Tuesday, 30 July 2019

கவிதை-DME

•••••••••••••••••
வாழ்த்துரை
•••••••••••••••••

அழைத்தநொடியில் தாமதம் ஏதும் அறிந்திடோம் என்றும்  உதவியில் நாங்கள்.

ஆச்சாியம் அடைந்தோம் அடிக்கடி நாங்கள்.

இன்முக வதனம்
இறைவன் தந்ததோ...?

ஈட்டி கூா்மையில்
நிா்வாகம் ஈரம்.

உத்தம செயல்கள்,
உள்மன உறைவிடம்...!

ஊக்கம்,உற்சாகம்  உம் பிறவி வரமோ.?

என்றும் எங்கள் சிந்தை நிறைந்தவரை,வாழ்த்துகிறது இன்று தமிழக செவிலியம்...

ஏணியாய் கருதி ஏதும்கேட்பினும்  மறுப்பற்ற தீா்வு மறுநொடி வருமே...!

ஐயமின்றி அழைத்து ஏதும் பேசி
யாம் பெற்ற தீா்வோ எண்ணிலடங்கா...!

ஒப்பிலா இயக்குனாின் நாற்காலி இன்று  அலங்காரம் களைந்து தளா்ந்து போனதே...!

ஓங்கி,உயா்ந்த குருசில் மாித்து,  உயிா்த்தெழுந்தவன் என்றும் உம்மோடிருக்க ...

ஔடதப்பணிதனின் சேவைகள் தொடா்ந்து,அருளாளா் அன்பில் நித்தமும் நனைந்து, வளம்பல பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் நாங்கள்.

இப்படிக்கு

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Monday, 29 July 2019

63 நாயன்மார்களை பற்றிய வரலாறு

63 நாயன்மார்களை பற்றிய வரலாறு மிக எளிமையாக, தொகுக்கப்பட்டுள்ளது:

1.திருநீலகண்ட நாயனார்:

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2.இயற்பகை நாயனார்:

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3.இளையான்குடிமாற நாயனார்:

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4.மெய்ப்பொருளார்:

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5.விறல்மிண்டர்:

சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6.அமர்நீதியார்:

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7.எறிபத்தர்:

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின் தவறு செய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத் துணிந்தவர்.

8.ஏனாதிநாதர்:

கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9.கண்ணப்பர்:

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10.குங்கிவியக்கலயர்:

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11.மானக்கஞ்சறார்:

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12.அரிவாட்டாயர்:

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13.ஆனாயர்:

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14.மூர்த்தி நாயனார்:

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.

15.முருக நாயனார்:

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16.உருத்திரபசுபதி:

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார்:

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர்:

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்:

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்:

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்:

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்:

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23.காரைக்கால் அம்மையார்:

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24.அப்பூதி அடிகள்:

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25.திருநீலநக்கர்:

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26.நமிநந்தி அடிகள்:

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28.ஏயர்கோன் கலிக்காமர்:

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர் விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30.தண்டி அடிகள்:

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர். சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31.மூர்க்கர்:

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32.சோமாசிமாறர்:

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர். உலகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33.சாக்கியர்:

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர். இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34.சிறப்புலி:

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்:

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37.கணநாதர்:

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழ நாயனார்:

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர். சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40.நரசிங்க முனையரையர்:

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41.அதிபத்தர்:

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42.கலிக்கம்பர்:

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்:

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி:

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்:

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்:

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47.காரி:

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்:

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்:

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50.முனையடுவார்:

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார்:

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி:

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53.செருத்துணை நாயனார்:

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை:

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55.கோட்புலி:

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்:

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலை விட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57.மங்கையர்க்கரசியார்

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58.நேசர்:

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59.கோச்செங்கட் சோழர்:

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்:

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானியார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்:

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.

நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.
அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாயன்மாரின் பட்டியல்
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு
விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.
அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

பக்தியே பிரதானம்:
நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.
பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலகட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத்தாதியார், கமலவதியார்,
ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று.
ஈசன் இன்றி அணுவும் ஆசையாது, காலனை உதைத்த கருணாமூர்த்தியே தன்னலமற்ற பக்தியுடன் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவோம்; நம் துன்பம், வறுமை, நோய் நீங்கி வாழ்வில் வளங்கள் பல பெறுவோம்.

வாழ்க வளமுடன்
து.தமிழரசு நிர்மலா

Sunday, 28 July 2019

இந்து சமய நூல்கள்

இக்கட்டுரை இந்து சமய நூல்களின் பட்டியல் கட்டுரையாகும்.

வேதங்கள்
பகவத் கீதை
மகாபாரதம்
இராமாயணம்
உபநிடதங்கள்
பிரம்ம சூத்திரம்
உத்தவ கீதை
புராணங்கள்
மனுதரும சாத்திரம்
விவேக சூடாமணி
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய புராணம்
தேவாரம்
திருவாசகம்
அரிகரதாரதம்மியம்
அற்புதத்திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
இட்டலிங்க அபிடேகமாலை
இரட்டைமணி மாலை
இருபா இருபது
ஈச்வர குரு த்யானங்கள்
உண்மைநெறி விளக்கம்
உண்மை விளக்கம்
ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்
ஏசு மத நிராகரணம்
கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
கந்த புராணம்
கம்ப இராமாயணம்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
காசிக் கலம்பகம்
காஞ்சிப் புராணம்
கார் எட்டு
குறுங்கழி நெடில்
கைத்தல மாலை
கைலைக் கலம்பகம் (குமரகுருபரர்)
கொடிக்கவி
கோபப் பிரசாதம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் நான்மணிமாலை
சங்கற்ப நிராகரணம் ·
சித்தாந்த சாத்திரம்
சித்தாந்த சிகாமணி
சிதம்பர செய்யுட் கோவை
சிதம்பர மும்மணிக் கோவை
சிவஞான சித்தியார்
சிவஞான பாடியம்
சிவஞான போதம்
சிவதத்துவ விவேகம்
சிவநாம மகிமை
சிவப்பிரகாசம்
சிவபர ஸ்லோகங்கள்
சிவபூசை விளக்கம் (நூல்)
சிவபெருமான் திருஅந்தாதி
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் மும்மணிக்கோவை
சிவபோக சாரம்
சிவார்ச்சனா சந்திரிகை
சுருதி ஸுக்தி மாலை
சேத்திர வெண்பா
பன்னிரு திருமுறைகள்
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சொக்கநாத கலித்துறை
சொக்கநாத வெண்பா
சோடசகலாப் பிராத சட்கம்
தசகாரியம்
தருமபுர ஆதீன பரம்பரை
திருஈங்கோய்மலை எழுபது
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்கைலாய ஞானஉலா / ஆதி உலா
திருத்தொண்டர்மாலை
திருத்தொண்டர் திருநாமக்கோவை
திருத்தொண்டர் திருவந்தாதி
திருத்தொண்டர் புராண சாரம்
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
திருப்பதிக் கோவை
திருப்பதிகக் கோவை
திருப்பல்லாண்டு
திருமந்திரம்
திருமுகப் பாசுரம்
திருமுருகாற்றுப்படை
திருமுறைத் தொடர்
திருமுறை கண்ட புராணம்
திருவருட்பயன்
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
திருவாரூர் நான்மணி மாலை
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
திருவிசைப்பா
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவிரட்டை மணிமாலை
திருவிளையாடற் புராணம்
திருவுந்தியார்
திருவுந்தியார் (மாணிக்க வாசகர்)
திருவுந்தியார்
திருவேகம்பமுடையார் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
நடராசபத்து
நிரஞ்சன மாலை
நீலகண்டசிவன் பாடல்கள்
நெஞ்சு விடு தூது
நெடுங்கழி நெடில்
பஞ்சரத்ன சுலோகங்கள்
பண்டார சாத்திரம்
பரப்ரம்ம தச சுலோகீ
பழமலை அந்தாதி
பன்னிரண்டாம் திருமுறை
பிக்ஷாடன நவமணி மாலை
பிரபந்தத்திரட்டு
பிரபுலிங்க லீலை
பெருந்தேவபாணி
பொன்வண்ணத்தந்தாதி
போற்றித்திருக்கலிவெண்பா
போற்றிப் பஃறொடை
மதுரைக் கலம்பகம்
மதுரைக் கோவை
மதுரை மாலை
முத்தி நிச்சயம்
முத்துத்தாண்டவர் பாடல்கள்
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
மெய்கண்ட சாத்திரங்கள்
வினா வெண்பா

Saturday, 27 July 2019

கவிதை-இராஜ்குமாா் கவிதை நூல்கள் வௌயீட்டு விழா வாழ்த்துரை

ஆப்பனூா் கவியருவி ந.இராஜ்குமாா் அவா்களின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா வாழ்த்துரை:
-------------------------------------------------------------
சங்கம் வளா்த்த தமிழ் மண்ணில், தவத்தால் வரம்பெற்ற எங்களூா் கவியருவி தம்பி இராஜ்குமாா்,

கடல் கடந்து பன் பல இயற்றி, 
பன்னாட்டு  தமிழ்த்தேனீக்களின் பேராசியுடன்,

இளஞ்சிட்டாய் வலம் வந்து
எதுகை மோனையால் எட்டுத்திக்கும் எதிரொலியாய்

மதிமயக்கும் கவிவாிகளை நொடிப்பொழுதில் உயிரூட்டி வெளிக்கொணரும் பேரருவி

உயிா்த்தெழுந்த பேரருவி முகநூலில் வற்றா ஜீவநதியாய் பெருக்கெடுத்து,

பெருக்கெடுத்த ஜீவநதி
முப்பெரும் கவிநூல் திாிவேணியாய் ஆா்ப்பாித்து,

ஆா்ப்பாித்த திாிவேணி இன்றோ கவிப்பெருங்கடலாய் உருமாாி உலகம்போற்றும் உச்ச நிலையில்,

இப்பெருங்கடலில் கவிநதிகள்
நித்தம் சங்கமித்து சமுத்திரமாய் மாற...

திருவாப்பனூா் நான்காம் ஸ்தல நாயகனும்,
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனும்,
அண்டத்தில் சா்வமுமாய்,என் பிண்டத்தில் உயிரானவனுமான ஈசனை வணங்கி வாழ்த்துகிறேன்.

அன்புடன் அண்ணன்...

க.இளங்கோவன்.

தேதி:27/07/2019

Friday, 26 July 2019

ISRO EXAM...

ஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு விண்ணப்பம். ISRO என்பது பற்றித் நமக்குத் தெரியும் ஆனால் தெரியாத ஒன்று உண்டு. பள்ளியில் படிக்கும் நம் மாணவர்களை குறிப்பாக +1 படிக்கும் மாணவர்களை ISRO-விற்கு அழைத்துச் செல்ல ஒரு MP க்கு RS.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கிறார்கள். அவர்கள் +2 தேர்வில் இயற்பியல் வேதியியல் மற்றும் கணக்கில் தலா 65% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள். இதுவரை நான் என் பள்ளியில் 45 மாணவர்களை உருவாக்கியுள்ளேன். இது பெருமைக்காக அல்ல. இது பற்றி தெரியாதவர்கள் தெரிந்து அவர்களும் சில ISRO விஞ்ஞானிகளை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம்தான்.
இது பற்றிய விவரம் வேண்டுவோர்
திரு. பாலமோகன். ISRO SCHOOL EDUCATIONAL DIRECTOR அவர்களை
78928 98919 மற்றும்
94814 22237 எண்ணில் தொடர்புகொள்ளலாம்
(படித்ததில் உருப்படியான பதிவு)

Thursday, 25 July 2019

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

https://www.facebook.com/thiruvarngar/

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.