For Tamilnadu Government Nurse's.
அரசு நர்சுகள் புதிய சங்கம் ? ??
சமூக வலைதளங்களில் ஒரு வார காலமாக செவிலியர்களுக்கு புதியதாக சங்கம் ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வருகின்றது.
சங்கம் என்பது ஒட்டுமொத்த உறுப்பினர்களின் தார்மீக உரிமையை நிலை நிறுத்துமிடம்.
சங்கத்தில் ஒவ்வொருக்கும் ஒரு நிலைபாடும், கருத்துகளும் இருக்கும்.
கருத்துரிமை, மாறுபட்ட கருத்துகள் - ஜனநாயத்தின் ஆணிவேர்.
நமது தமிழகத்தில் அரசு பணியில் உள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் சங்கத்தை நடத்தி வந்தாலும் வெறும் 119 சங்கங்கள் மட்டுமே அரசு அங்கீகாரம் பெற்ற சங்கமாகும்.
அதில் நமது அரசு நர்சுகள் சங்கம்
நம் முன்னோர்களால் 1920 ம் ஆண்டே தோற்றுவிக்கபட்டு 1961 ம் ஆண்டே அரசு அங்கீகாரமும் பெற்று தந்துள்ளனர்.
இந்த சங்கமே 1958 ம் ஆண்டில் நிறுத்தம் செய்யபட்ட ஆண் செவிலிய பயிற்சியை 30 ஆண்டுகள் கழித்து 1988 ம் ஆண்டில் பயிற்சி எடுக்க வழிவகுத்தது.
இந்த சங்கமே அவ்வாறு பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு 1: 10 என்ற விகிதாச்சார முறையில் அரசு பணியையும் பெற்று தந்தது.
இந்த சங்கமே மாடாய் உழைத்து தேய்ந்த நம் மூத்த பெண் செவிலிய தாய்மார்களின் கண்ணீரை துடைக்க
பல கட்ட போராட்டங்களை கண்டு அரசு பணிகளில் மற்ற துறைகளுக்கு இல்லா 3 சுழற்சி பணியை நாட்டிற்கு அறிமுகம் செய்தது.
ஏன் திருமதி.லீலாவதி அவர்களின் மீது ஆயிராமாயிரம் மாறுபட்ட கருத்துகள் உண்டு.
முதலில் தலைமை பொறுப்பிற்கு வந்தபோது (2006 Feb) ஒரு சங்கவாதியாக
அரசு பணிக்கு அரசு பயிற்சி செவிலியர்களுக்கு தான் என்பதில் அக்கறையோடு செயல்பட்டது உண்மை.
நாங்கள் தொடுத்த வழக்கிற்கு அரசு நிர்வாகம் சார்ந்து சங்க ரீதியாக ஆதரவு நிலைபாட்டை அவர் எடுத்ததும் உண்மை.
ஊதியகுழுவில் தான் அவரது செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கினார்.
ஒப்பந்த செவிலியர்கள் அரசு பணியில் காலமுறை ஊதியத்திற்காக ஒவ்வொரு Batch ம் போராடி தான் பெற்று வந்துள்ளனர்.
திருமதி.லீலாவதி அவர்களது தனிநபரின் செயல்பாட்டை விவாத்திற்குட்படுத்தி
அதற்கு தீர்வு தனிசங்கமே என்பது அனைவரும் ஏற்றுகொள்ள தக்க ஒரு ஆரோக்கியமான நிலைபாடாக தெரியவில்லை.
7 பேர் ஒன்று சேர்ந்தால் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்.
அது நம் சுதந்திரம்.
அதில் யாரும் தலையிட போவதில்லை.
ஆனால் இது தொடர்ந்தால் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு நர்சுகள் சங்கம் என்பது இறுதி முடிவாக இருக்கும்.
" ஒற்றுமையே பலம் " என்பதன் பொருள் என்ன?
நாவில் மட்டுமே உச்சரித்து செயலில் அது இல்லையென்றால் ...
யாருக்கு நஷ்டம்.
ஒட்டு மொத்த செவிலியருக்கும் தானே.
நிர்வாகம் சங்க தலைமைகளுக்கிடையே போட்டியை உருவாக்கி அது கடைசியில் மருத்துவமனைகளில் செவிலியர்களின் பணிகள் வரை எதிரொலிக்கும்.
இது நாள் வரை நமது சங்கம் பல லட்சம் உறுப்பினர்களை கொண்ட மற்ற சங்கங்களுக்கு மத்தியில் தனித்துவமாக சுயமரியாதையோடு நடைபோட்டு வருகின்றது.
புதியதாக சங்கம் ஆரம்பித்து யாரும் அதற்கு குந்தகம் ஏற்படுத்த வேண்டாம்.
எத்தனை, எத்தனை மாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்துகள் வந்தாலும் அதை விவாதம் செய்து ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தாத வண்ணம் செயல்படுவதே செவிலியர்களின் உரிமையை நிலைநாட்ட ஒரே வழி...
அது
நமது பரந்து விரிந்த
"தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் "என்ற ஒற்றை ஆலமரத்தின் நிழலில் மட்டுமே சாத்தியமாகும்.