Thursday, 27 September 2018

மகாளாய திதிகள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp

மகாளயபட்சம் : திதி கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
மகாளய பட்சத்தில் வரும் திதியின் பலன்கள் !

🌟 பித்ருக்களின் ஆராதனைக்கு மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.

🌟 மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். நற்கதி அடைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாக மகாளய பட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.

🌟 நமது மூதாதையர்களின் ஆசிர்வாதம் நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்தவொரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் அவன் மகிழ்ச்சியாக இருப்பான்.

🌟 இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

எந்த திதியில் என்ன பலன்?

🌟 முதல்நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.

🌟 இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும்.

🌟 மூன்றாம் நாளான திரிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

🌟 நான்காம் நாளான சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்வதால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.

🌟 ஐந்தாம் நாளான பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் செல்வம் சேரும், நியாயமான சொத்துக்கள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

🌟 ஆறாம் நாளான சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும், புகழும் கிடைக்கும்.

🌟 ஏழாம் நாளான சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

🌟 எட்டாம் நாளான அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.

🌟 ஒன்பதாம் நாளான நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமணத்தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

🌟 பத்தாம் நாளான தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

🌟 பதினொன்றாம் நாளான ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலைகளில் வளர்ச்சி அடைவார்கள்.

🌟 பனிரெண்டாம் நாளான துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்க நகைகள் சேரும். விலை உயர்ந்த ஆடை சேர்க்கை உண்டாகும்.

🌟 பதின்மூன்றாம் நாளான திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

🌟 பதினான்காம் நாளான சதுர்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.

🌟 அடுத்து வரும் பதினைந்தாம் நாளானது மகாளய அமாவாசை.

🌟 மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.



தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான  நித்ரா நாட்காட்டியை  இலவசமாக  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/XOqGPp

Diploma to Degree conversion letter.By.TGNA

Saturday, 15 September 2018

கஞ்சியின் பயன்கள்...

🍄கஞ்சியின் பயன்கள் :
🍄சாதம் வடித்த கஞ்சி சு+டாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.
🍄ஆனால் கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.
🍄சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.
🍄சாதத்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்?
🍄கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது.
🍄சாதத்தை மிதமான சு+ட்டிலேயே சாப்பிட வேண்டும்.
🍄ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
🍄பழையச் சோறு :
பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்.
🍄சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
🍄பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.
🍄சாதத்தின் பயன்கள் :
🍄சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.
🍄பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.
🍄மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.
🍄சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.
🍄வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.
🍄ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை :
🍄காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.
🍄உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.
🍄ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.
🍄மைதாவினால் செய்யப்படும் பரோட்டா போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள. இது வாழ்நாளைக் குறைக்கும்.
🍄பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதற்கு பதில் மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி சாப்பிடுங்கள்.
🍄மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.
🍄உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு திட உணவு சாப்பிடக் கூடாது.
🍄பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் ஆகியவற்றை நாள்தோறும் சாப்பிடுவது நல்லது.

Tuesday, 11 September 2018

வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.:

வரைவுகளில் பிழை தவிர்ப்போம்.:

அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறை பயிலரங்கில் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் "அவர்களின்" என்கிற வார்த்தை தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக..
வேலூர் மண்டல இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு.

வேலூர் மண்டல இணை இயக்குநரின் செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர் பிறப்பிப்பவர் திரு. இராஜாராம் என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ வாக்கியங்களையும் அவற்றுள் எது தவறு, எது சரி என்பதையும், இணையான தமிழ்ச் சொற்களையும்  பின்வருமாறு தருகிறேன்.

பார்வை 1 - ல் கண்ட = தவறு
பார்வை 1 - இல் கண்டுள்ள = சரி

30 - ம் தேதி என்பது தவறு
30 - ஆம் தேதி என்பது சரி.

கடிதப் பொருள் குறித்து எழுதும் போது அதன் இறுதியில் குறித்து, சார்பாக என்று எழுதுதல் தவறு.

தொடர்பாக என்று எழுதுவதே சரி.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு = தவறு
ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு = சரி

பயணத்திட்டம் = தவறு
பயண நிரல் = சரி.

அய்யா = தவறு.
ஐயா = சரி.

ஊதியப் பட்டியல் = தவறு.
ஊதியப் பட்டி = சரி.

அனுப்புனர் = தவறு.
அனுப்புநர் = சரி.

இயக்குனர் = தவறு
இயக்குநர் = சரி.

நகல் = தவறு.
படி = சரி.

கட்டிடம் = தவறு.
கட்டடம் = சரி.

விபரம் = தவறு.
விவரம் = சரி.

ஆவண செய்யுமாறு = தவறு.
ஆவன செய்யுமாறு = சரி.
( சிலர் ஆவணம் செய்யுமாறு என்று கூட எழுதிவிடுகின்றனர்.)

நிர்வாகம் = தவறு.
நிருவாகம் = சரி.

பொருப்பு = தவறு.
பொறுப்பு = சரி.

விடுமுறை விண்ணப்பம் = தவறு.
விடுப்பு விண்ணப்பம் = சரி.

சில்லறைச் செலவினம் = தவறு.
சில்லரைச் செலவினம் = சரி.

ஆரம்பம், துவக்கம் = தவறு.
தொடக்கம் = சரி.

அனுமதி = தவறு.
இசைவு = சரி.

தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை, தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு முறையே முதற்பரிசாக ரூபாய் 3000/-ம், 2ஆம் பரிசாக ரூபாய் 2000/-ம், 3ஆம் பரிசாக ரூபாய் 1000/-ம் வழங்கப்படுகின்றன. இதேபோன்று தெரிவு செய்யப்பெற்ற தலைமைச் செயலகத் துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அரசாணை எண். 1134. நாள்: 21.06.1978 இல் ஆணையிடப்பட்டுள்ளது.

Thursday, 6 September 2018

Feel happy and honour live as a HINDU

1979 ம் வருடம்..

திருவனந்தபுரம் கடற்கரை ஓரத்தில் பெரிய மனிதர் தோரணையில் இருந்த ஒருவர் அமர்ந்து பகவத்கீதையை படித்து கொண்டிருந்தார்..

அப்போது நாத்திக இளைஞன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான்..

அந்த வயதானவரை பார்த்து இந்த விஞ்ஞான உலகில் முட்டாள்கள் தான் இந்த பழம் பஞ்சாங்கமான பகவத் கீதையை படிப்பார்கள் என கிண்டல் செய்தான்.

இதை படித்த நேரத்தில் அறிவியலை கற்றிருந்தால் இன்னேரம் நீங்கள் உலகப்புகழ் அடைந்திருக்கலாம் என்றான்...

அந்த வயதானவரோ

தம்பி நீ என்ன படித்திருக்கிறாய் ? என்றார்..

இளைஞன்...

நான் கொல்கத்தாவில் படித்து அறிவியல் பட்டதாரி ஆனேன்...தற்போது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளேன் என்றான்...

நீங்களும் இப்படி வீணா கீதையை படித்து பொழுதை கழிப்பது விடுத்து அறிவியல் ஆராய்ச்சி யில் ஈடுபடலாமே என்றான்..

பதில் பேசாமல் சிரித்து கொண்டே அந்த முதியவர் எழுந்தும் எங்கிருந்தோ வேகமாக நாலு பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை சுற்றி நின்றனர்..விலையுயர்ந்த கார் ஒன்று மெல்ல உருண்டு வந்து அவர் பக்கத்தில் நின்றது..

அதிர்ந்து போன இளைஞன் ஐயா நீங்கள் யார்? என்றான்..

அதற்கு அவரோ சிரித்து கொண்டே நான் விக்ரம் சாராபாய்...
பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் என்றார்...

அந்த நேரத்தில்13 பாபா அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன..அத்தனைக்கும் தலைவர் இவரே..

இப்பொழுது அதிர்ந்து போன இளைஞன் தடாலென சாராபாய் கால்களில் விழுந்தான்...

சாராபாய் சிரித்து கொண்டே கூறினார்...
தம்பி.. ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளி இருக்கிறான்..

அது மகாபாரத காலமாக இருந்தாலும் சரி..இந்த விஞ்ஞான யுகமாக இருந்தாலும் சரி...கடவுளை மறக்காதே.

இன்று நாத்திகர்கள் அறிவியல் யுகமென ஆட்டம் போடலாம்..

ஆனால் வரலாறு சொல்லும்..

அறிவியலை உருவாக்கியது கடவுள் நம்பிக்கையாளர்கள் தான்..என்று

இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை....
பரந்தாமனின் மொழிகள் (கீதை) உண்மையானவை..
அதை வணங்கி பாருங்கள்..துன்பம் தொலைந்தோடுவதை காண்பீர்கள் என்றார்..

*God is Eternal Truth. God's speech (Bhagavad Gita) is true; it cannot be falsified at all. Just by worshipping it, troubles will surely get resolved.*

உண்மையான ஹிந்துவாக வாழ்ந்து மறைந்தவர் விக்ரம் சாராபாய்....

நமது படிப்போ ...

பட்டமோ ...

பதவியோ ...

நம் தகுதியை நிர்ணயிப்பதில்லை என உணர்வோமாக.....

Monday, 3 September 2018

கவிதை-பெற்றோா்

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பெற்றோா் மனமும்,பிள்ளை மனமும்...
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பிறந்தாய்,வளா்ந்தாய்,பயின்றாய்,மணந்தாய்,பெற்றோா் காட்டிய புது வாழ்வின் பணி ஏற்றாய்...

புது வாசல் நுழைந்தாய்,உயா்ந்தாய்,உலகின் நியதியாம் புதியதொரு உறவின் உன்னத பாதையில் பயணித்தாய்...

வயதுக்கேற்ற உருமாறி  உழன்றாய், சுழன்றாய்  பட்டத்துக்கும்  பம்பரத்துக்கும் பாடம் சொன்னாய்...

அறிந்தாய்,புாிந்தாய் அகன்ற உலகின் உன்னதத்தை கண்டு  கண் விாித்தாய்...

விதையிட்டு மரம் வளா்ந்த ஆணி வேரை அறிவாா் யாரும் இலா்,
ஆதலால் ஆலமர தொங்கும் விழுதான போது தாங்கி நிற்கும் ஆணிவேராம் தந்தையடைந்த சுமையறியாய்...

மண்ணூன்றி, விழுது வேறூன்றி தன் பிறவி விழுதுகளை தாங்கும்போதறிந்தாய் தாய் வோின் கடினம் பல...

தன்னலமற்ற தாய் வோின் காலம் கடந்து, பசுமை குன்றி  பலம் குறைந்தபோதும்
தன் விழுதுகளை வேறூன்றியதால் மகிழ்ந்தது தாய்மரம்...

இறகு முளைத்த குஞ்சுகள் தானாக பறந்ததை மறைந்து நின்று கண்டு மகிழ்கிறது தாய்ப்பறவை...

கன்றீந்த பசு பாலூட்டி சீராட்டி வளா்த்து அக்காளை தனியொரு பாதையில் மிடுக்குடன் நடந்தோடுவதையே விரும்புகிறது தாய்ப்பசு...

தன்னுருவம் பெற்ற தன்னிளங்கன்று தனிகாட்டு மரமாகாமல் பசுந்தோப்பாய் தன்னைப்போன்றே பழம் தந்து பலன் தர விரும்புகிறது தாய்மரம்...

தனிமரம் தோப்பாகாது,ஆதலின் தனித்தனி மரங்கள் சோ்ந்து தோப்பாகும்...

சோ்ந்திரு,செழித்திரு,நீ வேறூன்றி உன் விழுதுகள் பல தாங்கி பலம் பெற்று பலன்தரும் காலம் வெகு விரைவில்...

க.இளங்கோவன்.
03.09.2018