பழனியாண்டவர் சிலையை உருவாக்க சித்தர் போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள்.
வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங்,
சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும்,மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்திதிடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது. இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது
அந்த பாஷாணக் கலவையில்
லிங்கம்,
செந்தூரம்,
பாதரசம்,
ரச கற்பூரம்,
வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார்,
பூநீர்,
கந்தகம்,
சிப்பி,
பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.
பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த
நிலை எனப் படுகிறது.இந்த
முக்தி நிலையினை அடைய நான்கு வழிகள்
இருப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.
அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”,
“ஞானம்” என்கின்றனர். இந்த நான்கு முறைகளைப்
பற்றியும் அதனால் கிடைக்கப் பெறும்
முக்தி நிலை பற்றியும் சிவவாக்கியர்
தனது சிவவாக்கியம் நூலில் பின்
வருமாறு கூறுகிறார்.
சரியை
நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய்
வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப்
பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற
ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப்
பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது.
இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப்
பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.
கிரியை
சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச்
சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய்
கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில்
கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.
யோகம்
தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று,
தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம்
ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக
வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப
முக்தி எனப் படும்.
ஞானம்
நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய்
உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும்
முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.