காளியம்மன்   அல்லது   அதர்வண காளிஅம்மனுக்கு   அமாவாசை  தினத்தில்  காலை  6 மணிக்கு   முன்பாகவே  கோவில்  வளாகத்துக்குள்   சக்கரை பொங்கல்  வைக்க  ஆரம்பித்து  விடலாம்.    அமாவாசை  தினத்தில்  காலை  6 மணி முதல்   7- 30 மணிக்குள்ளாக, கருவறையில்  இருக்கும்    அம்மனுக்கு  அபிஷேகம்  செய்து,   புது  சேலை  அணிவித்து,  அம்மன்  கையில்  1  எலுமிச்சம்பழம்   வைத்து,  கருவறையில்  இருக்கும்  அம்மனின்  சூலத்தில்   மூன்று  எலுமிச்சம்பழங்களை குத்திவிட்டு,   புது  மண்பானை  புது  கரண்டி  உபயோகித்து செய்த   சக்கரை பொங்கல், தேங்காய்,  பழம்,  வெற்றிலை பாக்கு   படையல்   செய்து  தூப, தீப    ஆராதனையுடன்  வணங்கி   உங்கள் வேண்டுதலை  சொல்ல   வேண்டும்.  சக்கரை பொங்கல்  பிரசாதத்தை  நீங்களோ  உங்களை  சேர்ந்தவர்களோ  சாப்பிடக்கூடாது.  பொங்கலை   பசுமாடு  அல்லது  பறவைகள்   சாப்பிட  வைத்துவிடுங்கள்.  அவை  சாப்பிட  ஆரம்பிக்கும்  வரை  காத்திருக்க  வேண்டாம்.   பொங்கல்  செய்ய  உபயோகித்த    புது  மண்பானை  புது  கரண்டி பொங்கல்  தேங்காய்  பழம்  வெற்றிலை பாக்கு  ஆகிய  அனைத்தையும்  கோவிலிலேயே  விட்டுவிட்டு,  கோவிலை  மூன்று முறை  சுற்றி  வந்து  கொடி மரத்தை வணங்கி   கொடி மரத்துக்கு  முன்  சூலம்  இருந்தால்  அதில் மூன்று  எலுமிச்சம்பழங்களை குத்திவிட்டு திரும்பி  பார்க்காமல்  வீட்டுக்கு  போகவேண்டும்; இடையில் யார்  அழைத்ததாலும்,  எந்த  தடை  ஏற்பட்டாலும்,   நிற்கவோ  திருப்பி  பார்க்கவோ  கூடாது. 
♥ ஐவகை எண்ணெய்களையும் கலந்து தீபம் ஏற்றினால்.!
               ♥ நெய்,  எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்), விளக்கெண்ணெய்,  வேப்ப எண்ணெய்,  இலுப்பை எண்ணெய் போன்ற ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் பூஜை செய்தால் அம்பிகையின் அருள் தட்டாமல் கிட்டும். சகல நலன்களும் பெறலாம்.  (கோவிலில்  மட்டும்   இந்த  தீபம்  ஏற்றலாம்.)
♥ தீபம் ஏற்றும் திசை  கிடைக்கும் பலன்கள.!
               ♥ கிழக்கு திசை நோக்கி தீபமேற்றினால் வாழ்வின் அனைத்துத் துன்பங்களும் தீரும்.
               ♥ மேற்கு திசை நோக்கி தீபமேற்றினால் கடன் தொல்லை தீரும், சனீஸ்வரரால்   ஏற்படும்   கஷ்டங்கள்  குறையும்,   வீட்டில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அகலும், குடும்ப ஒற்றுமை கூடும்.
               ♥ வடக்கு திசை நோக்கி தீபமேற்றினால் செல்வம் பெருகும், திருமணத் தடைகள் அகலும், மங்கள காரியங்கள் நடைபெறும்.
               ♥ தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது.
♥ தீபம் ஏற்றும் முகங்களும் பலன்களும்…
               ♥ ஒருமுகம் கொண்ட தீபம் ஏற்றினால், வாழ்வில் மத்திமமான பலன் ஏற்படும்.
               ♥ இரண்டு முக தீபத்தால், குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
               ♥ மும்முக தீபம், புத்திர சுகம் தரும்.
               ♥ நான்கு முக தீபம் பசு, பூமியால் லாபம் கிட்டும்.
               ♥ ஐந்து முக தீபம் செல்வவளம் மலையெனப் பெருகும். புண்ணியங்கள் பெருகும்.  ஐந்துமுகத் திரி போட்டு தீபமேற்றுவது மிக நல்லது.
♥ தீபம் ஏற்றும் திரியும் பலனும்…
               ♥ பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தை  தரும். 
               ♥ வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் பெருக்கும்.
               ♥ புதிய மஞ்சள் பருத்தி துணி, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களிலிருந்து விடுபட  உதவும்.
               ♥ புதிய சிவப்பு பருத்தி துணி திருமணம் மற்றும் குழந்தை பெறும் தடைகளை நீக்கி மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவுகின்றது.!
               ♥ முற்பிறவி  வினைப் பயன்கள் தொலைய, செல்வவளம் பெருக தாமரைத் தண்டு நார்  திரியில்  தீபம் ஏற்றலாம்.
               ♥ மழலை வரம் வேண்டுவோர் வாழை  நார்  திரியில்  தீபம் ஏற்றலாம்.  வாழை  நார்  திரியில்  தீபம்   குற்றங்களையும், ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது
♥ தெய்வங்களுக்கு ஏற்ற எண்ணெய்கள்.!
               ♥ மகாலட்சுமியை நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
               ♥ நாராயணனுக்கு நல்லெண்ணெயையும் இலுப்ப எண் ணெயையும் கலந்து தீபம் ஏற்றி வழி படவேண்டும்.
               ♥ விநாயகரை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
               ♥ அம்பிகையை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.
               ♥ அனைத்து தெய்வங்களையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

Sunday, 20 February 2022

பழனி முருகன் இரகசியம்

🌴🌴🌴

*பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...*

*ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:*

உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை

கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!

அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.

போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.

லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!

அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.

மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.
இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது.

அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள். கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.

இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.

அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.

தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்
பட்டதாகக் கூறப்படுகிறது.

கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.

மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.

அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.

இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!

🙏🙏🙏

Saturday, 12 February 2022

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*

*🎀நலம் உடன் வாழ்வோம்.*..

💎💎💎💎💎💎💎
  *"ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன் படட்டுமே"*

குலதெய்வ வழிபாட்டின் பலன்கள்

🙏🏼🔥#குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. 🙏🏼

🔥#குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தன் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.

#பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.

#உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையோ தங்கள் வசதி ஏற்ப வருடம் ஒரு  முறையோ  கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.

மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.

🙏🏼🔥#உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும் அவரவர் சம்ப்ரதாயம் ஏற்ப பூஜை செய்யலாம் .இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

#குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.🙏🏼

🔥#இந்த பதிவின் நோக்கம்  தங்கள் வாழ்கையில் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று நல்ல என்னத்தில் தான். செய்கிறேன்,ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம்
                  *ஓம் நமசிவாய*