Monday, 27 August 2018

True story

ஒரு உண்மைச் சம்பவம் -

தனது ஒன்பதாவது வயதில் தன் உடன் படித்த நண்பர்களோடு அந்தச் சிறுவன் _
தனது திருநகர் வீட்டிலிருந்து தினந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவது வழக்கம் -

அன்றும் அவன் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது -

கிறிஸ்த்துவப் பாதிரியார் ஒருவர் மெகா போனை வைத்துக் கொண்டு மதப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் -

அந்தப் பிரசங்கத்தில் இந்து மதக் கடவுள் வழிபாட்டைக் குறை சொல்வதற்காக -
"ஏ.,.மானிடர்களே, நீங்கள் நடக்கின்ற சாலைகளிலே போடப்பட்டிருப்பது கல், உங்கள் வீட்டு வாயிற்படியில் போடப்பட்டிருப்பதும் கல், குளக்கரையில் துணி துவைக்க பயன்படுவதும் கல், நீங்கள் வணங்கும் கடவுள் அதுவும் கல்," -
"ஒரு காலத்தில் உங்கள் கால் பட்ட கல்லைத்தான் இப்பொழுது கோவிலில் வைத்துக் கடவுள் என்று சொல்கிறார்கள் " -

அதற்கு சக்தியுமில்லை, வணங்குகிற உங்களுக்குப் புத்தியும் இல்லை -

என்று பாதிரியார் பேசிக் கொண்டே போகிறார் -

இடையில புகுந்த அந்தச் சிறுவன் அவரது பேச்சைத் தடுத்து நிறுத்தி _

"எனக்கொரு சந்தேகம், கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேட்க -

அந்தச் சிறுவனை ஏற இறங்கப் பார்த்து கூடியிருந்த கூட்டத்தை நோக்கி "மகாகனம் மிக்க மக்களே, இதோ இந்தச் சிறுவன் என்னிடம் கேள்வி கேட்கப் போகிறான், நான் இப்பொழுது அவன் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப் போகி உங்கள் கவனத்தை என்பால் திருப்புங்கள்" என்றார் -

சிறுவன் கேட்டான் -

நமக்குப் பின்னால் பிறந்த ஒரு பெண்ணை என்னவென்று சொல்வோம்? -

" தங்கை என்போம், தமக்கை என்போம், சகோதரி என்போம் - என்றார் பாதிரியார்_

"நம்மைப் பெற்றவளை எப்படிச் சொல்வோம்?" _

"தாய் என்போம், அன்னை என்போம், அம்மா என்போம்" -

"நாம் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணை?" -

"மனைவி என்போம், துணைவி என்போம், இல்லத்தரசி என்போம்" -

இந்த மூன்று உறவும் உங்களுக்கு இருககிறதா?--

"தெரிந்துதான் கேட்கிறாயா? சிறுவனே _
தாயில்லாமல் யாரும் பிறக்க முடியாது -
என்ககுத் தாயும், இருக்கிறார் மனைவியும், இருக்கிறார் என்று ஏளனமாக பாதிரியார் பதிலளித்தார் -

"உடலால், உணர்வால், உறுப்புகளால் மூவரும் ஒரே தன்மை கொண்டவர்கள் தான் இல்லையா?" என்று அந்தச் சிறுவன் கேட்டான் -

பாதிரியார் "ஆமாம்" என்றதும் -

"உங்கள் மனைவியிடம் நீங்கள் நடந்து கொள்ளும் முறைக்கும், உங்கள் தாய் தங்கையிடமும் நடந்து கொள்ளும் முறைக்கும் வேறுபாடுகளும் வித்தியாசமும் இருக்கிறதா? இல்லை மூவரையும் ஒரே நோக்கோடுதான் பார்க்கிறீர்களா?" என்றதும் -

மெகா போன் கீழே விழுகிறது,
பாதிரியாரின் வாய் வார்த்தையின்றி திறந்தபடியே இருக்கிறது -
கூடியிருந்த கூட்டத்தார் பிரமிப்பும் பெருமிதமும் கொண்டு அந்தச் சிறுவனின் தோற்றத்தையும், வயதை மீறிய அறிவையும் போற்றிப் பாராட்டினர் -

பாதிரியார் தான் செய்த தவறுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு அந்தச் சிறுவன் முன் வந்து -
"தம்பி, இப்போது என் முதுகு மட்டும் உன் முன்னால் வளைந்திருக்கவில்லை, என் அறிவும் ஆணவமும் வளைந்து தான் இருக்கிறது", -

"எங்கள் மதத்தின் பால் கொண்ட ஈடுபாட்டால் சொல்லின் ஆழம் புரியாமல் பேசிவிட்டேன், மன்னித்து விடப்பா" என்று சொல்ல -

"பிற மதத்தைக் குறை சொல்லி உங்கள் மதத்தை வளர்க்கப் பார்க்காதீர்கள்" -

உங்கள் மதத்தின் மேன்மையைப் பிறருக்குப் புரிய வையுங்கள் -
பிடித்திருந்தால் அவர்கள் உங்களைத் தொடரட்டும் அதற்குத் தடையாக இங்கே எவரும் இருக்க மாட்டார்கள் -
மேலும், எல்லா மதத்திலும் மையப் பொருளாக இறைவன் தான் இருக்கிறான் என்பதையும் மறந்து விடாதீர்கள் என்றான் அந்தச் சிறுவன் -

ஒன்பது வயதில் இந்து மதத்தின் காவலராக நின்று பேசும் சாமர்த்தியம் எந்தப் பாடத்தில் அவர் படித்தது?-
இயற்கையின் வெளிப்பாடுகள் எப்படி கற்றுக் கொள்ளாமல் நடைபெறுகிறதோ, அப்படித்தான் அதுவும் -

அந்த ஞானச் சிறுவன் வேறு யாருமல்ல -

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் -

🙏🙏🙏🙏🙏

Wednesday, 22 August 2018

கவிதை-செவிலிய மாணவிகள்

¤¤¤¤¤¤¤¤¤
பூஞ்சிட்டு:
¤¤¤¤¤¤¤¤¤

வெஞ்சிறுதொப்பி  பூண்ட பூஞ்சிட்டு,
என்றும் புன்னகை மாறா மலா்மொட்டு.

மழலையாய் செவிலியம் நுழைந்த தேன்சிட்டு.

பயிற்சியை_
மூன்றாண்டுக்கு மேல் முடித்த முழுமொட்டு.

முழுஊதியம் பெறா
மூன்றாண்டு அரசூழியனே...!

பிணியாின் தலைவாாி,நகம் வெட்டி,தோல் துடைத்து,துயா் போக்கி,

பிணியரை பிணிக்களத்தில் கண்டு கற்ற கன்னிகை நீ...!

பலபடி பயிற்சியை
பாங்குடன் முடித்துவிட்டு,

படித்த பட்டயத்தை அடிக்கடி நீ பட்டை தீட்டு.

பணிக்கு சிவப்பு கம்பளம் விாித்த நம் செவிலியம்...!

மலையேறி போனதென்பதை மனதிலிட்டு...

படித்தோம் முடித்தோம் என்றெண்ணத்தை  மனம் விட்டு ஓட விரட்டு.

இனிதான் ஆரம்பம் உன் படிப்பே
என்பதை மனம் நிறுத்து.

வாிந்துகட்டி வாாியத்தோ்வுகளை முன்னிருத்து.

உன் ஓட்டத்தை துவங்கிடுமா முன்னெடுத்து...

ஆணிவேராம் மூத்த செவிலியம் உன்னருகில் என்றென்றும் உடனிருக்கும்,

உடனிருக்கும் பலமுணா்ந்து வளமாக்கு உன்வாழ்வை.

ஆலமரமாம் செவிலியத்தின்  விழுதன்றோ நீ...!

விழுது விழுந்த இடத்தில் நன்கூன்றி செவிலியத்தின் நிலை உயா்த்து,
உன் பெற்றோாின்
பெயா் உயா்த்து...

வாழ்க செவிலியம்,
வளா்க செவிலியம்,
வளா்ந்த செவிலியம்
தொடா்ந்து வாழட்டும்,

என இளைய செவிலிய சின்னஞ்சிறகுகளை அன்புடன் வாழ்த்துகிறது மூத்த செவிலியம்.

(மூன்றரை ஆண்டுகள் சிறப்புடன் பயிற்சி முடித்த செவிலிய மாணவிகளுக்காக...)

க.இளங்கோவன்.
22/08/2018

Tuesday, 7 August 2018

கவிதை-கலைஞா் கருணாநிதிக்கு...

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருக்குவளையின் திருக்குறள்:
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

திருக்குவளையின் திருக்குறளே...!
திருத்தமிழின்
திசைகாட்டியே...!
முத்துவேல்-அஞ்சுகத்தின் முத்தமிழ் மைந்தா...!

மூன்றில் உதித்த ஒற்றைச்சூாியனே...!
ஏழில் மறைந்து எண்திசை மக்களையும் தவிக்கவிட்டதேன்...?

அன்னிய ஆங்கிலேயனிடம் ஆரம்ப கல்வி பயின்ற தமிழ் பக்தா...!

தூக்குமேடை தூக்கி தந்த கலைஞா்
பட்டமே...!
இனிய இலக்கியத்தின்
இதிகாசம் நீ...!

தன்னிகாில்லா தமிழ்க்கலைஞா...! தமிழிலக்கியத்தின் தற்கால தந்தையன்றோ நீ...!

தமிழ்ப்புலவரை
குமாியில் வானுயர நிறுத்தி
மக்கள் மனம் நின்றீரே...!

செம்மொழி தந்த செங்கதிா் உதயா...!
கருணையுள்ளமுடைய கருணா மூா்த்தி நீ...!

சமத்துவம் தந்த
சாித்திர நாயகனாம்
கருவறையிலா
கடவுள் நீ...!

பக்தியில்லா பக்தனே
பராசக்தியின் படைப்பாளி நீ...!

பாரத அரசியலின் பழம்பெரும் பொக்கிஷம் நீ...!
அகிலம்போற்றும் வெகுதாிது தலைவரய்யா நீ...!

உம் முதல்வா் குடையின்கீழ் பெரும் கொடைநிழல் பெற்றது தமிழக செவிலியம்...!

பணிச்சுழலில் பாிதவித்த செவிலியா்களை சுழற்சிபணி தந்து
சுகமளித்த சுந்தரனே...!

உம்மை என்றும் மறவா தமிழக செவிலியம் உம் ஆன்மா அமைதி பெற  வேண்டுகிறோம்.
😰😰😰🙏🏽

ஆழ்ந்த அனுதாபங்களுடன்...

ஒட்டுமொத்த தமிழக அரசு செவிலியா்கள். 😰

படைப்பு:
க.இளங்கோவன்,
திருஆப்பனூா்.

08/08/2018

Sunday, 5 August 2018

இராஜ்குமாா் கவிதை...

எரிந்த உடலில்
எஞ்சிய உயிர்...

முறிந்த எழும்பில்
முளைக்கும் வலி...

சொரிந்த புண்ணில்
சொட்டும் குருதி...

உரிந்த தோளில்
உதிரிச் சதை...

அச்சமோ அருவறுப்போ
அரங்கேற வாய்ப்பில்லை..!
உச்சமான உறுதிக்கு
உபயம் செய்த பணியிது..!

துச்சமோ துயரமோ
துவண்டுவிட வாய்ப்பில்லை..!
துள்ளியெழும் அலையாக
துணிச்சலான அணியிது..!

சகலப் பிணிகள்
சங்கமிக்கும் உடலை...
சலவை செய்வோம்
சமத்துவச் சேவையாய்..!

மரணப் பூக்கள்
மணக்கும் உலகில்...
மனிதம் காப்போம்
மருத்துவச் சேனையாய்..!

உடன்பிறப்பு என்றுதான்
உரைப்பார்கள் எவருமே...
உதவும் பண்பினை
உழைப்பில் புகுத்தியதால்..!

கடன்பட்டோம் என்றுதான்
கதைப்பார்கள் இன்றுமே...
கருணை குணத்தை
கடமையில் செலுத்தியதால்..!

உடை எப்படியோ
உள்ளமும் அப்படி..!
அன்ன நிற மேகம்
அன்பு மழை பொழியும்..!

கனிவு எப்படியோ
கண்டிப்பும் அப்படி..!
உணவை மறுக்கும் குழந்தையை
உண்ண வைக்கும் கோபம்..!

யாதும் ஊரே
யாவரும் கேளீர்..!
இவ்வாசகம் எங்கள்
இதயத் துடிப்பாக..!

பேரு தெரியாத
பேரளவு கூட்டத்தை...
பேச்சோடு நிற்காமல்
பேணிடுவோம் தாயாக..!

ஊறு விளைவிக்கும்
ஊருபட்ட கிருமிக்கு...
ஊசிமுனை மருந்தால்
ஊதப்படும் சங்கு..!

கூற முடியாத
கூடல் உறுப்பு..!
சிகிச்சை அளிப்போம்
சிரத்தையோடு அங்கு..!

காலன் வருவதை
காலதாமதம் ஆக்கிவிட...
வேகமான முதல் உதவி
வேங்கையென நாங்கள்தான்..!

பாதித் தாய்மைக்கு
பால் கொடுக்க தெரியாது..!
பாடம் நடத்துகின்ற
பாசமலரும் நாங்கள்தான்..!

பிறந்த குழந்தை
பிம்பம் பார்க்கும்
முதல் கண்ணாடி
எங்கள் கண்கள்தான்..!

இறந்த ஆன்மா
இறைவனைச் சேர...
முதல் கண்ணீரும்
எங்கள் கண்கள்தான்..!

வரம் பெற்ற
வாய்ப்பாகவே கருதுகிறோம்..!
பிறர் நலம் பேணும்
நம்பிக்கை நாங்களாக..!

பயன் பெற்ற
பலருக்கும் தெரியும்..!
இது பணி அல்ல
பணிவிடை என்று..!

இது பணி அல்ல
பணிவிடை என்று..!!!

Thursday, 2 August 2018

கவிதை-சுதா அக்கா

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பிறந்ததின வாழ்த்து மடல்:
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

சிாிக்க விரும்பும் சிந்தையிருந்தும் சினம் காட்ட முயல்வாய்...உன்னால் முடியவில்லை.

அன்பு நிறைந்த அகமிருந்தும் அகமடக்க முயல்வாய்...
உன்னால் முடியவில்லை.

கூடிவாழ கோடி மனமிருந்தும் மறைந்து வாழ முயல்வாய்...உன்னால் முடியவில்லை.

பண்புமிக்க பாசமிருந்தும் பகைத்து வாழ முயல்வாய்...உன்னால் முடியவில்லை.

உன் பணியிடத்தில் பிரச்சனைபல சாிசெய்ய முயல்கிறாய்...ஆனால் முடியவில்லை.

உன் செயலனைத்திலும் முயன்றோடும் முயலிருந்தும் உன் முயற்சியனைத்தும் ஆமையாய் இருப்பதால் மனந்துவண்டாய்...

கவலைவிடு...முயன்றுவா....முந்திவா... ஒன்றுகூடி முயலும், ஆமையும் சோ்ந்த முயலாமையை இல்லாமை ஆக்கி உன் விருப்பம் நிறைவேற்றுவோம்...

புதிய நாளில் புதிய அகவையில் அனைத்து வளம் பெற்று வாழ வாழ்த்துகிறேன் தங்கை சுதா...

இப்படிக்கு...

K.Elankovan

Date: 03/08/2018