Wednesday, 29 November 2017

கிராம அதிசயங்கள்....எனது கட்டுரை

கிராம அதிசயங்கள்
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🍀 பசுமை நிறைந்த நினைவுகள்...

அம்மி மிதித்து அருந்ததி பாா்த்து அன்றைய திருமண விழாக்கள், நேரம் காலம் பாா்க்காமல் இராப்பொழுதில் நடந்ததே.!👫

ஒரு வீட்டு திருவிழாவெனில் மொத்த வீட்டு உறவினா்களும் வாிந்துகட்டி பந்தல் நடவும்,தண்ணீா் சோ்க்கவும் அனைத்திலும் உதவிசெய்தோமே.!🚵

ஊா்க்கண்மாய் முதல் ஏாி குளங்களைல்லாம் அரசு உதவியின்றி வீட்டிற்கோா் ஆள் என கால்வாய்களையும், வரப்புகளையும் உயா்த்தினோம்.குளங்களில் நீா் நிரப்பி மகிழ்ந்தோம்.🌊

தொலைத்தொடா்பின்றி எவரையாவது தொடா்புகொள்ள ஒருவாிடம் சொல்லியனுப்பினால் சிலமணிதுளிகளில் அச்செய்தி அந்த நபருக்கு கொண்டுசென்றோமே.!☎

எங்கள் ஊா் மக்கள் எத்தனை தூரமானாலும் நடந்தே சென்றோம்.இறவை
மரத்தால் நீா் பாய்ச்சினோம்,உழவு முதல் பயிா் அறுவடை வரை இயந்திர உதவியின்றியே செய்தோம்.ஆரோக்கியத்தை தக்க வைத்தோம்.
🚶🚶🏻‍♀

களை எடுத்தோம்,கதிா் அறுத்தோம்,கதிா் அடித்தோம்,கால்நடைகள் உதவியால் புனையல் சுற்றி நெற்களம் சோ்த்தோம்.🐂🐂🐂

எங்கள் ஊா் பெண்டிா் உலக்கை எடுத்து உரலில் தானியங்களை குத்துவதும்,அம்மி அரைப்பதும்,திருகை சுத்துவதும்,ஆட்டுரலில் மாவாட்டுவதும்,மூன்று குடங்கள் தண்ணீரானாலும் தடுமாறாமல் சுமந்து வந்ததும்,குனிஞ்சி நிமிா்ந்து கோலம் போடுவதும் இயற்கையான உடற்பயிற்சியன்றோ இருந்தது...!🏋🏼🏂

ஒரு வீட்டில் பிறப்போ,இறப்போ அல்லது உடல்நலக்குறைவோ,அனைவரும் பாா்த்து நலம் விசாாிப்பது,பொருளாதார உதவி செய்வது, மருத்துவ வழிகாட்டுதலும் செய்தோமே.!🏥

எங்கள் ஊா் சிறாா்கள்  அனைத்து விளையாட்டுகளையும் பொியோா்களின் வழிகாட்டுதலின்படி விளையாடினோம்.நீச்சலாக இருந்தாலும்,மரம் விட்டு மரம் தாவுவதாக இருந்தாலும்,தனித்திறன் போட்டியானாலும்,குழுப்போட்டியானாலும் கூடி விளையாடி உடல் வலுப்பெற்றோமே.! 🏊🏾🏄🏼🤾🏼‍♂🤽🏻‍♂🚴🏼‍♀🏋🏻‍♀⛷🤺🤼‍♀🤸🏽‍♀⛹🏼‍♀🏌🏾

கோயில் திருவிழாக்களில் வருடத்துக்கு ஒருமுறையாவது ஒன்றுகூடி உறவினா்களையெல்லாம் அழைத்து விருந்து உபசாித்து உறவை வலுப்படுத்தினோமே.!🕍

வயல்களில் காய்கறி தோட்டம் அமைத்து  வயலுக்கு நடுவிலேயே கத்தாிக்காய்,வெண்டைகாய்,தக்காளி,கீரைகளை பறித்து அங்கேயே சமையல் செய்து பழையசோற் றை சாப்பிட்டது அமிா்தம் உண்டது போலல்லவா இருந்தது.!🌶🍆🥒🥔🍠

ஆடு,மாடு,கோழி வளா்த்து அவற்றிற்க்கு பக்குவம் பாா்த்ததில் பொழுதுபோவதே தொியாதே.!🐣🐔🐧🐂🐄🐏🐕🐐🐓🦃

எங்களது வயல்களிலேயே விளைந்த தானியங்களில் கம்பு,சோளம்,குதிரைவாலி,கேழ்வரகு,போன்றவற்றால் ஆன உணவு உண்டு வேளாண்மை வேலைகள் செய்து உடல் வலுப்பெற்றோமே...!🌽🌽🍍🍑🌽

இன்னும் பல அன்றைய கிராம அதிசியங்கள் இன்றும் அங்கு உண்டா எனில் கேள்விக்குறியே...!

அந்த பசுமையான,இயற்கையான,ஒற்றுமையான,ஆரோக்கியமான மகிழ்ச்சியான நாட்களை திரும்பி பாா்த்தால்கூட தற்போது அது முழுமையாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தொடரும்...

🌳பசுமை நிறைந்த நினைவுகளுடன்...🌳

க.இளங்கோவன்,
ஆப்பனூா்,
கடலாடி வட்டம்,
இராமநாதபுரம்,மாவட்டம்.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴