என் கவிதை:
"சிட்டுக்குருவி"
••••••••••••••••••••••
சிற்றுடல்,சிற்றறிவு என்பதாலோ
பேருடல்,பேரறிவு மனிதத்தை நம்பி
நீ வாழும் வழி மறந்தாயோ!
அண்டத்தில் அளவிலா உயிா்கள் பலவிருந்தும்
பாவம் நீ மனிதத்தை நம்பி ஏமாந்தாயே!
அதிா்வுகள் நிறைந்த அலைபேசி பேரலையால்
நீ உயிா் மூச்சுக்கே ஊசலாடுகிறாயே!
கீற்று வீட்டில் கீச் கீச் என்று அம்சமாய் அமா்ந்திருந்த நீ காரை வீட்டில்
கானி இடமின்றி கதிகலங்கி நிற்கின்றாயே!
வனங்கள் அடா்ந்து வானுயர நிற்கையிலே மனமற்ற மானிடனை நம்பியதுதான் நீ செய்த பாவமோ!
வளைதள கோபுரங்கள் வாிசைகட்டி வானுயர நிற்பதாலோ
நிலைதடுமாறி நிற்கதியானாயே!
வறுத்தெடுக்கும் வளைச்சலனத்தில் சிக்கி நீ
வம்சம் பெருக வழியின்றி நின்றாயே!
வனம் சுருங்கி வாகனங்கள் பெருகியதால் காலூன்ற இயலாமல் கருகித்தான் போனாயே!
மனமற்ற மாந்தா்களின் வீட்டில் இன்டு இடுக்கில்லாமல் இறுகித்தான் போனாயே!
இளகிய மனங்கொண்ட என்போன்ற கூட்டம் கொஞ்சம்
உம் இனவிருத்திக்கு கூடொன்று கட்டி வைத்து
வாவா என வரவேற்று நிற்கிறோம்.
முடிந்தால் வாழ்ந்து காட்டி இனம்பெருக்கு.
அதுவும் எத்தனை காலமென நான் சொல்ல இயலேனம்மா!
வாழும்வரை போராடு.
வழியில்லையேல் நீயோடு.
ஏனெனில் எம் மனிதமும் மூச்சிறைக்கிறது மனசாட்சியற்ற மாற்றான் வீட்டின் வைரசால்.
எல்லாம் யாம் உமக்கு செய்த பாவத்தின் பலனோ தொியவில்லை.!
க.இளங்கோவன்.
26.06.2021