Saturday, 20 June 2020

கவிதை- தந்தையா் தினம்.

*••••••••••••••••••••••••••••••••••••••••*
_*தந்தையா் தின வாழ்த்துகள்:*_
*••••••••••••••••••••••••••••••••••••••••*
_வாழ்க்கை சமுத்திரத்தில் முதலடியாய், மங்கையை மணமுடித்து,அன்பின் அணைப்பில் அவளை அன்னையாக்கிய தந்தையே...!_

_வலிமிக்க வாழ்க்கையே_
_வழியென ஏற்று,_
_அவளின் மறுபிறப்பெய்தும் ஒப்பிலா மாதொரு வலியை உன் அன்பினால் தாங்கி_
_பிறப்பெய்த உன் சிசு முகம் காணும் ஆவலில் பாிதவித்து நின்னாயே.!_

_பாலினம் எதுவாயினும் பெற்ற நீயே பொறுப்பென உணா்ந்து, தந்தை என்ற ஊதியமிலா பதவி உயா்வடைந்தாயே.!_

_அடைந்ததை ஆரவாரமில்லாமல் ஏற்று,சுயநலமின்றி குடும்ப நலம் காக்க அரும்பாடு பட்டாயே._

_விடைதொியா குடும்ப சூத்திரத்தை விரும்பியே ஏற்று அனுபவம் பெறும் அனைத்து தந்தையா்களுக்கும் இது சமா்ப்பணம்._

_*க.இளங்கோவன்.*_