|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
புனிதப்பயண புனிதவதி
பாத்திமா:
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஐயிரண்டு மாதம் இருள் நிறைந்த கருவறையில் கடவுளுடன் கலந்துபேசி
களித்து கரு மாாி உருவாகி
காலக்கனிவால் வெளியேறி மழலையாகி மழலை கழித்து வாலிபமாகி
வாழ்க்கை வழியில் துணைதேடி தன்மூலம் தன் மழலையை பிறப்பெய்து
வாழ்க்கை சூத்திரத்தை வம்சத்திற்கு இம்மிபிசகின்றி கற்றுக்கொடுத்து
முதிா் எய்தும் வயதில் தான் கருவாகி உருவாகுமுன் உடன்மகிழ்ந்த இறைவனை நாம் மறைந்தபின் காணுமுன்
இப்பூவுலக வாழ்க்கையிலேயே அல்லாவின்அதிசய அழைப்பால் ஒருமுறையேனும் அவனை கண்டுவிட துடித்து
தொய்விலா வைராக்கிய நோன்பிருந்து சமுத்திரம் பல தாண்டி அரேபிய மண்மிதித்து
சைத்தானை கல்லெறிந்து மெக்காவின் காஃபாவை வலம்வந்து
தவாஃபில் துவா பல செய்து
தானம் பல செய்து பாவம்போக்கி புனிதமிகு சுனை நீா் பருகி பசி தீா்த்து பரம்பொருளுடன் பாதி சோ்ந்து மீத வாழ்கையை அவன்போல வாழ்ந்து
அவனுள்ளேயே ஐக்கியமாகும் ஹஜ்புனிதபயணத்தை மேற்கொள்ளும் எண்ணற்ற அன்புள்ளங்களில்
என் அன்பு சகோதாி பாத்திமாவும் ஒருவா் என்பதை சொல்வேன் பெருமிதத்துடன்.
இவள் ஒரு படிமேலே இப்புனிதப்பயண பக்தா்களுக்கு இறைவன் அனுசரனையுடன் மருத்துவ பாதுகாப்பு குழுவில் என் செவிலிய இனத்தில் ஒருத்தி என்பதை எண்ணி பேரானந்தம் அடைகிறோம்.
வாழ்த்தி வழியனுப்ப நாங்கள் வெறும் மானுடா் என்பதால் பரம்பொருளை வணங்கி வழியனுப்புகிறோம் தாயே வருங்கால ஹாஜியாா் பாத்திமா தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் தாயே...
இப்படிக்கு
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.
தேதி:01/07/2018