Wednesday, 22 March 2017

இந்து மத ஒற்றுமை...படித்ததில் பிடித்தது....

ஆச்சிரியமூட்டும் உண்மைகள்....

கிறிஸ்துவ மதம் :-
-----------------------------
     தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ,உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்)

   ஆனால்... "லத்தீன் கத்தோலிக்" பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் "சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.

    இந்த இரண்டு பிரிவினரும் "மார்த்தோமா" இன சர்ச்சுக்குள் செல்வதில்லை.

    இந்த மூவருமே " பெந்தகொஸ்தே " திருச்சபைக்குள் நுழைய முடியாது.

     மேற்கண்ட நான்கு பிரிவினரும் "சால்வேஷன் ஆர்மி " தேவாலயத்துக்குள் செல்ல முடியாது.

      இந்த ஐவரும் "செவன்த்டே அட்வென்டிஸ்ட் " இன சர்சுக்குள் போக மாட்டார்கள்.

     இவர்கள் ஆறு   பிரிவினருமே "ஆர்த்தோடக்ஸ்" பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை.

    இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் "ஜேகோபைட் " பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

      இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே...

      ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்ற பிரிவினருடன் தங்கள் தேவாலயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

    ஆனால்... ..
              தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ஒரே மதம் (கிறிஸ்துவம்)    
               

அடுத்து முஸ்லீம் மதம் :-
------------------------------------
    "அல்லாஹ்" ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

   ஆனால்... இந்த ஒற்றுமையான மதத்திற்குள்ளே "ஷியா " மற்றும் "சன்னி " பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொன்று விடுவதும் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் சகஜம். கிட்டத்தட்ட பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் மத ரீதியான சண்டை நடைபெறுவது இந்த இரு பிரிவினருக்கு இடையே தான்.

      "ஷியா "பிரிவு முஸ்லீம்கள்" சன்னி " பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழையவே முடியாது.

      இந்த இரு பிரிவினரும்" அஹமதியா "பிரிவு முஸ்லீம்களின் மகதிக்குள் போக முடியாது.

     இந்த மூவருமே "ஷபி" பிரிவு மசூதிக்குள் நுழைய அனுமதியில்லை.

     மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருமே "முஜாஹைதீன் "இன மசூதிக்குள் செல்ல முடியாது.

   இது போல் இஸ்லாமில் 13 பிரிவினர் உள்ளனர்.

,ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை மொத்தமாக அழிப்பது இதெல்லாம் இவர்களுக்குள் சர்வ சாதாரணம்.

    அமெரிக்கா ஈராக்கை தாக்கி அதன் அதிபர் சதாம் உசேனை கொல்வதற்கு ஈராக்கை சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால்... .

அல்லாஹ் ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

"அமைதி மார்க்கம் இஸ்லாம்" ...

அடுத்தது "இந்து மதம் " :-
---------------------------------------
        இந்து மதத்தில் மொத்தம் 1280 மதப் புத்தகங்கள், 10,000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.

இருந்தும் ....
          எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம்.இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

    கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் "இந்து" மதமே.....

படித்ததில்  பிடித்தது.....

Wednesday, 15 March 2017

Writ petition என்றால் என்ன...?

➖➖➖➖➖➖➖➖➖➖➖
ரிட் மனு என்றால் என்ன ? ரிட் மனு எதற்கு தாக்கல் செய்யலாம் ?
➖➖➖➖➖➖➖➖➖➖➖
அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கோ என்ன செய்வது?

இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்றே இருக்கிறது ‘ரிட் மனு’.

அதென்ன ரிட்?

‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.

1. உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்தி ற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்த ரவு போடச் சொல்லி அரசாங் கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்தி ற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்ட ரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக் கும் மாசுக்கட்டுப்பாடு அலுவ லகத்தில் புகார் செய்யலாம்.

அறு பது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபர ப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்ப ட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்ப ளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்பு தான்.

*எந்தெந்த பிரச்னைகளுக்கு ‘ரிட் மனு’ தாக்கல் செய்ய லாம்?*

ஐந்து வகைகளில் ரிட் மனு வைத் தாக்கல் செய் யலாம்.

1. முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணை யிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யா விட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந் தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண் டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

சாலையின் பிளாட்பார ஆக் கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்ய லாம்.

2.அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’ ஒரு ஹை கோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமு றையை உணர்த்து ம்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. என்ன புரியவில்லையா? உதார ணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத் தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ் பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷப ணையைப் பரிசீலி க்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந் தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

3.மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லா மல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவி யின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித் தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்ய லாம்.

4.அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பத ற்காகப் போடப்படுவது இது.

5.அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட். இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டு மானாலும் போடலாம். ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[2:37pm, 15/03/2017] bsc rajaram. senior: ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி?*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ வாங்கித்தர முடியும். நுகர்வோருக்கான நஷ்ட ஈட்டையும் பெற முடியும். இதற்காக 24 டிசம்பர் 1986 அன்று கொண்டுவரப்பட்டது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். இதன்படி வங்கி, காப்பீடு, நிதி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவ சேவை, உணவு விடுதி, மின்சாரம் என எந்த விஷயங்களில் நுகர்வோரின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் நுகர்வோர் மன்றத்தை அணுகலாம். நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி? என்னென்னெ ஆவணங்கள் தேவை ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நுகர்வோர் என்பவர் யார்?

ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ பணம் கொடுத்துப் பெறும் யாவரும் நுகர்வோர்களே.

உதாரணமாக: மளிகைக் கடையில் பொருள் வாங்கினாலும், மருத்துவமனையில் காய்ச்சலுக்குப் பார்த்தாலும் நீங்கள் நுகர்வோரே.

*யார் / யாரெல்லாம் புகாரளிக்கலாம்?*

ஒரு சேவையைப் பெறுகிற, பொருளை வாங்குகிற எந்த ஒரு நுகர்வோரோ, பதிவு செய்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளோ புகார் அளிக்கலாம். தனி நபராகவோ, ஒரே நோக்கம் கொண்ட பல நுகர்வோர்களின் சார்பாக கூட்டாகவோ புகாரளிக்கலாம்.

ஒரு சேவையை அல்லது பொருளை மற்றவர்களுக்கு விற்பதற்காக வாங்குகிற அல்லது மதிப்புக் கூட்டி விற்கிறவர்கள் நுகர்வோர் அல்ல.
*ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க வேண்டும்?*

காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்த்து குறுகிய காலத்திலும், அதே சமயம் அதிக செலவில்லாமலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க எல்லா மாவட்டங்களிலும் நுகர்வோர் மன்றம் செயல்படுகின்றன.

நுகர்வோருக்கு சேவைக்குறைபாடு ஏற்பட்டு அதை கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவித்தும் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் மன்றத்தை அணுக வேண்டும்.

*எங்கே புகாரளிப்பது?*

நுகர்வோர் எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அங்கே புகாரளிக்கலாம் அல்லது எந்த இடத்தில் பொருள் வாங்கப்பட்டதோ அல்லது எந்த இடத்தில் நுகர்வோர் உரிமை மீறப்பட்டதோ அந்த இடத்திற்குட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.

*எப்படி விண்ணப்பிப்பது?*

ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து, இதற்கான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து பொருள் மதிப்பிற்குத் தகுந்தவாறு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ, விரைவுத் தபால் மூலமாகவோ வழக்குகளைப் பதிவு செய்து, இந்த வழக்கின் நகலை எதிர்த்தரப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

*கட்டணம் எவ்வளவு?*

1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = a100 /-
1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

*நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கத் தேவையான தகுதிகள்:*

· புகாரளிப்பவர் நுகர்வோராக இருக்க வேண்டும் அல்லது அவர் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

· சேவைக் குறைபாடு அல்லது பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.

· *எந்த ஒரு புகாருக்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.*
*என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?*
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க ஆதாரங்கள் அவசியம். எனவே எந்த சேவைக் குறைபாடு ஏற்படுகிறதோ அவர்களிடம் முதலில் புகார் செய்ததற்கான ஒளி நகல், பொருள் / சேவை பெற்ற ரசீதுகள், கடிதப் போக்குவரத்துகள் என அனைத்து ரசீதுகளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் குறைபாட்டைப் பொறுத்து
ஆதாரங்களின் தன்மையும் வேறுபடும்.

*யார் மீதெல்லாம் புகாரளிக்க முடியும்?*

நுகர்வோருக்குப் பொருட்களை விற்பனை செய்யும், பணம் பெற்றுக் கொண்டு சேவையை வழங்கும் எந்த நிறுவனத்தின் மீதும் புகாரளிக்க முடியும். அரசுத் துறை, தனியார் துறை என்ற பாகுபாடு கிடையாது.

ஆன்லைனில் புகாரளிக்க:

· நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் பேச்சுவார்த்தைக்கு அல்லது உடனடி நிவாரணம் கிடைக்க மாநில நுகர்வோர் உதவி மையத்தை அணுகலாம். நுகர்வோர் தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டைக் கூறி அதற்கு ஆலோசனை பெறலாம். பின்னர் இவர்களது வழிகாட்டுதலின்படி நுகர்வோர் மன்றத்தை அணுகலாம்.

· மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொடர்பு எண் 044 – 2859 2828. இந்த எண்ணுக்கு அழைத்ததும் 9 என்ற எண்ணை அழுத்தினால், புகார்களை தெரிவிக்கலாம். 1 என்ற எண்ணை அழுத்தினால், நுகர்வோருக்கான உரிமைகள் என்ன? நுகர்வோரின் கடமைகள் என்ன போன்ற விவரங்களைப் பதிவு செய்யப்பட்ட குரலில் கேட்கலாம்.

· consumer@tn.gov.in, schtamilnadu@gmail.comஎன்ற மின்னஞ்சலிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரியில் தபாலிலோ, நேரிலோ புகார் அளிக்கலாம். www.consumer.tn.gov.in என்கிற இத்தளத்திற்கும் செல்லலாம்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Sunday, 12 March 2017

திரு.அருள்குமாா் பதிவு 12/3/2017

TAMILNADU GOVERNMENT
****************************
NURSES ASSOCIATION
*************************

" Dear Brothers & Sisters. -ஒரு 5 நிமிடம் ஒதுக்குங்கள்"

Association Election issues.

V.Arulkumar, S.Palpandi, v.Balamurugan

             Vs

1) Tmt.Arivukan -president TGNA
2) Tmt.Leelavathy - Secretary TGNA

3)Tmt.Valarmathy -Thanjaore & candidates
4)Tmt.Kalliyammal -Govt.Stanely Hospital.
& Election office Bearers

அன்பு சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்.

நம் Nursing Department எப்பவாவது நல்ல முன்னேற்றம் அடையாதா ? என்ற சிந்தனை நம்மில் நிறைய பேருக்கு உண்டு.

காரணம் நம் வேலை நேரத்தில் Nursing Duty யுடன்  Non- Nursing Duty யை சேர்த்து செய்வதோடு மட்டுமில்லாமல் ,அரசு வழங்கும் ஊதிய உயர்வு மற்றும் இன்னபிற  உரிமைகளை பெற பத்துமுறை நடையாய் அலுவலகத்திற்கு அழைந்தும்   - அவ்வாறு செய்த வேலைக்கெல்லாம் கிடைப்பது பாராட்டை விட பழிச்சொல் தான் அதிகம்.

ஒரு Peaceful ஆன Duty நம்மில் ஒரு சிலருக்கு தான் வாய்க்கின்றது.

மற்றவர்களுக்கு எப்ப பாரு Tension, Tension தான்.

காரணம் என்ன :

மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்வது முதல் கடைநிலை ஊழியர்கள் செய்யும் வேலை வரை பெரும்பாலும் நம் தலையில் தான்.

தீர்வு :
இதற்கெல்லாம் ஒட்டுமொத்த தீர்வு என்ன
" செவிலிய சங்கத்திற்கு -நல்ல தலைமை "

நல்ல செவிலிய சங்க தலைமை எப்படி கிடைப்பார்கள்.?

செவிலியர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள்...

அந்த தேர்தல் எப்படி?

அதுதான் சென்னை உயர்நீதிமன்றம் வரை எங்களை நகர்த்தி சென்றது....

கடந்த 2015 ம் ஆண்டு மே மாதம் மாநில நிர்வாகிகள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் போது தேர்தல் நடத்த வேண்டும் என 2013 லிருந்து மாநில அரசிடம் வலியுறுத்தி தேர்தல் என்ற ஒன்றை பெற்று தந்தோம்.

வேறு வழியின்றி  18.04.2015 ல் தேர்தல் நடைபெற்றது.

நேர்மையான முறையில் நடைபெற வேண்டிய தேர்தல் -100 சதவீதம் விதிகளை மீறி நடைபெற்றது.

அதற்கு காரணம் என்ன?

முன்னாள் பொதுசெயலர் அவர்கள் தாம் நிறுத்திய அணி வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றை சுயநலம்....

நம் செவிலியத்திற்கு நல்ல காலம் இத்தேர்தல் மூலமாக ஏற்படாதா ?
என்று எதிர்பார்த்த எங்களுக்கு இவர்களின் தவறான அணுகுமுறை - எங்களை நீதிமன்றத்தில் முறையிட காரணமாக அமைந்தது.

2015 March மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் நேர்மையான தேர்தல் வேண்டியும், நீதிமன்றமே தேர்தலை நடத்த வேண்டும் என்றும்...

தேர்தல் முறைகேடானது -என்பது எங்கள் தரப்பின் வாதம்

தேர்தல் நேர்மையானது என்பது -
திருமதி.லீலாவதி மற்றும் திருமதி.வளர்மதி ஆகியோரின் வாதம்.

தேர்தலில் நடைபெற்ற விதிமீறல்களை ஆதரத்துடன் சமர்பித்தோம்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், விதிமீறல் எல்லைமீறி போயுள்ளது என்பதனை உறுதிசெய்து உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ரவிச்சந்திர பாபு அவர்கள் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கோரிய திருமதி.லீலாவதி மற்றும் திருமதி.வளர்மதி மனுக்களை 15.07.2015 அன்று தள்ளுபடி செய்தார்.

அதோடு வழக்கில் சம்பந்தபட்டவர்களை 15 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்திரவிட்டார்.

வழக்கின் தீர்ப்பில்
தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது, தற்போதைய நிர்வாகிகள் சங்க செயல்பாடுகளை முன்னெடுக்கவும் ,வழக்கை தாமதபடுத்தவும் கூடாது என குறிப்பிட்டிருந்தது.

அதில் குறிப்பிட்ட படி திருமதி.லீலாவதி அவர்களோ திருமதி. வளர்மதி அவர்களோ 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை.

இந்த தருணத்தில் திருமதி.லீலாவதி அவர்கள் சங்கத்தை ஒப்படைக்கிறேன் என்று 2 முறை Adhoc committee யை உருவாக்கினார்.
நாங்கள் வழக்கு தொடுத்தால் சங்கம் முடங்கிவிட்டதாக - பதவியை எதிர்பார்த்து  ஏமாந்த நபர்களால் மாநிலம் முழுவதும் உள்ள NURSING SUPERINTENDENT அலுவலகத்திற்கு முகவரி இல்லா கடிதம் அனுப்ப பட்டது.
அனைவரும் நம்ப வைக்கபட்டனர்.
உண்மையில் வழக்கின் தன்மை ASSOCIATION யை சீர்படுத்தவே என்பது வழக்கின் ஆவணங்களை முழுமையாக படித்தால் உண்மைபுரியும்.

ஓய்வுபெற்ற அவரை சங்கத்திலிருந்து நீக்கி தற்சமயம் அரசு பணியில் உள்ள 21 பேர் சங்கத்தை வழிநடத்தி சென்றிருக்க வேண்டும். அதற்குதான் அவர்களுக்கு பதவி. ஆனால் இந்த தேதி வரை அவர்கள் வெளிவரவில்லை என்பது தான் மிகவும் துரதிர்ஷ்டம்.
.

15 நாட்களுக்குள் பதில் அளிக்காததை - நமது தரப்பில்  நீதிமன்றத்தில் முறையிட்டும் ,பதிவும் செய்துள்ளோம்.

Civil வழக்கை பொறுத்துவரை ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமின்றி சம்பந்தபட்ட நபர்களை  சாட்சி கூண்டில் ஏற்றி விசாரித்த பின்னர் தான் தேர்தல் செல்லாது என்று அறிவிக்க முடியும்.

அதற்கான அடுத்தகட்ட விசாரணையை நோக்கி  வழக்கு நகரும் போது திடீரென திருமதி.வளர்மதி அவர்கள்
திருமதி.லீலாவதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல் நியாயமாகத்தான் நடைபெற்றது ,நீதியரசர் திரு.ரவிச்சந்திரபாபு அவர்களின் வழங்கிய தீர்ப்பு தவறு, அதனை இரத்து செய்து தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் மற்றும் திருமதி.லீலாவதி அவர்களின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்த வேண்டும் என மேல்முறையீடு சென்றார்.

அவர்களின் இரண்டாவது நிலைபாட்டினை நாமும் வழுக்கு விசாரணையின் எழுத்துபூர்வமாக அளித்திருந்தோம்.

வழங்கிய தீர்ப்பு வழக்கு தொடுத்த நம் தரப்பிற்கு சாதகமாக,அதாவது நாம் சுட்டிகாட்டிய விதிமீறல்களை அத்தனையும் உண்மை தான் என நீதிமன்றம் ஏற்றுகொண்டது.

தேர்தல் முடிவுகளை வெளியிட்டால் திருமதி.வளர்மதி அவர்கள் செயலாளர் பொறுப்பிற்கு வந்துவிடலாம் என்று எண்ணி 15 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்திரவிட்ட மாண்புமிகு நீதியரசர் அவர்களின் உத்தரவிற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் திருமதி.லீலாவதியை போன்றே காலம் கடத்தியவர்கள் ,சாட்சியங்களின் விசாரணையை ஆரம்பித்துவிட்டால் வழக்கு முடிவிற்கு வந்துவிடும் என எண்ணி 3 மாதத்திற்கு பிறகு மேல்முறையீடு சென்றனர்.

உயர்நீதிமன்றத்தில் THE HON'BLE Mr.SANJAY KISHAN KAUL,
CHIEF JUSTICE &
THE HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN அவர்களின் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இரண்டு நீதியரசர்களும் 1 வார கால அவகாசம் வழக்கு ஆவணங்களை பார்க்க எடுத்துகொள்வதாக கூறி அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கினர்.

11.07.2016 ல் திருமதி.வளர்மதி மற்றும் திருமதி.காளியம்மாள் ஆகியோரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்தது தலைமை நீதிபதி அமர்வு.

தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என திருமதி.வளர்மதி அவர்களின் சார்பில் வாதிடபட்டது.

வாதத்தை கேட்டபின்ன்னர் வழக்கு தொடுத்த நபர் வழக்கறிஞர்  யார்? இதில் உங்களின் பதில் என்ன தலைமை நீதியரசர் கேட்டபோது நம் தரப்பு வழக்கறிஞர் அவர்கள் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது, நீதியரசர் திரு.ரவிச்சந்திர பாபு அவர்களின் தீர்ப்பை உறுதிபடுத்த வேண்டும் ,தேர்தலை நீதிமன்றமே நடத்த வேண்டும் என பதில் அளித்தார்.அதனை முழுமையாக ஏற்றுகொண்ட தலைமை நீதிபதி அவர்கள் இந்த வழக்கிற்கு இது தான் நிரந்தர தீர்வாக அமையும் என கருத்து கூறவே அவர்களின் வழக்கறிஞர்களும் அதனை வேறுவழியின்றி ஏற்றுகொண்டனர்.

நம் வேண்டுகோளை முழுமையாக ஏற்றுகொண்டவர்கள் MR.JAYESH B.DOLIA அவர்களை தேர்தல் ஆணையராக நியமனம் செய்தனர்.

இந்த சூழ்நிலையில் 2 வாரத்தில் செவிலியர்களின் விபரங்களை அளிக்க வேண்டிய செவிலிய கண்காணிப்பாளர் அலுவலகம் (சிலர்)   8 மாதம் எடுத்த கொண்டதே கால தாமத்திற்கு - இரண்டாம் காரணம்.

தேர்தலை நீதிமன்றமே இன்னும் 1 மாதத்தில் நடத்த போகின்றது.

இந்த தகவல்களையெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் ஆவணங்களின் அடிப்படையிலியே  நம் சமூகம் அறிந்துகொள்ளும் பொருட்டு உண்மையை உரக்க சொல்கிறோம்.

ஊதியகுழுவில் சாதிக்கும் தலைமையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உங்களுக்கு மிகவும் கஷ்டபட்டு ஏற்படுத்தி தந்துள்ளோம்.

சில ஆவணங்களையும் ஆதாரத்தின் பொருட்டு இதில் இணைத்துள்ளோம்.

இந்த வழக்கினால் சட்ட பூர்வமான நண்மைகள் என்ன ?
நாளை..... வணக்கம் !!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு -  15.07.2015 ல் நீதியரசர் திரு.ரவிச்சந்திர பாபு அவர்களின் தீர்ப்பு மிகவும் சரியானது என்று தீர்ப்பு வழங்கியது.