Forwarded message.
***
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒருவாரம் ஆன நிலையில், வங்கிகளில் இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை. மக்கள் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றர். ஒரு சில உயிரிழப்புகள். பழைய நிலமை திரும்ப இன்னும் ஒரிரு வாரங்கள் ஆகும் என்கிறனர். வெறும் 6% கறுப்பு பணத்தை ஒழிக்க அனைத்து மக்களையும் அவதிப்படுத்துவதா? என ஆளாளுக்கு அரசைத் சரமாரியாகத் தாக்கி வருகிறார்கள். கள்ளப்பண ஒழிப்பு மற்றும் கருப்புப் பண ஒழிப்பு ஆகியவை இந்தத் திட்டத்தோட நோக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது.
வெறும் 400 கோடி கள்ளப் பணத்தை ஒழிக்க, 17 லட்சம் கோடி பணத்தை முடக்குவதான்னு ப.சிதம்பரம் கொதிச்சிருக்காரு. வங்கிகள்ல இதுவரைக்கும் சுமார் 56000 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கு. இந்த 56000 கோடியுமே நேர்மையான வழியில சம்பாதிச்சி, சரியா வரி கட்டிக்கிட்டு இருக்கவங்களோட பணம்னு வச்சிக்குவோம்.
இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிற பலருடைய குமுறல் என்னன்னா, பேங்குல அம்பானியோ அதானியோ நிக்கல. ஏழை மக்கள்தான் நிக்கிறாங்க. பின்ன எப்படி இதால கருப்புப் பணம் ஒழியும்னு சொல்றீங்கன்னு தான். அவர்களுக்கும் சரி அவர்களைப் போல சந்தேகம் இருக்கும் பலருக்கும் சரி என்னுடைய புரிதலில் ஒரு சின்ன விளக்கம்.
உண்மை என்னன்னா கருப்பு பணம் வச்சிருக்கவங்க பேங்குல வந்து நின்னு, அவங்க கையில இருக்க பணத்த வரி கட்டி பேங்குல டெபாசிட் பன்னாதான் கருப்புப் பணம் ஒழியும்னு இல்லை. அவங்க பேசாம இருந்தாலே போதும் அரசாங்கத்துக்கு எல்லாம் லாபம் தான். இந்தப் பதிவில் சொல்லப்போகும் சில அடிப்படை விவரங்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்காக.
ஒரு அரசாங்கம் அதுக்கு வேணும்ங்குற அளவு பணத்தை அச்சடிக்க முடியாதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஏன் அப்படி? வேணும்ங்குற பணத்த அடிச்சி கடனெல்லாம் குடுத்துடலாமே? ஏழைகளுக்கு குடுத்து பணக்காரனாக்கிடலாமே? அதான் முடியாது. ஒரு சின்ன உதாரணம்.
ஒருத்தர்கிட்ட 100 தங்கக் காசு இருக்குன்னு வச்சிக்குவோம். அவருக்கு 5 குழந்தைங்க. அந்த 5 பேருக்கும் இருபது இருபது தங்கக்காசா பிரிச்சி குடுக்குறாரு. தங்கக் காச கையில குடுக்குறதுக்கு பதிலா 5 ரசீது அடிச்சி அதுல 20 ன்னு ப்ரிண்ட் பன்னி குடுக்குறாரு. அதாவது ஒரு ரசீதோட மதிப்பு 20 தங்கக் காசு. இப்ப 5 குழந்தைகள்கிட்டயும் உள்ள மொத்த தங்கக் காசோட மதிப்பு 100. கொஞ்ச நாள்ல அந்த 5 பேரும் கல்யாணம் பன்னிக்கிரானுங்க. இப்ப 5 பேரா இருந்த குடும்பம் 10 பேர் ஆயிருச்சி. புதுசா வந்த 5 பேருக்கும் செலவுக்கு காசு வேணும்.
இப்ப புதுசா வந்தவங்க செலவுக்காக அதே மாதிரி இன்னொரு 5 ரசீத அடிச்சி குடுத்திட முடியாது. ஏன்னா நம்மாளுக்கிட்ட இருக்கதே 100 தங்கக் காசுதான். ஏற்கனவே அந்த நூறுக்கான ரசீத அச்சடிச்சிட்டோம். இப்ப புதுசா வந்த 5 பேருக்கும் காசு குடுக்கனும்னா இன்னொரு 5 ரசீத அடிச்சி குடுக்கலாம். ஆனா முன்னால 20 தங்கக்காசா இருந்த ஒரு ரசீதோட மதிப்பு இப்போ வெறும் 10 தங்கக் காசாத்தான் இருக்கும். ஆக அவர்கிட்ட இருக்க தங்கக் காசுக்கு ஏத்த மாதிரியான ரசீதத் தான் அடிக்க முடியுமே தவிற, அவர் அடிக்கிற ரசீதுக்கு ஏத்த மாதிரி தங்கக் காசு அதிகமாயிடாது.
அதே மாதிரிதான் ஒரு நாட்டோட மதிப்பை பொறுத்துதான் அந்த நாட்டுக்கு எவ்வளவு ரூவா நோட்டு அடிக்கலாம்ங்குற வரைமுறை. ஒரு நாட்டோட மதிப்புங்கறது அந்த நாட்டுல உள்ள தங்கம் அல்லது பெட்ரோல் போன்ற வளங்களைப் பொறுத்து அமையும். இத யார் decide பன்றது, நோட்டு அடிக்க யார்கிட்ட பர்மிஷன் வாங்கனும்ங்குறதெல்லாம் வேற கதை. பேசிக் மேட்டர் இது தான்.
இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம். மொதல்ல கருப்பு பணத்தால என்ன பாதிப்பு? ஒரு நாட்டுல பணப் புழக்கம்ங்குறது ரொம்ப முக்கியம். விலைவாசி ஏற்றம் வரி ஏற்றம் போன்ற பல காரணிகளைப் பாதிப்பது இந்தப் பணப் புலக்கம் தான்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கு. அதன்படி தான் வியாபாரம் செய்யனும். அப்படி வியாபாரம் செஞ்ச பொருளுக்கு வரி கட்டனும். இதுதான் சட்டம். உதாரணமா அரசாங்கம் ஒரு பத்து ”ஒரு ரூபா” நாணயங்களை அடிச்சி புழக்கத்துல விடுதுன்னு வச்சிக்குவோம். எல்லாரும் வியாபாரம் பன்றாங்க ஒவ்வொருத்தர்கிட்டயா அந்த ஒரு ரூபா சுத்திக்கிட்டு இருக்கு. இப்ப இந்த பத்து பேர்ல ஒருத்தன் எதோ ஒரு பொருளுக்கு விலை ஏத்தி வித்து, ஒரு ரூபா வரவேண்டிய இடத்துல அவனுக்கு ரெண்டு ரூபா கிடைச்சிருது. இப்ப எக்ஸ்ட்ராவா வந்த ஒரு ரூபாய்க்கு அவன் வரி கட்டனும் அல்லது எப்படி அந்த ஒரு ரூபா வந்துச்சின்னு சொல்லனும். வரி கட்டி அந்த ஒரு ரூபாயில கால்வாசிய இழக்க விரும்பல. அதனால என்ன பன்றான் எக்ஸ்ட்ராவா வந்த ஒரு ரூபாய முழுசா எடுத்து பத்தரமா பீரோவுல வச்சிடுறான்.
இப்ப என்னாகுது மார்க்கெட்டுல 10 ரூபா சுத்திக்கிட்டு இருந்த இடத்துல இப்ப 9 ரூபாதான் சுத்துது. இதே மாதிரி இன்னும் ரெண்டு பேர் ஒவ்வொரு ரூபா பதுக்குறான்னு வச்சிக்குவோம். 10 ரூபா புழங்க வேண்டிய இடத்துல வெறும் 7 ரூபாதான் புழங்கும். 3 ரூபா யாருக்கும் பயன்படாம பீரோக்குள்ள தூங்கும். அந்த மூணு ரூபாய எந்தக் காலத்துக்கும் லீகலான விஷயத்துக்கு அவன் பயன்படுத்த மாட்டான். அவன்கிட்டருந்து இன்னொருத்தனுக்கு போகும் போது, அவன்கிட்டயும் அது கணக்குல வராத பணமாதான் இருக்கும். அப்படி கணக்குல வர்ற சமயத்துல அது கருப்பு பணமா இருக்காது.
இப்ப என்னாகுது அரசாங்கத்தோட மதிப்பு 10 ரூபா. ஆனா மார்க்கெட்டுல புழக்கத்துல இருக்கது வெறும் 7 ரூபா. 3 ரூபா எங்க போச்சுன்னே தெரியல. அதுக்கான வரியும் வரல. வர வேண்டிய வரி வரததால அரசாங்கத்துக்கு நிதி பத்தாம வரி விகிதங்கள அதிகப்படுத்தினாதான் நிலமைய சமாளிக்க முடியும்ங்குற நிலை வருது. பொருட்களோட விலைவாசியும் ஏறுது.
சரி இப்ப இந்த 500/1000 ரூபா நோட்டுகள் செல்லாதுன்னு அறிவிச்சதால கருப்பு பணம் எப்படி அரசாங்கத்துக்கு முழுமையா சேரும்? உதாரணமா நம்ம நாட்டுல புலங்குற 500 மற்றும் 1000 ரூபாயோட மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி வச்சிக்குவோம். அதுல ஒரு பத்தாயிரம் கோடி கருப்புப் பணமா பதுக்கப்பட்டிருக்குன்னு வச்சிக்குவோம்.
இப்போ அரசாங்கம் பழைய ஒரு லட்சம் கோடி ரூபாயையும் செல்லாதுன்னு அறிவிச்சாசிட்டு அதே ஒரு லட்சம் கோடிக்கு புதிய 2000 மற்றும் 500 ரூபா நோட்டுக்கள் அடிக்கிறாங்க. மேல சொன்னபடி நம்ம மார்க்கெட்டுல பழைய ஒருலட்சம் கோடில 90,000 கோடிதான் புழக்கத்துல இருக்கு. அதயெல்லாம் நேரடியா பேங்குல குடுத்து புது நோட்டா வாங்கிருவாங்க. இப்ப பதுக்கப்பட்ட கருப்புப் பணம் பத்தாயிரம் கோடிய என்ன செய்யனும்? ஒண்ணு பதுக்கியிருக்கவங்க அத வங்கியில குடுத்து அதற்காக வரியை அரசாங்கத்துக்கு செலுத்திட்டு, வெள்ளையாக்கலாம். அப்படி செஞ்சா ஒருலட்சம் கோடியும் மறுபடி மார்க்கெட்டுல புலக்கத்துக்கு வந்துடும்.
அப்படி இல்லாம அந்த பத்தாயிரம் கோடிய வெளில கொண்டு வந்து ஏன் மாட்டிக்கனும். நாம இருக்க இடம் தெரியாம இருந்துடுவோம்னு நினைச்சா கூ ஒண்ணும் ப்ரச்சனை இல்லை. அரசாங்கத்தால அச்சடிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடியில, 90 ஆயிரம் கோடி பணம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு மிச்சம் இருக்க பத்தாயிரம் கோடி அரசாங்கத்திடமே இருக்கும். நேரடியாக அரசாங்க நிதியில அது சேர்ந்துடும். அம்பானியோ அதானியோ வரிசையில வந்து நிக்க வச்சிதான் கருப்பு பணத்த வெளில கொண்டு வரனும்னு இல்லை. அவனுங்க வந்தாலும் சரி வராட்டியும் சரி. அரசாங்கத்துக்கு லாபம் தான்.
அப்படி அரசுக்கு கிடைக்கும் கருப்பு பணங்களை முறையா பயன்படுத்துதா, இல்ல அடுத்தவன் ஆட்டைய போடுறானாங்குறது அடுத்த விஷயம். ஆனா இப்ப கொண்டு வந்த இந்தத் திட்டம் சிலர் கிளப்புவதைப் போல பயனற்ற திட்டமாக வாய்ப்புகளே இல்லை. மக்களுக்கு சில நாட்களுக்கு இடையூறே தவிற, திட்டத்திற்கான பலன் நிச்சயம் உண்டு.