Wednesday, 29 December 2021

வெந்தயத்தின் மகிமை

மனிதர்களை சாகவிடாமல் காப்பாற்றும் வெந்தயம்! வெளியானது புதிய ஆய்வு!!

June 23, 2021 

மனிதர்களை இறப்பிலிருந்து காப்பாற்றும் அபார சக்தி வெந்தயத்திற்கு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இதயத்தை வலுப்படுத்தும் தன்மை வெந்தயத்திலுள்ளஒருவித வேதிப்பொருளில் காணப்படுவதனால் மனிதர்களை தொற்றா உயிர்வழி நோய்களிலிருந்து காத்து மரணத்தை தவிர்க் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெந்தயத்திலுள்ள ஏனைய அற்புதங்களைக் காண்போம், தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.இருதயம் சீராக இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. கண் பார்வை தெளிவடைகிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது. ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.வெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் அந்த நீரைப் பருகினால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைவடைவதாகவும் மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Sunday, 19 December 2021

இயற்கை உணவு / ஆரோக்கிய சமையல் / அடுப்பில்லா சமையல்

இயற்கை உணவு / ஆரோக்கிய சமையல் / அடுப்பில்லா சமையல் முகநூல் குழு உறுப்பினர்களுக்ககாக உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம் , தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு இயற்கை வாழ்வியல் முகாம்

🌰 இயற்கை உணவு மற்றும் பழச்சாறுகள் மூலம் உடல் புத்துணர்ச்சி ( Rejuvenation ) மற்றும் கழிவு நீக்கம் பயிற்சி ( Detox )

🍍 இயற்கை மருத்துவர் ஆலோசனைகள்

🍇 ( யோகா Yoga ) எளிமையான உடற்பயிற்சி, ஆசனங்கள், கிரியா, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் பயிற்சிகள்.

🥜 மண் குளியல், வாழையிலை குளியல் ( அல்லது) நீராவி குளியல்.

🍉 மூ.வ.அப்பன் ஐயா, மற்றும் இயற்கை வாழ்வியல் ஆலோசகர்கள் தலைமையில் இரண்டு சிறப்பு கருத்தரங்குகள்.

🥝 இயற்கை சூழலில் சுற்றுலா ( மலை ஏற்றம் / நடை பயிற்சி )

🍌 பகிர்தல் முறையில் தங்குமிடம்.

உடல் புத்துணர்சி மற்றும் கழிவு நீக்கம் முறைகளின் விரிவான உணவு மற்றும் யோகா அட்டவனை.

காலை 6.15 AM - சுக்கு மல்லி காபி

காலை 6.30 ~ 8.00 AM - யோகா
( எளிமையான உடற்பயிற்சி, ஆசனங்கள், மூச்சு பயிற்சி, கிரியா மற்றும் தியானம்)

காலை - 8.00AM - மூலிகை சாறு

காலை - 9.30 AM - பார்லி / இஞ்சி பூண்டு சாறு / பூசணி மோர்

காலை 11.00 AM - இயற்கை உணவு

~ இனிப்பு அவல்
~ கார அவல்
~ சட்ணி
~ காய்கறி சாலட்
~ வாழைப்பழம்

மதியம் 1.00PM - பழச்சாறு அல்லது காய்கறி சூப்

மதியம் 2.30PM - ராகி கூழ் அல்லது எலுமிச்சை சாறு

மதியம் 4.00 PM - பழச்சாறு / பார்லி / வெந்தய சாறு

காலை 4.30 ~ 5.30 PM - யோகா
( எளிமையான உடற்பயிற்சி, ஆசனங்கள், மூச்சு பயிற்சி, கிரியா மற்றும் தியானம்)

மாலை 5.30PM - சுக்கு மல்லி / நெல்லிக்காய் சாறு / பார்லி

இரவு 7.00PM - பழ உணவு
~ தேங்காய்
~ வாழைப்பழம்
~ பேரிச்சை
~ நான்கு வகை பருவ கால பழங்கள்
( பப்பாளி / அண்ணாசி / கொய்யா / சப்போட்டா / பன்னீர் திராட்சை / தர்பூசணி / மாதுளை )
~ முளை கட்டிய தாணியங்கள்
~ பொரிஉடன் ( வெங்காயம், கேரட், தக்காளி )

Friday, 17 December 2021

Who is your life partner ?

In Bagvad Gita lord Sri KRISHNA Says
Who is your life partner ?
Mom ?
Dad ?
Wife ?
Son ? 
Husband ?
Daughter ?
Friends...?
Not at all !
Your real life partner is Your Body.
Once your body stops responding no one is with you.
You and your body stay together from Birth till Death.
What you do to your body is your responsibility and that will come back to You.
The more you care
for your body, the more your body will care for You.
What you eat, What you do for being Fit, how you deal with stress, how much rest you give to it; will decide how your body gonna respond.
Remember your body is the only permanent address where You live.
Your body is your asset/liabilty, which no one else can share. Your body is your responsibility. Because, You are the real life partner.
Be Fit forever. Take care yourself. Money comes & goes. Relatives & Friends are not permanent.
Remember no one can help your body other than you.
Pranayama - for Lungs
Meditation - for Mind
Yogasana - for Body
Walking - for Heart
Good food - for intestines
Good thoughts – for Soul
Good Karma - for World

Sunday, 12 December 2021

நோய்களும் வணங்க வேண்டிய தெய்வங்களும்

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

🌸நோய்களும் வணங்க வேண்டிய தெய்வங்களும்

நமது சமயத்தில் ஒருவருக்கு வந்துள்ள நோய் தீர அதற்கான குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கினால் உடனடியாக நோய் நீங்கி குணமடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது.

* முடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி

* கண் பார்வைக் குறைபாடுகள் - சிவபெருமான், விநாயகர், முருகன்

* காது, மூக்கு, தொண்டை நோய்கள் - ஸ்ரீ சுப்ரமணியர்

* ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் குறைபாடுகள், சைனஸ், நிமோனியா - மகாவிஷ்ணு

* இருதயம், மாரடைப்பு நோய் - சக்தி, கருமாரி, துர்க்கை

* அஜீரணம், குடல்வால், அல்சர், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்

* நீரிழிவு, சிறுநீரகக் குறைபாடு - பழனி முருகன்

* ஆண்களுக்கான் விரை நீக்கம், பால்வினை நோய், மாதவிடாய்க் குறைபாடுகள், கர்ப்பப்பை நோய்கள் - ராஜராஜேஸ்வரி, வள்ளி, ஸ்ரீ ரங்கநாதர்

* மூட்டு வலி, யானைக்கால் நோய் - சக்கரத்தாழ்வார்

* வாதம், கீல்வாதம், பக்கவாதம் - சனி பகவான், சிவபெருமான்

* பித்தம் - முருகன்

* வாயுக் குறைபாகள் - ஆஞ்சநேயர்

* எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்

* ரத்த சோகை, ரத்த அழுத்தம் - முருகப் பெருமான், செவ்வாய் பகவான்

* நீர் நோய்கள் - சந்திர திரிசனம், விசாலாட்சி

* குஷ்டம், சொறி சிறங்கு - சூரியன், சங்கர நாராயணன்

* அம்மை நோய்கள் - மாரியம்மன்,

* தலைவலி, காய்ச்சல் - விநாயகர், முருகன்

* புற்று நோய் - சிவபெருமான்

* ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு, பராசக்தி

* நாய்க்கடி - பைரவர்

* விசக்கடி - கோமதியம்மன்

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

Saturday, 4 December 2021

மொட்டை போடுவதன் காரணம் தெரியுமா?

மொட்டை போடுவதன் காரணம் தெரியுமா?

                                                         உலகத்தில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை
முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.

ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.

இதனை ஹிந்துக்களிலேயே கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?'  என்றும் ,

'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.

'முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?'  என்று கிண்டலடிப்பார்கள்.

யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.

மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.

இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.

மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .

அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான்  அஸ்வத்தாமன்.

குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.

அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.

அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.

ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,

நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.

ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும்
ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால்,
அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப்
பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.

ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு. எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது. வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின்
எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு
எதிரானதோ இல்லை.

யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் ஹிந்துக்களோ, மதமோ,
காரணமில்லை என்பதை உணருங்கள்.
தனிமனிதனின் தவறுக்காக, ஒரு மதத்தையே இழிவாக்குவது, இழிவாகப்பேசுவது
என்பது எந்த மதமானாலும் தவறே!

வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்!

ஓம் நமசிவாய!💐💐
               🙏🏼