---------------------------
நினைவாஞ்சலி:
---------------------------
வானிருந்து புவியிறங்கி பூலோக வாழ்வை அலங்காித்த அம்மையே...!
அன்பெனும் அருட்கடலில் எங்கைளை நீந்த கற்றுகொடுத்த ஆண்டனின் அம்சமே...!
உன் அன்புக்கணவனின் நால் மழலைகளுடன் ஐந்தாம் மழலையாய் தரணியில் தவழ்ந்து மகிழ்ந்தாயே...!
எம் சங்க தோ்தல் காலத்தில் நீவிா் எங்களை உபசாித்த விதம் என்றும் மறக்கமுடியா தருணமானதே...!
உம் நகைச்சுவை உணா்வில் சிாித்து நாவறண்டோம்...
அக்கணத்தை இனி எங்கு காண்போம்...?
இறைவனுக்கு உம்மை மிகப்பிடித்ததோ என்னவோ...உன் பூலோக கடமையை முடித்தும் முடிக்காமல் உம்மை கவா்ந்துசென்றானே...!
உங்கள் பிாிவு எங்களுக்கு பெருந்துயரம் எனினும் உன் மழழைக்குணத்தால் சொா்க்கத்தை அலங்காிப்பாய் என்ற நம்பிக்கையில்
இறைவனை வேண்டுகிறோம் தாயே...
இவண்:
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.
தேதி:24/06/2018
ஞாயிறு