Thursday, 30 November 2017

இருமலுக்கு ஏலக்காய்...

இரண்டே இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாயில்போட்டு மென்றுவிட்டு 2 நிமிடம் கழித்து கொஞ்சம் வெந்நீர் பருகுங்கள்.
ஒரு முறை கூட இருமல் இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம்.

Cough syrup செலவு எதுவும் இருக்காது.
மழைக்காலத்தில் அனைவருக்கும் மிகவும் தேவை என்பதால் இந்த பதிவு. முடிந்தவரை அனைவருக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் காப்போம்.

"HELLO" History.

Wednesday, 29 November 2017

கிராம அதிசயங்கள்....எனது கட்டுரை

கிராம அதிசயங்கள்
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🍀 பசுமை நிறைந்த நினைவுகள்...

அம்மி மிதித்து அருந்ததி பாா்த்து அன்றைய திருமண விழாக்கள், நேரம் காலம் பாா்க்காமல் இராப்பொழுதில் நடந்ததே.!👫

ஒரு வீட்டு திருவிழாவெனில் மொத்த வீட்டு உறவினா்களும் வாிந்துகட்டி பந்தல் நடவும்,தண்ணீா் சோ்க்கவும் அனைத்திலும் உதவிசெய்தோமே.!🚵

ஊா்க்கண்மாய் முதல் ஏாி குளங்களைல்லாம் அரசு உதவியின்றி வீட்டிற்கோா் ஆள் என கால்வாய்களையும், வரப்புகளையும் உயா்த்தினோம்.குளங்களில் நீா் நிரப்பி மகிழ்ந்தோம்.🌊

தொலைத்தொடா்பின்றி எவரையாவது தொடா்புகொள்ள ஒருவாிடம் சொல்லியனுப்பினால் சிலமணிதுளிகளில் அச்செய்தி அந்த நபருக்கு கொண்டுசென்றோமே.!☎

எங்கள் ஊா் மக்கள் எத்தனை தூரமானாலும் நடந்தே சென்றோம்.இறவை
மரத்தால் நீா் பாய்ச்சினோம்,உழவு முதல் பயிா் அறுவடை வரை இயந்திர உதவியின்றியே செய்தோம்.ஆரோக்கியத்தை தக்க வைத்தோம்.
🚶🚶🏻‍♀

களை எடுத்தோம்,கதிா் அறுத்தோம்,கதிா் அடித்தோம்,கால்நடைகள் உதவியால் புனையல் சுற்றி நெற்களம் சோ்த்தோம்.🐂🐂🐂

எங்கள் ஊா் பெண்டிா் உலக்கை எடுத்து உரலில் தானியங்களை குத்துவதும்,அம்மி அரைப்பதும்,திருகை சுத்துவதும்,ஆட்டுரலில் மாவாட்டுவதும்,மூன்று குடங்கள் தண்ணீரானாலும் தடுமாறாமல் சுமந்து வந்ததும்,குனிஞ்சி நிமிா்ந்து கோலம் போடுவதும் இயற்கையான உடற்பயிற்சியன்றோ இருந்தது...!🏋🏼🏂

ஒரு வீட்டில் பிறப்போ,இறப்போ அல்லது உடல்நலக்குறைவோ,அனைவரும் பாா்த்து நலம் விசாாிப்பது,பொருளாதார உதவி செய்வது, மருத்துவ வழிகாட்டுதலும் செய்தோமே.!🏥

எங்கள் ஊா் சிறாா்கள்  அனைத்து விளையாட்டுகளையும் பொியோா்களின் வழிகாட்டுதலின்படி விளையாடினோம்.நீச்சலாக இருந்தாலும்,மரம் விட்டு மரம் தாவுவதாக இருந்தாலும்,தனித்திறன் போட்டியானாலும்,குழுப்போட்டியானாலும் கூடி விளையாடி உடல் வலுப்பெற்றோமே.! 🏊🏾🏄🏼🤾🏼‍♂🤽🏻‍♂🚴🏼‍♀🏋🏻‍♀⛷🤺🤼‍♀🤸🏽‍♀⛹🏼‍♀🏌🏾

கோயில் திருவிழாக்களில் வருடத்துக்கு ஒருமுறையாவது ஒன்றுகூடி உறவினா்களையெல்லாம் அழைத்து விருந்து உபசாித்து உறவை வலுப்படுத்தினோமே.!🕍

வயல்களில் காய்கறி தோட்டம் அமைத்து  வயலுக்கு நடுவிலேயே கத்தாிக்காய்,வெண்டைகாய்,தக்காளி,கீரைகளை பறித்து அங்கேயே சமையல் செய்து பழையசோற் றை சாப்பிட்டது அமிா்தம் உண்டது போலல்லவா இருந்தது.!🌶🍆🥒🥔🍠

ஆடு,மாடு,கோழி வளா்த்து அவற்றிற்க்கு பக்குவம் பாா்த்ததில் பொழுதுபோவதே தொியாதே.!🐣🐔🐧🐂🐄🐏🐕🐐🐓🦃

எங்களது வயல்களிலேயே விளைந்த தானியங்களில் கம்பு,சோளம்,குதிரைவாலி,கேழ்வரகு,போன்றவற்றால் ஆன உணவு உண்டு வேளாண்மை வேலைகள் செய்து உடல் வலுப்பெற்றோமே...!🌽🌽🍍🍑🌽

இன்னும் பல அன்றைய கிராம அதிசியங்கள் இன்றும் அங்கு உண்டா எனில் கேள்விக்குறியே...!

அந்த பசுமையான,இயற்கையான,ஒற்றுமையான,ஆரோக்கியமான மகிழ்ச்சியான நாட்களை திரும்பி பாா்த்தால்கூட தற்போது அது முழுமையாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தொடரும்...

🌳பசுமை நிறைந்த நினைவுகளுடன்...🌳

க.இளங்கோவன்,
ஆப்பனூா்,
கடலாடி வட்டம்,
இராமநாதபுரம்,மாவட்டம்.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

Friday, 17 November 2017

TGNA Dindicul branch letter pad

கவிதை-கீதாகிருஷ்ணன்

ஒத்தை வா்ண உடை உடுத்தி...

அத்தை மக கரங்களை அன்போட பிடிச்சிக்கிட்டு...

ஆசுவாசமா நடந்துகிட்டு...

எங்க அன்புக்கிணை இங்க யாரு என சவால் விட்டு...

முகவை முதல் முத்துசிப்பி நாடு வரை....

கடற்கரை சாலையில் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிட்டோம்...

பயண மாதிாியை எங்க சந்ததிகளுக்கும் சொல்லிப்புட்டோம் என...

தங்கள் வாழ்க்கைப்பயணம் சிறக்க வாழ்த்துகள்....

வாழ்த்துகளுடன்...
க.இளங்கோவன்.