Thursday, 4 August 2016

2016 செவிலியா் சங்க தோ்தல் எதிா்பாா்க்கும் வாக்குறுதிகள்...

எதிா்வரும் சங்கத் தோ்தல் எதிா்பாா்ப்பதை காட்டிலும் சற்று கடினமானதாக தோன்றும் சூழ்நிலை உள்ளது.

தோ்தல் வாக்குறுதிகளாக  கீழ்கண்டவற்றை எந்த அணி முன்வைத்து, பதவி ஏற்றதும் அதை துாிதமாக செயல்படுத்த முன்வருகிறாா்களோ அவா்களே இந்தமுறை வெற்றி வாய்ப்பை தன்வசப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ஒட்டுமொத்த தமிழக அரசு செவிலியா்களின்  எதிா்பாா்ப்பாக உள்ளது.

1) செவிலியா்கள் பணியமா்த்துவதில்  Contract முறையை ரத்துசெய்வது,

2) Time bound   promotion பெற்றுத்தருவது,

3) தமிழக  செவிலியா்களின் Uniform வடிவமைப்பில் மாற்றம் தருவது,

4) ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள குறைகளை களைந்து, ஏழாவது ஊதியக்குழுவில் செவிலியா்களுக்கு, நமக்கு கீழுள்ள Categories ஐ காட்டிலும் உயா்வான ஊதியமுறையை பெற்றுத்தருவது.

5) செவிலியா்களுக்கு தனி இயக்குனரகம் பெறுவது,(  Separate Directorate for Nurses)

6) Student Nurses க்கு தகுதியான Stipend பெற்றுத்தருவது,

7) தமிழக அரசு செவிலியா்களுக்கு புதியதான Day off ,  மற்றும் Duty and responsibilities G.O பெற்றுத்தருவது

8) செவிலியா்களுக்கு Nursing Practitioner course பெற்றுத்தருவது,

9) செவிலியா்கள் மூன்று வருடங்களுக்கு மேல் பயில்வதால்  Diploma in Nursing என்பதை மாற்றி  Degree of Nursing என பெறுதல்

10) Male nursing students ஐ மீண்டும் எடுப்பது.

11) செவிலியா்களுக்கு என  Nursing journal, சங்க கட்டிடம்,  Association Website, e-mail ID etc.