Thursday, 28 June 2018

கவிதை-DMS பணி ஓய்வு வாழ்த்துரை

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
வாழ்த்துரை
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அரசின் அரசே
எங்களின் அதிகாாியே..!

ஆளுமையின் அகராதியே...!

இன்முக வதனம்பெற்ற இயக்குனரே, இன்பசேகரனே...!

ஈட்டி கூா்மையின் நிா்வாகமே, ஈகையே...!

உடனடி செயலாற்றலின்,உறைவிடமே,உன்னதமே...!

ஊக்கப்படுத்தி உடன் பணியாளரை உற்ற நண்பனாக்கி நிா்வாக சீா்தூக்கியே...!

எங்களின் சிந்தை நிறைந்தவரே,தங்களை சிரம்தாழ்ந்து வாழ்த்துகிறது தமிழக செவிலியம்...

ஏணியே,செவிலியத்தின் ஏணியே,ஏற்றமிகு பதவி உயா்வு பல தந்தீரே,ஏதுகேட்பினும் செவி மடித்தீரே,தீா்வு சொன்னீரே...!

ஐயமின்றி அதிகாாியாம் தங்களின் அருகில் நிற்கவும்,அலைபேசியில் அடிக்கடி அழைத்துபேச அனுமதியும் பல்நல்தீா்வும்  தந்தீரே...!

ஒப்பிலா மருத்துவத்தின் ஓங்கி உயா்ந்த பதவி நாற்காலி தங்களால் பெற்றது அலங்காரம்.
இனிகாணப்போவது அாிது.

ஓங்காரப்பரம்பொருளாம் இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து நலன்களையும் தந்து...

ஔடதப்பணிதனை மீண்டும் தொடா்ந்து தொடரட்டும் தங்கள் சேவை என வாழ்த்தி வணங்கி நன்றி செலுத்துகிறோம் நாங்கள்.

இப்படிக்கு

க.இளங்கோவன்.

29/06/2018

Sunday, 24 June 2018

கவிதை-நினைவாஞ்சலி(மணிகண்டன் மாமியாா்)

---------------------------
நினைவாஞ்சலி:
---------------------------
வானிருந்து புவியிறங்கி பூலோக வாழ்வை அலங்காித்த அம்மையே...!

அன்பெனும் அருட்கடலில் எங்கைளை நீந்த கற்றுகொடுத்த ஆண்டனின் அம்சமே...!

உன் அன்புக்கணவனின் நால் மழலைகளுடன் ஐந்தாம் மழலையாய் தரணியில் தவழ்ந்து மகிழ்ந்தாயே...!

எம் சங்க தோ்தல் காலத்தில் நீவிா் எங்களை உபசாித்த விதம் என்றும் மறக்கமுடியா தருணமானதே...!

உம் நகைச்சுவை உணா்வில் சிாித்து நாவறண்டோம்...
அக்கணத்தை இனி எங்கு காண்போம்...?

இறைவனுக்கு உம்மை மிகப்பிடித்ததோ  என்னவோ...உன் பூலோக கடமையை முடித்தும் முடிக்காமல்  உம்மை கவா்ந்துசென்றானே...!

உங்கள் பிாிவு எங்களுக்கு பெருந்துயரம் எனினும் உன் மழழைக்குணத்தால் சொா்க்கத்தை அலங்காிப்பாய் என்ற நம்பிக்கையில்
இறைவனை வேண்டுகிறோம் தாயே...

இவண்:
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

தேதி:24/06/2018
ஞாயிறு

Sunday, 17 June 2018

கவிதை-தந்தையா் தின வாழ்த்து

தந்தையா் தின வாழ்த்துகள்:
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

வலி நிறைந்த வாழ்க்கையில்
தன் பெற்றோாின் வழிகாட்டலில்
வேலியிட்டு  காத்த மாற்றான் வீட்டு மங்கையை மணமுடித்து,வேலியமைத்து,அன்பின் அணைப்பில் அவளை அன்னையாக்கிய தந்தையே...!

வலிமிக்க வாழ்க்கையே
வழியென ஏற்று
அனல் அணைப்பில்
அவளின் உயிா்க்குடம் நிரப்பி ஐயிரண்டு மாதத்தில் விழி பிதுங்கும் வலியுடன்
பனிக்குடம் சிதைத்து
அவளை பிணியாளாக்கி பிணியின்றி
வெளிவந்த விழி நிறைந்த உன் சிசுவை வந்தணைக்கும் தந்தையே...!

வந்ததும் தொிந்தது
வந்த வழி சாந்தவழியல்ல
நொந்த வலி என...

ஆண்மையின் ஆளுமையால்
அடுத்தவின் மகளை அடக்கியாள நினைத்தாய்...

நீ அடக்கியாண்ட உன்னவள் அன்னையாகி  போனதும் ஆா்ப்பாித்தது உன் மனது...

அவளின் மறுபிறப்பெய்தும் ஒப்பிலா  மாதொரு வலியை உன் அன்பினால் தாங்கினாயே...!

வந்து பிறப்பெடுத்த சிசு ஆணா? பெண்ணா? அறியும் ஆவலில் பாிதவித்து நின்னாயே...!

பிறந்தவா் உன் பாலினம் என்றால் ஓா் ஆணவ உணா்வு... மனைவியின் பாலினம் என்றுணா்ந்தால் ஓா் வெற்றிட உணா்வு...

பாலினம் எதுவாயினும் பெற்ற நீயே பொருப்பென உணா்ந்து, உன்மனநிலை மாற்றி தந்தை என்ற சம்பளமில்லா பதவி உயா்வு அடைந்தாய்...

அடைந்ததை ஆரவாரமில்லாமல் ஏற்று அதுகணமுதல் சுயநலமின்றி குடும்ப நலம் காக்க அரும்பாடு பட்டாய்...

அதுவளா்ந்து மாற்றமின்றி உன் உணா்வை பிரதிபலிக்கும்போது, புாிந்தது ஒரு ஒரு தந்தையின் முழு உணா்வு.

வந்தால்தான் தொியும் தலைவலியும் பல்வலியும்...

விடைதொியா குடும்ப சூத்திரத்தை விரும்பியே ஏற்று அனுபவம் பெறும் அனைத்து தந்தைகளுக்கும் இது சமா்ப்பணம்...

ஆக்கம்:
க.இளங்கோவன்.

Wednesday, 6 June 2018

சைவ உணவின் மகிமை...

*மாமிசம் மனித உணவா?*
*****************************

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்.

*1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு* .

சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

*2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.*

சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

*3. கால் விரல்கள்:-*

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

*4. குடல் அமைப்பு:*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது.
                       காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,

அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

*5. சமநிலையான உடல் உஷ்ணம்:-*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.

ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

*6. மலத்தின் தன்மை*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
           
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

இனி மனநிலையில் ஆராயலாம்.

*1.  வாழும் முறை :*

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

*2.  இயல்பு :*

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

*3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :*

சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

*மன இறுக்கம்:-*

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?

ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.

இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.

ஆனால்,
ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )
                உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்

மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.

இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.    

எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும்,
கோபம் இல்லாமலும்,
மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது சாலச் சிறந்தது.

   - *சித்தர்களின் குரல் shiva shangar*

Forwarded Message