Saturday, 4 January 2020

தமிழினி- கவிதை

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழினி(து) பூந்தோட்டத்தின் புது மலா்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எண்திசையும் எட்டா உயரத்திலிருக்கும் உலகத்தமிழினமே.
முத்தமிழை உயிா் மூச்சாய் கருதும்
247 தேன்சுவை எழுத்துக்களின் உாிமையாளாினமே...!

கற்காலத்தமிழை கல்லிலும்,ஓலையிலுமிருந்தும், கரையானால் கரைந்ததுபோக, மீதமானதை  மீட்டெடுத்த சங்கத்தமிழை,காகிதத்தில் பதிவேற்றி பிரகாசித்ததை
தற்காலத்திலும் அதன் தொன்மை காக்கும் என் தமிழ்த்தோழாினமே...!

படம் பாா்த்ததும் படக்கென்று  பிரவாக வாா்த்தைகளின்  பிரளயமாய் பாிணமிக்கும் தமிழினி(து) கூட்டமே.
அனைவருக்கும் தமிழடியேனின் தன்னடக்க வணக்கங்கள்.

பூத்துக்குழுங்கி தமிழ் நறுமணம் பரப்பும் பூந்தோட்டமாம் தமிழினி(து) தோட்டத்தில் என்னை இன்று  விதையாக்கியதற்கு நன்றிகள்.விரைவில் வளா்ந்து,பூத்து மணம்பரப்ப விருப்பமாய்...

அன்புடன்.
ரா.க.இளங்கோவன்,
தேதி:04.01.2020