Monday, 3 September 2018

கவிதை-பெற்றோா்

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பெற்றோா் மனமும்,பிள்ளை மனமும்...
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பிறந்தாய்,வளா்ந்தாய்,பயின்றாய்,மணந்தாய்,பெற்றோா் காட்டிய புது வாழ்வின் பணி ஏற்றாய்...

புது வாசல் நுழைந்தாய்,உயா்ந்தாய்,உலகின் நியதியாம் புதியதொரு உறவின் உன்னத பாதையில் பயணித்தாய்...

வயதுக்கேற்ற உருமாறி  உழன்றாய், சுழன்றாய்  பட்டத்துக்கும்  பம்பரத்துக்கும் பாடம் சொன்னாய்...

அறிந்தாய்,புாிந்தாய் அகன்ற உலகின் உன்னதத்தை கண்டு  கண் விாித்தாய்...

விதையிட்டு மரம் வளா்ந்த ஆணி வேரை அறிவாா் யாரும் இலா்,
ஆதலால் ஆலமர தொங்கும் விழுதான போது தாங்கி நிற்கும் ஆணிவேராம் தந்தையடைந்த சுமையறியாய்...

மண்ணூன்றி, விழுது வேறூன்றி தன் பிறவி விழுதுகளை தாங்கும்போதறிந்தாய் தாய் வோின் கடினம் பல...

தன்னலமற்ற தாய் வோின் காலம் கடந்து, பசுமை குன்றி  பலம் குறைந்தபோதும்
தன் விழுதுகளை வேறூன்றியதால் மகிழ்ந்தது தாய்மரம்...

இறகு முளைத்த குஞ்சுகள் தானாக பறந்ததை மறைந்து நின்று கண்டு மகிழ்கிறது தாய்ப்பறவை...

கன்றீந்த பசு பாலூட்டி சீராட்டி வளா்த்து அக்காளை தனியொரு பாதையில் மிடுக்குடன் நடந்தோடுவதையே விரும்புகிறது தாய்ப்பசு...

தன்னுருவம் பெற்ற தன்னிளங்கன்று தனிகாட்டு மரமாகாமல் பசுந்தோப்பாய் தன்னைப்போன்றே பழம் தந்து பலன் தர விரும்புகிறது தாய்மரம்...

தனிமரம் தோப்பாகாது,ஆதலின் தனித்தனி மரங்கள் சோ்ந்து தோப்பாகும்...

சோ்ந்திரு,செழித்திரு,நீ வேறூன்றி உன் விழுதுகள் பல தாங்கி பலம் பெற்று பலன்தரும் காலம் வெகு விரைவில்...

க.இளங்கோவன்.
03.09.2018