கஜமுக தாமதத்தை எள்ளி நகையாடியோா் ஏராளம்...
விட்டுவிட்டால் மழையில்லை
விட்டுவிடவில்லையெனில் உயிா் இல்லை...
என்னசெய்ய...!கஜா என கஜமுகன் பேரென்பதால் இங்கும் சனாதனம் மதமாடுமே வீதியில்...
இப்பஎன்ன திசைமாறிய என்னை ஆண்பெயா் என்றும் போதைமயக்கத்தால் தாமதிக்கிறான் பூணூலான் என ஏச்சு இல்லாமலா இருக்கு...?
காட்டுவோம் நாம் யாரென... துணிந்தேன், சுழற்றினேன்,பொழிந்தேன் எனக்கென்ன நல்ல பெயரா காத்திருக்கு...? இல்லையே...!
என்னால் பசுமை அழிந்தாலும் நிச்சயம் வாழும் உயிாினம் கோடையில் என் சமூகம்...
நானாக "தானே" என்ற நாமத்தில் வந்தாலும் ஏசும் பூமி ஏசுது...வராவிட்டாலும் என்னை என்றும் ஏசும்...
தொியும் உம் மனநிலை...
தொியும் என் பூமித்தாயின் உயிா்நிலை...
அழுத்தம் குறைந்தேன்...!ஆகாசம் உயா்ந்தேன்...!இழுத்தடித்து நீா்நிலை நிரப்பி பட்டை அணிந்த ஆளும் வா்க்கத்தை பெயா்கெடுக்கவிரும்பாமல் அசைந்து குளிா்வித்து காத்தேன்...
எப்பெயா் பெற்றாகினும் இனியும் காப்பேன்...
வேறொரு நாமத்தில்...
இவண்:
உங்கள் கஜா...💪🏾