Sunday, 12 March 2017

திரு.அருள்குமாா் பதிவு 12/3/2017

TAMILNADU GOVERNMENT
****************************
NURSES ASSOCIATION
*************************

" Dear Brothers & Sisters. -ஒரு 5 நிமிடம் ஒதுக்குங்கள்"

Association Election issues.

V.Arulkumar, S.Palpandi, v.Balamurugan

             Vs

1) Tmt.Arivukan -president TGNA
2) Tmt.Leelavathy - Secretary TGNA

3)Tmt.Valarmathy -Thanjaore & candidates
4)Tmt.Kalliyammal -Govt.Stanely Hospital.
& Election office Bearers

அன்பு சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்.

நம் Nursing Department எப்பவாவது நல்ல முன்னேற்றம் அடையாதா ? என்ற சிந்தனை நம்மில் நிறைய பேருக்கு உண்டு.

காரணம் நம் வேலை நேரத்தில் Nursing Duty யுடன்  Non- Nursing Duty யை சேர்த்து செய்வதோடு மட்டுமில்லாமல் ,அரசு வழங்கும் ஊதிய உயர்வு மற்றும் இன்னபிற  உரிமைகளை பெற பத்துமுறை நடையாய் அலுவலகத்திற்கு அழைந்தும்   - அவ்வாறு செய்த வேலைக்கெல்லாம் கிடைப்பது பாராட்டை விட பழிச்சொல் தான் அதிகம்.

ஒரு Peaceful ஆன Duty நம்மில் ஒரு சிலருக்கு தான் வாய்க்கின்றது.

மற்றவர்களுக்கு எப்ப பாரு Tension, Tension தான்.

காரணம் என்ன :

மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்வது முதல் கடைநிலை ஊழியர்கள் செய்யும் வேலை வரை பெரும்பாலும் நம் தலையில் தான்.

தீர்வு :
இதற்கெல்லாம் ஒட்டுமொத்த தீர்வு என்ன
" செவிலிய சங்கத்திற்கு -நல்ல தலைமை "

நல்ல செவிலிய சங்க தலைமை எப்படி கிடைப்பார்கள்.?

செவிலியர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள்...

அந்த தேர்தல் எப்படி?

அதுதான் சென்னை உயர்நீதிமன்றம் வரை எங்களை நகர்த்தி சென்றது....

கடந்த 2015 ம் ஆண்டு மே மாதம் மாநில நிர்வாகிகள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் போது தேர்தல் நடத்த வேண்டும் என 2013 லிருந்து மாநில அரசிடம் வலியுறுத்தி தேர்தல் என்ற ஒன்றை பெற்று தந்தோம்.

வேறு வழியின்றி  18.04.2015 ல் தேர்தல் நடைபெற்றது.

நேர்மையான முறையில் நடைபெற வேண்டிய தேர்தல் -100 சதவீதம் விதிகளை மீறி நடைபெற்றது.

அதற்கு காரணம் என்ன?

முன்னாள் பொதுசெயலர் அவர்கள் தாம் நிறுத்திய அணி வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றை சுயநலம்....

நம் செவிலியத்திற்கு நல்ல காலம் இத்தேர்தல் மூலமாக ஏற்படாதா ?
என்று எதிர்பார்த்த எங்களுக்கு இவர்களின் தவறான அணுகுமுறை - எங்களை நீதிமன்றத்தில் முறையிட காரணமாக அமைந்தது.

2015 March மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் நேர்மையான தேர்தல் வேண்டியும், நீதிமன்றமே தேர்தலை நடத்த வேண்டும் என்றும்...

தேர்தல் முறைகேடானது -என்பது எங்கள் தரப்பின் வாதம்

தேர்தல் நேர்மையானது என்பது -
திருமதி.லீலாவதி மற்றும் திருமதி.வளர்மதி ஆகியோரின் வாதம்.

தேர்தலில் நடைபெற்ற விதிமீறல்களை ஆதரத்துடன் சமர்பித்தோம்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், விதிமீறல் எல்லைமீறி போயுள்ளது என்பதனை உறுதிசெய்து உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ரவிச்சந்திர பாபு அவர்கள் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கோரிய திருமதி.லீலாவதி மற்றும் திருமதி.வளர்மதி மனுக்களை 15.07.2015 அன்று தள்ளுபடி செய்தார்.

அதோடு வழக்கில் சம்பந்தபட்டவர்களை 15 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்திரவிட்டார்.

வழக்கின் தீர்ப்பில்
தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது, தற்போதைய நிர்வாகிகள் சங்க செயல்பாடுகளை முன்னெடுக்கவும் ,வழக்கை தாமதபடுத்தவும் கூடாது என குறிப்பிட்டிருந்தது.

அதில் குறிப்பிட்ட படி திருமதி.லீலாவதி அவர்களோ திருமதி. வளர்மதி அவர்களோ 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை.

இந்த தருணத்தில் திருமதி.லீலாவதி அவர்கள் சங்கத்தை ஒப்படைக்கிறேன் என்று 2 முறை Adhoc committee யை உருவாக்கினார்.
நாங்கள் வழக்கு தொடுத்தால் சங்கம் முடங்கிவிட்டதாக - பதவியை எதிர்பார்த்து  ஏமாந்த நபர்களால் மாநிலம் முழுவதும் உள்ள NURSING SUPERINTENDENT அலுவலகத்திற்கு முகவரி இல்லா கடிதம் அனுப்ப பட்டது.
அனைவரும் நம்ப வைக்கபட்டனர்.
உண்மையில் வழக்கின் தன்மை ASSOCIATION யை சீர்படுத்தவே என்பது வழக்கின் ஆவணங்களை முழுமையாக படித்தால் உண்மைபுரியும்.

ஓய்வுபெற்ற அவரை சங்கத்திலிருந்து நீக்கி தற்சமயம் அரசு பணியில் உள்ள 21 பேர் சங்கத்தை வழிநடத்தி சென்றிருக்க வேண்டும். அதற்குதான் அவர்களுக்கு பதவி. ஆனால் இந்த தேதி வரை அவர்கள் வெளிவரவில்லை என்பது தான் மிகவும் துரதிர்ஷ்டம்.
.

15 நாட்களுக்குள் பதில் அளிக்காததை - நமது தரப்பில்  நீதிமன்றத்தில் முறையிட்டும் ,பதிவும் செய்துள்ளோம்.

Civil வழக்கை பொறுத்துவரை ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமின்றி சம்பந்தபட்ட நபர்களை  சாட்சி கூண்டில் ஏற்றி விசாரித்த பின்னர் தான் தேர்தல் செல்லாது என்று அறிவிக்க முடியும்.

அதற்கான அடுத்தகட்ட விசாரணையை நோக்கி  வழக்கு நகரும் போது திடீரென திருமதி.வளர்மதி அவர்கள்
திருமதி.லீலாவதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல் நியாயமாகத்தான் நடைபெற்றது ,நீதியரசர் திரு.ரவிச்சந்திரபாபு அவர்களின் வழங்கிய தீர்ப்பு தவறு, அதனை இரத்து செய்து தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் மற்றும் திருமதி.லீலாவதி அவர்களின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்த வேண்டும் என மேல்முறையீடு சென்றார்.

அவர்களின் இரண்டாவது நிலைபாட்டினை நாமும் வழுக்கு விசாரணையின் எழுத்துபூர்வமாக அளித்திருந்தோம்.

வழங்கிய தீர்ப்பு வழக்கு தொடுத்த நம் தரப்பிற்கு சாதகமாக,அதாவது நாம் சுட்டிகாட்டிய விதிமீறல்களை அத்தனையும் உண்மை தான் என நீதிமன்றம் ஏற்றுகொண்டது.

தேர்தல் முடிவுகளை வெளியிட்டால் திருமதி.வளர்மதி அவர்கள் செயலாளர் பொறுப்பிற்கு வந்துவிடலாம் என்று எண்ணி 15 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்திரவிட்ட மாண்புமிகு நீதியரசர் அவர்களின் உத்தரவிற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் திருமதி.லீலாவதியை போன்றே காலம் கடத்தியவர்கள் ,சாட்சியங்களின் விசாரணையை ஆரம்பித்துவிட்டால் வழக்கு முடிவிற்கு வந்துவிடும் என எண்ணி 3 மாதத்திற்கு பிறகு மேல்முறையீடு சென்றனர்.

உயர்நீதிமன்றத்தில் THE HON'BLE Mr.SANJAY KISHAN KAUL,
CHIEF JUSTICE &
THE HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN அவர்களின் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இரண்டு நீதியரசர்களும் 1 வார கால அவகாசம் வழக்கு ஆவணங்களை பார்க்க எடுத்துகொள்வதாக கூறி அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கினர்.

11.07.2016 ல் திருமதி.வளர்மதி மற்றும் திருமதி.காளியம்மாள் ஆகியோரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்தது தலைமை நீதிபதி அமர்வு.

தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என திருமதி.வளர்மதி அவர்களின் சார்பில் வாதிடபட்டது.

வாதத்தை கேட்டபின்ன்னர் வழக்கு தொடுத்த நபர் வழக்கறிஞர்  யார்? இதில் உங்களின் பதில் என்ன தலைமை நீதியரசர் கேட்டபோது நம் தரப்பு வழக்கறிஞர் அவர்கள் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது, நீதியரசர் திரு.ரவிச்சந்திர பாபு அவர்களின் தீர்ப்பை உறுதிபடுத்த வேண்டும் ,தேர்தலை நீதிமன்றமே நடத்த வேண்டும் என பதில் அளித்தார்.அதனை முழுமையாக ஏற்றுகொண்ட தலைமை நீதிபதி அவர்கள் இந்த வழக்கிற்கு இது தான் நிரந்தர தீர்வாக அமையும் என கருத்து கூறவே அவர்களின் வழக்கறிஞர்களும் அதனை வேறுவழியின்றி ஏற்றுகொண்டனர்.

நம் வேண்டுகோளை முழுமையாக ஏற்றுகொண்டவர்கள் MR.JAYESH B.DOLIA அவர்களை தேர்தல் ஆணையராக நியமனம் செய்தனர்.

இந்த சூழ்நிலையில் 2 வாரத்தில் செவிலியர்களின் விபரங்களை அளிக்க வேண்டிய செவிலிய கண்காணிப்பாளர் அலுவலகம் (சிலர்)   8 மாதம் எடுத்த கொண்டதே கால தாமத்திற்கு - இரண்டாம் காரணம்.

தேர்தலை நீதிமன்றமே இன்னும் 1 மாதத்தில் நடத்த போகின்றது.

இந்த தகவல்களையெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் ஆவணங்களின் அடிப்படையிலியே  நம் சமூகம் அறிந்துகொள்ளும் பொருட்டு உண்மையை உரக்க சொல்கிறோம்.

ஊதியகுழுவில் சாதிக்கும் தலைமையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உங்களுக்கு மிகவும் கஷ்டபட்டு ஏற்படுத்தி தந்துள்ளோம்.

சில ஆவணங்களையும் ஆதாரத்தின் பொருட்டு இதில் இணைத்துள்ளோம்.

இந்த வழக்கினால் சட்ட பூர்வமான நண்மைகள் என்ன ?
நாளை..... வணக்கம் !!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு -  15.07.2015 ல் நீதியரசர் திரு.ரவிச்சந்திர பாபு அவர்களின் தீர்ப்பு மிகவும் சரியானது என்று தீர்ப்பு வழங்கியது.