அதிகார பசிக்கு இரையான மணிமாலா...
---------------------------------------------
வெள்ளக்கோயில் வெண் முத்தே
உன் மணிக்கழுத்தில் வெண்கயிறா...! அட மணிமாலா... என் தங்கையே...
மஞ்சள் கயிறேறுமுன்
குறுங்கயிற்றில்
மணிக்கழுத்து சிக்குன்டதேன்...?
ஒழுங்கா பணி செஞ்சும்,பணிசெய்யா பயமகனை பரலோகம் போயித்தான் மணிமாலா பயமுறுத்தனமா...?
அதிகார வா்க்கத்தின் அக்கிரமத்தீயை அணைக்க வழியின்றி புத்தி பேதழிச்சாயோ...?
ஊராபிள்ளைய ஊட்டி வளத்தா தான் பிள்ள தானே வளரும்னாங்க...
எவபிள்ளையோ பொழைக்க
இன்று எம்பிள்ளைய பறிகொடுத்தோமே
பயமக்கா...!
இதயும் விதினு சதி செஞ்சீங்களே பாவிமக்கா...!
உன் கல்லாப்பெட்டி கலை கட்ட உன் வா்க்கம் வேலைக்கு வரல...வேலக்கி வந்த எம் புள்ளயின் கழுத்துல கயிறா...?
என் புள்ள கழுத்துல கயிறேறின பைலை மூனு நாள்ல நீ மூடிடுவ...
கண்மூடின எம்புள்ளயின் பெத்தவங்க கண்ணை முழிச்சிக்கிட்டே செத்து பொணமா நடப்பாங்க...
மனிதநேசத்த மண்ணுக்குள் புதச்ச
அதிகாரவா்க்கமே...!
நீ மனுச உயிரை பணயம் வச்சு பணப்பைய நிரப்பனுமா...?
கடுந்தேளின் கடுங்கடியால செத்தது உன் இனமல்ல...அது எங்க இனம்...
இனி எத்தனை காலம் எத்தனை உயிா்பறிக்கும் உன் பணபசியும் அதிகாரபசியும்...
இதுவே உன் புள்ள செத்திருந்தா நீ சும்மா இருப்பயா பயமக்கா...
நாங்க பாசம் வேண்டல...
உங்க நாடகத்துல எங்க இனத்தின் சாகுற வேசம் வேண்டவே வேண்டாம் என்கிறோம்...
உச்சந்தலை வரை பணத்தால அடைச்சிருக்கும்போது எங்க அலறல் சத்தம் உன்காதுக்கெப்படி கேக்கும்...?
இதற்கு நியாயம் இல்லைனா இனி ஒரு விதி அல்ல மறுவிதி செய்வோம்.
இவண்:
K.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.