Tuesday, 29 June 2021

பேச்சியம்மன் வரலாறு

🔥🌷*பேச்சியம்மன் வரலாறு*🌷🔥

🌻பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள்.🌻

🌷கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள்.
🌷
அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள்.

(முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள்.

அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, குழந்தை நல்ல முறையில் பிறக்க கர்பிணிப் பெண்களின் வயிற்றில் எண்ணைத் தடவி உருவி விட்டு சுகப் பிரசவம் அடைய தேவையானவற்றை செய்து வந்தார்கள்.

அது மட்டும் அல்ல வீடுகளில் வயதான மூதாட்டியின் அறிவுரைகள் முக்கியம் என்பதினால் அவர்களை அன்புடன் ஆச்சிமார்கள் என்றும் அழைத்து வந்தார்கள்.

ஆச்சிமார்கள் கர்பிணிகள் எந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாக தெரிந்து வைத்துக் கொண்டு இருந்ததினால் அவர்களும் மரியாதையான பொருளில் ஆச்சிமார்கள் என்று அழைப்பார்கள்.

அவர்களை கர்பமுற்றப் பெண்கள் வீட்டில் உள்ளவர்கள் தம் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களது உதவியைப் பெற்றுக் கொள்வார்கள்.

பயங்கரமான உருவைக் கொண்டு தன் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டும், தொடையில் தனது கைகளினால் ஒரு பெண்மணி வயிற்றைக் கீறிய நிலையிலும் , கால் பாதத்தின் கீழ் ஒரு மனிதன் மிதிபட்டுக் கிடக்கவும் தோற்றம் தரும் பெரியாச்சி பார்ப்பதற்குத்தான் பயங்கரமானவளே தவிர அவளை வணங்கித் துதிப்போருக்கு அவள் அபாரமான கருணை காட்டுபவள்.

அவளை வேண்டி வணங்குபவர்களுக்கு அளவில்லா உதவி செய்பவள்.

பெரும்பாலான அவளது ஆலயங்களில் அவளுக்கு காவலனாக மதுரை வீரன் போன்றவர் காட்சி தருகிறார்.

அவளது தோற்றம் பற்றியும், பூமிக்கு வந்ததைப் பற்றியும் ஒரு கிராமியக் கதை உள்ளது.

அந்தக் கதையின்படி ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா எனும் பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான்.

அவன் ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்களுக்கு மட்டும் அல்ல, ரிஷி முனிவர்களுக்கும் அவனால் பெரும் தொல்லைகள் தோன்றின.

அவன் ராக்ஷசர்களையும், அசுரர்களையும் தன் கையில் வைத்து இருந்தான்.

அதனால் அவனை யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அதே நேரத்தில் அவனுக்குத் துணையாக இருந்த அரக்கர்களும், அசுரர்களும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெரியாச்சி அம்மனை துதித்து வந்தார்கள்.

அப்படி வாழ்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வந்தவன் ஒருமுறை ஒரு முனிவர் மூலம் ஒரு சாபத்தைப் பெற்றான்.

அவளுக்குப் பிறக்க இருந்தக் குழந்தை பிரசவம் ஆனதும் அந்தக் குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான்.

அவனது நாடும் அழிந்து விடும். மேலும் அவனது குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தித் தரும்.

மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால் அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது.

அந்த மன்னனுக்கு வெகு காலம் குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது.

ஒரு முறை மனைவி கர்ப்பவதி ஆயினாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டு விட்டால் தனக்கு மரணத்தை சம்பவிக்கும் என்றாலும், அந்த சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு ஆபத்து கிடையாது என்பதை தெரிந்து வைத்து இருந்தவன் என்ன செய்வது என தவித்தான்.

ஆனால் அவன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால் அசுரர்களையும் அரக்கர்களையும் அடக்கி வைத்து இருந்த பெரியாச்சி அம்மன் அவன் நாட்டில் ஒரு வயதோகிய பெண்மணி உருவில் வலம் வந்து கொண்டு இருந்தாள்.

அந்த காலங்களில் கட்டில்கள் கிடையாது.
சொகுசான மெத்தைப் போன்றவையும் கிடையாது. பிரசவம் என்றாலே பிரசவத் தீட்டுப் படாமல் இருக்க பிரசவ வேளை வந்ததும் வீடுகளின் மூலைகளில் அவர்களை தனியாக இருக்கச் சொல்வார்கள்.

தரையில் பாயின் மீதுதான் இருந்து பிரசவிப்பார்கள்.
அத்தனைக் கட்டுப்பாடு இருந்த காலம் அது.

அதனால்தான் பிரசவம் பார்க்க என்றே அனுபவம் மிகுந்த வயதான ஆச்சிகளை கர்பிணிகளுக்குத் துணையாக இருக்க வைப்பார்கள்.

அரசன் தன்னுடைய படையினரை அனைத்து இடத்துக்கும் அனுப்பி மனைவிக்கு பிரசவம் பார்க்க தக்க துணையைத் தேடினான்.

ஆனால் யாரும் அவனுக்கு உதவ முன் வரவில்லை. ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது.
பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் எனக் கவலை அடைந்த மன்னன் உடனடியாகக் கிளம்பி தானே ஊருக்குள் சென்று நல்ல ஆச்சியை பிரசவத்திற்காக தேடிக் கொண்டு இருந்த போது மன்னனின் முன்னால் ஒரு வயதான பெண்மணியின் உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் தென்பட்டாள்.

பெரியாச்சி அம்மன் ஒரு தெய்வப் பிறவி என்பதை அறியாமல் அவளது உதவியை மன்னன் நாடினான்.

பெரியாச்சி அம்மனும் அவனது மனைவிக்கு பிரசவம் பார்த்து அவன் குழந்தையின் உடல் முதலில் பூமியில் படாமல் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு அவனிடம் ஒரு நிபந்தனைப் போட்டாள்.

அந்த நிபந்தனையின்படி அவள் அவனுக்குப் பிறக்கும் குழந்தையின் உடல் பூமியில் படாமல் வைத்துக் கொண்டு இருந்து விட்டால் அவளுக்கு ஏராளமான பொருட்களைத் தருவதாக உறுதி அளித்தான்.

குழந்தைப் பிறந்தது.
மன்னனின் மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு இருந்த பெரியாச்சி அம்மனும் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

காலக்கெடு முடிந்ததும், அரசன் வந்து அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் தருமாறு கேட்டான்.

ஆனால் பெரியாச்சி அம்மனோ குழந்தையை தன் கையிலேயே வைத்துக் கொண்டு முதலில் தனக்குத் தர வேண்டிய பொருட்களைக் கொண்டு வருமாறு கூறினாள்.

ஆணவம் பிடித்த மன்னனோ, ஒரு வயதான பெண்மணியினால் தன்னை என்ன செய்ய முடியும் என இறுமாப்புக் கொண்டு அவளுக்குக் கூறியபடி ஒன்றும் தர முடியாது எனவும், குழந்தையைக் கொடுக்காவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என கோபமாகக் கூறிய வண்ணம் உருவிய வாளுடன் பெரியாச்சியின் அருகில் சென்றான்.

அவ்வளவுதான், ஆத்திரம் அடைந்த பெரியாச்சி நான்கு கைகளுடன், கோரமான உருவைக் கொண்டு பயங்கரமான கண்களுடன் தன் சுய உருவைக் காட்டியபடி அங்கு அமர்ந்தாள்.

ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள்.

இன்னொரு கையினால் மன்னனின் மனைவியை தூக்கித் தன் தொடை மீது வைத்துக் கொண்டு அவள் வயிற்றைக் கிழித்து அவள் உடலின் உட் பாகங்களைக் கடித்துத் தின்றாள்.

அதற்கிடையில் தன் அருகில் உருவிய வாளுடன் வந்த மன்னனை தன் காலடியில் தள்ளி அழுத்திக் கொன்றாள்.

அவன் படையினரை அவளது அடிமைகளான அசுரர்கள் துரத்திக் கொன்றார்கள்.

இப்படியாக கொடுங்கோல் மன்னனின் கதையை அவன் வம்சத்தோடு முடித்ததும் ஆக்ரோஷமாக நின்ற அவளைக் கைகூப்பி வணங்கி நின்ற மக்கள் அவள் கோபத்தைத் தணித்துக் கொண்டு தம்மை காப்பற்றி அருளுமாறு வேண்டிக் கொள்ள அவளும் கோபம் தணிந்து தன்னைப் பற்றிய உண்மையைக் கூறினாள்.

தானே காளியின் அவதாரம் எனவும், இனி தன்னைத் துதித்து வணங்கி வந்தால் தான் குடிகொள்ளும் ஊரைக் காப்பேன் எனவும், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் தான் உதவுவேன் என்றும், அவர்களுடைய குழந்தைகளுக்கு தானே பாதுகாவலராக இருப்பேன் எனவும் உறுதி தந்தாள்.

இப்படியாக தன்னை அடையாளாம் காட்டிக் கொண்டவள் பல கிராமங்களில் கிராம தேவதையாகவும், நகரங்களில் நகர மக்கள் வணங்கும் பேச்சி அல்லது பெரியாச்சி அம்மனாகவும் விளங்கி வருகிறாள்.

அவள் ஆடி மாதத்தில் பெருமளவு ஆராதிக்கப்படுகிறாள்.

கர்பிணிகளை அவள் ஆலயத்தில் அழைத்துச் சென்று அவள் ஆசிகளை வேண்டுகிறார்கள்.

குழந்தைப் பிறந்ததும், தொட்டில் போட்டு பெயர் வைக்கும் முன் முதலில் அவள் சன்னதிக்கு எடுத்துச் சென்று குழந்தையை அவள் சன்னதியில் கிடத்தியப் பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து மற்ற சடங்குகளை செய்கிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கு காது குத்தல் மற்றும் மொட்டைப் போடுதல் போன்ற சடங்குகளையும் அவளை வேண்டிக் கொண்டு அவள் ஆலயத்தில் செய்கிறார்கள்.

அவளை சிலர் மாரியம்மனின் அவதாரமாகவும் பார்க்கின்றார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள அவளது சில ஆலயங்களில் அவளுக்கு மிருக பலிகள் தரப்படுகின்றன. ஆனால் நகர்புற ஆலயங்களில் சுத்த சைவப் பிரசாதங்களையே படைக்கின்றார்கள்.

ஸ்ரீ பேச்சியம்மன் மந்திரம்.

ஓம் ஞான ஸ்ரீ பேச்சியம்மன் நமஹ ...

               ☘️☘️☘️

♥️வாழ்க வளமுடன் ♥️
🌷என்றும் இறைபணியில் 🌷
அன்புடன் 🙏🙏
💥ஸ்ரீ மஞ்சமலை கோவில்
நண்பர்கள் அலங்காநல்லூர்  💥
G. சண்முகவேல்

Saturday, 26 June 2021

கவிதை- சிட்டுக்குருவி

என் கவிதை:

"சிட்டுக்குருவி"
••••••••••••••••••••••
சிற்றுடல்,சிற்றறிவு என்பதாலோ
பேருடல்,பேரறிவு மனிதத்தை நம்பி
நீ வாழும் வழி மறந்தாயோ!

அண்டத்தில் அளவிலா உயிா்கள் பலவிருந்தும்
பாவம் நீ மனிதத்தை நம்பி ஏமாந்தாயே!

அதிா்வுகள் நிறைந்த அலைபேசி பேரலையால்
நீ உயிா் மூச்சுக்கே ஊசலாடுகிறாயே!

கீற்று வீட்டில் கீச் கீச் என்று அம்சமாய் அமா்ந்திருந்த நீ காரை வீட்டில்
கானி இடமின்றி கதிகலங்கி நிற்கின்றாயே!

வனங்கள் அடா்ந்து வானுயர நிற்கையிலே மனமற்ற மானிடனை நம்பியதுதான் நீ செய்த பாவமோ!

வளைதள கோபுரங்கள் வாிசைகட்டி வானுயர நிற்பதாலோ
நிலைதடுமாறி நிற்கதியானாயே!

வறுத்தெடுக்கும் வளைச்சலனத்தில் சிக்கி நீ
வம்சம் பெருக வழியின்றி நின்றாயே!

வனம் சுருங்கி வாகனங்கள்  பெருகியதால் காலூன்ற இயலாமல் கருகித்தான் போனாயே!

மனமற்ற மாந்தா்களின் வீட்டில்  இன்டு  இடுக்கில்லாமல்  இறுகித்தான் போனாயே!

இளகிய மனங்கொண்ட என்போன்ற கூட்டம் கொஞ்சம்
உம் இனவிருத்திக்கு கூடொன்று கட்டி வைத்து
வாவா என வரவேற்று நிற்கிறோம்.

முடிந்தால் வாழ்ந்து காட்டி இனம்பெருக்கு.
அதுவும் எத்தனை காலமென நான் சொல்ல இயலேனம்மா!

வாழும்வரை போராடு.
வழியில்லையேல் நீயோடு.

ஏனெனில் எம் மனிதமும் மூச்சிறைக்கிறது மனசாட்சியற்ற மாற்றான் வீட்டின் வைரசால்.

எல்லாம் யாம் உமக்கு  செய்த பாவத்தின் பலனோ தொியவில்லை.!

க.இளங்கோவன்.
26.06.2021

Friday, 25 June 2021

சனிக்கிழமையில் வாங்க கூடாத பொருட்கள்.

ஏன்_சனிக்கிழமையில்_இந்த #பொருட்களையெல்லாம்_வாங்கவே_கூடாது?

நவகிரகங்களில் மற்ற கிரகங்களை காட்டிலும் சனிபகவான் என்றால் அனைவரும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி மற்ற கிரகப்பெயர்ச்சி போல் இல்லாமல் நீண்ட காலம் ஒரே ராசியில் அமர்ந்து சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடியவராக சனி இருப்பதால் சனிபகவானின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

அதன்படி நிறைய விஷயங்கள் இந்த கிழமைகளில், இந்த நாட்களில் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் செய்யக்கூடாது என இருக்கிறது. அந்த வகையில் சனிக்கிழமையன்று எந்தெந்த பொருட்களையெல்லாம் வாங்கக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.

*#வாங்கக்கூடாத_பொருட்கள்_என்னென்ன?*

சனிக்கிழமையன்று உப்பு வாங்கவே கூடாது... அவ்வாறு வாங்கினால் வியாபாரத்தில் நஷ்டம், பண விரயம் உண்டாகும். மேலும் அடிக்கடி நோய்வாய்ப்படவும் நேரிடும்.

வீடு பெருக்கப் பயன்படும் துடைப்பத்தை சனிக்கிழமை வாங்குவது நல்லதல்ல.

கத்திரிக்கோலை சனிக்கிழமையன்று வாங்குவது உகந்ததல்ல. இதனால் மோசமான சூழ்நிலையில் இருப்பவர்கள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

அரிசி மாவு, கோதுமை மாவு போன்ற மாவுப்பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. இவைகள் மோசமான உடல்நிலையை குறிப்பதாகும்.

எள்ளை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. இதனால் முடிக்க வேண்டிய காரியம் முடியாமல் தள்ளிப் போகும் அல்லது தடைபடும்.

இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமை வாங்கக்கூடாது. ஏனென்றால் இரும்பு பொருட்கள் சனிபகவானுக்கு ஆகாததால் அன்று வாங்கினால் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அதேசமயம் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமையன்று தானமாக கொடுத்தால் மிகவும் நல்லது.

சனிக்கிழமையன்று எண்ணெய் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அடிக்கடி உடல் நலக்குறைவு உண்டாகும். ஆனால் எண்ணெயை தானமாக கொடுக்கலாம். அதுவும் கடுகு எண்ணெயில் செய்த அல்வா, நல்லெண்ணெயை தானம் செய்தால் மிகவும் சிறந்ததாகும்.

Saturday, 19 June 2021

குலதெய்வ வழிபாட்டின் அவசியம்...

🕉️ 🕉️

1). குலம் தெரியாமல் போனாலும், #குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
2). குருவை மறந்தாலும் குலதெய்வத் தை மறக்ககூடாது.
3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.
4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.
4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.
5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.
7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.
8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.
9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். கருங்காலி கோல் மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.
12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.
13). குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
14). அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
15). எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
16). ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.
17). குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
18). குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.
19). இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக[இல்லற] வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.
20). குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
21). குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.
22). வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.
23). தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
24). குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பது.
25). குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம்.
26). குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.
27). குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது.
28). குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.
29). குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்.
30). துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்.
31). நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.
32). குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விசயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோசமாய் இருங்கள். *9025959818*
33). ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.
34). குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. [ ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்.
35). குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும்.
36). குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
37). குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால் தான் "குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது" என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது.
38). நாம் நம் குலதெய்வத்தை வழிபடும் போது நமக்கு வரும் வினைகள்[இன்னல்கள்] யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
39). உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
40). நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
41). *மற்ற* *தெய்வத்திற்கும்* , *குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?*
மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள்.
குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள்.
42). குலதெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது.
43). எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி வந்த குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே உதாசீனப்படுத்தியது போலாகும். ஆகவே அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததியினருக்கும் நல்ல வாழ்க்கை அமையாது.
44). குலதெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது.
45). பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள்,குலதெய்வங்கள் ஆகாது.
46). இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான்.
47). மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
48). நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.