Monday, 20 January 2020

சிவனைப்பற்றி நாம் அறியாத உண்மைகள்

சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்.
சிவார்ப்பணம்
சிவனின்றி அணுவும் அசையாது
*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .*.! – *எப்படி சாத்தியம்.*

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய *மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது*.

*இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.*

மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்
புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,
ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,
வாழ்க்கையையும்,
பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்
பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.
எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

அதிகம் பகிருங்கள் சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகறியட்டும்.

         *நமசிவய*
*திருச்சிற்றம்பலம்*

Friday, 17 January 2020

அலுவலக கடித எண்களும்,பெயரும்...

*அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண்* என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.
இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும்.

ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு :

1. ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

2. ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

3. மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

4. நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

5. ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.

6. தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

7.ப.வெ எண் என்றால்  பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

8. நே.மு.க எண் என்றால்,  நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்.

நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும்.

மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்...?
மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால்,  அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம். கடிதம் அனுப்புகின்ற ஊழியர்  தனது  கடமை தவறியுள்ளார் என்பதை இதுபோன்ற கடிதத்தை வைத்து நிரூபிக்கலாம்.

Friday, 10 January 2020

ஹைக்கூ- கவிதை

காலனியின் மீதினிலே
தோலுாிந்த தோழனாம்
தந்தையின் தியாகம்,மகளின் பாதணியை பாா்த்தால் புாியும்!.

Saturday, 4 January 2020

நோய்த்தடுப்பு சூப்

*🍃🙏 இந்த ஒரு சூப் குடித்தால், போதும் ! உங்களை எந்த நோயும் நெருங்கவே, முடியாது !*
 
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது.

இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம்.

*தேவையான பொருட்கள்*:

சீரகம் – 1/2 டீஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

பட்டை – சிறிதளவு

வெள்ளை பூண்டு – 10 பற்கள்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தனியா – சிறிதளவு

கிராம்பு – 7

தண்ணீர் – 750 ml

உப்பு – தேவையான அளவு

சூப் செய்முறை :

ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.

ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்கவில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)

சூப் ரெடி :

பிறகு அந்த தண்ணீரை தனியே வடித்து எடுத்துவிட்டு, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி

இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்:

மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்

மொத்த கொழுப்பு: 0.5 கிராம்

சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்

சோடியம்: 603 mg

மொத்த கார்போ ஹைடிரேட்: 3%

சளித் தொல்லை :

இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில்
3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம். தாழ்மையுடன்
அருள் நாகலிங்கம் நிறுவனர்
அருள் சித்தா கிளினிக் ஈரோடு
63 82 52 54 56

தமிழினி- கவிதை

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழினி(து) பூந்தோட்டத்தின் புது மலா்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எண்திசையும் எட்டா உயரத்திலிருக்கும் உலகத்தமிழினமே.
முத்தமிழை உயிா் மூச்சாய் கருதும்
247 தேன்சுவை எழுத்துக்களின் உாிமையாளாினமே...!

கற்காலத்தமிழை கல்லிலும்,ஓலையிலுமிருந்தும், கரையானால் கரைந்ததுபோக, மீதமானதை  மீட்டெடுத்த சங்கத்தமிழை,காகிதத்தில் பதிவேற்றி பிரகாசித்ததை
தற்காலத்திலும் அதன் தொன்மை காக்கும் என் தமிழ்த்தோழாினமே...!

படம் பாா்த்ததும் படக்கென்று  பிரவாக வாா்த்தைகளின்  பிரளயமாய் பாிணமிக்கும் தமிழினி(து) கூட்டமே.
அனைவருக்கும் தமிழடியேனின் தன்னடக்க வணக்கங்கள்.

பூத்துக்குழுங்கி தமிழ் நறுமணம் பரப்பும் பூந்தோட்டமாம் தமிழினி(து) தோட்டத்தில் என்னை இன்று  விதையாக்கியதற்கு நன்றிகள்.விரைவில் வளா்ந்து,பூத்து மணம்பரப்ப விருப்பமாய்...

அன்புடன்.
ரா.க.இளங்கோவன்,
தேதி:04.01.2020