Monday, 21 March 2016

தினம் ஒரு அரசாணை....

தினம் ஒரு அரசாணை
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
குழந்தை தத்தெடுப்பு
- பெண் அரசூழியர்க்கு விருப்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
1 ) உயிருடன் இரு குழந்தைகள் உள்ள பெண் அரசூழியர்க்கு இச்சலுகை கிடையாது

2) அதிகபட்ச ஒரு வருட விடுப்பானது குழந்தையின் அகவைக்கேற்ப கீழ்க்கண்டவாறு குறையும்

i.ஒரு மாதத்திற்கும் குறைவாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை - ஒரு வருடம் விடுப்பு
அனுமதிக்கப்படும்

ii.மூன்று மாத தத்தெடுக்கப்பட்ட
குழந்தை - 9 திங்கள் விடுப்பு அனுமதிக்கப்படும்

iii.நான்கு மாத தத்தெடுக்கப்பட்ட குழந்தை - 8 திங்கள்
விடுப்பு அனுமதிக்கப்படும்

iii.ஒன்பது மாத தத்தெடுக்கப்பட்ட குழந்தை - 3 திங்கள் விடுப்பு அனுமதிக்கப் Uடும்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
அ.நி.எண்.342 சமூக நலம் நாள்.08.12.1995
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

2) சமூக சேவை நிறுவனத்திடமிருந்து குழந்தை தத்தெடுக்கப்பட்டிருந்தால் சட்டப்படி தத்தெடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்றிிதழ் நிறுவனத்திடமிருந்து பெற வேண்சியது அவசியமாகும். உறவு முறையிலும்
வெளியிலும் குழந்தையினை
தத்தெடுக்கலாம்.
ஆனால் குழந்தையின் நலன் கருதி சட்டப்படி தத்தெடுக்கப்பட வேண்டும்.
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
அ.க.எண்.21559/சமூகநலம் / 96 - 3 நாள்.14.02.1997
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

Wednesday, 9 March 2016

விடுமுறைகள் பற்றிய விளக்கம்....

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய
முழு விளக்கங்கள்:

* தகுதிகாண் பருவத்தில்
உள்ளவர்கள் EL எடுத்தால்
probation period
தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம்
முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம். ஆண், பெண்
இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும்
முன்பு (பணியில் சேர்ந்து 2
வருடங்களுக்குள்)
மகப்பேறு விடுப்பு எடுத்தால்
அந்த வருடத்திற்கான EL -ஐ
ஒப்படைக்க முடியாது. EL
நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL.
அதில் 15
நாட்களை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும்
அதை ஓய்வுபெறும்
பொழுது ஒப்படைத்து பணமாகப்
பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால்
ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365
நாட்கள்.இதை 17ஆல் (EL)
வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML
எடுத்தால் ஒரு நாள் EL என்ற
கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து  EL  கணக்கிடப்படும். ML & EL எடுத்தது போக  மீதம் உள்ள வேலை  செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும். (CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

* ஒரு நாள் மட்டும் EL
தேவைப்படின்
எடுத்துக்கொள்ளலாம்.

்* அரசு ஊழியர்களுக்கு மட்டும்
வருடத்திற்கு 30 நாட்கள் EL
(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்
மட்டுமே). அதில் 15
நாட்களை ஒப்படைக்கலாம்.
மீதம் உள்ள 15 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச
மாக 240 நாட்களைச்
சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.
அதற்கு மேல்
சேருபவை எந்தவிதத்திலும்
பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு /
பணியிறக்கம் / நிரவல் போன்ற
நிகழ்வுகளின் போது பழைய
இடத்திற்கும் புதிய
இடத்திற்குமிடையே குறைந்தது 8
கி.மீ (ரேடியஸ்) இருந்தால்
அனுபவிக்காத
பணியேற்பிடைக்காலம் EL
கணக்கில் சேர்த்துக்
கொள்ளப்படும். இதற்கு 30
நாட்களுக்குள் விண்ணப்பிக்க
வேண்டும். 90 நாட்களுக்குள்
கணக்கில் சேர்க்கப்பட
வேண்டும். (குறைந்தது 5
நாட்கள். 160 கி.மீ
க்கு மேற்படின்
அட்டவணைப்படி நாட்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த
அதே தேதியில் தான்
ஆண்டுதோறும் செய்ய
வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாக
இருக்கவும் Pay Rollல் விவரம்
குறிக்க எளிமையாக
அமையவும் ஒரே தேதியில்
ஆண்டுதோறும்
அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்
செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும்
ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்
அடுத்த
ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15
நாட்கள் ஒப்படைப்பெனில்
ஓராண்டு / 30 நாட்கள்
ஒப்படைப்பெனில்
இரண்டாண்டு இடைவெளி இருக்க
வேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான்
முக்கியமே தவிர
விண்ணப்பிக்கும் தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன் செய்யும்
தேதியோ, ECS ஆகும்
தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட
வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின்
போது குறைந்த
அளவு அகவிலைப்படியும்
பின்னர் முன்தேதியிட்டு DA
உயர்த்தப்படும்
போது ஒப்படைப்பு நாளில்
அதிக அகவிலைப்படியும்
இருந்தால் DA நிலுவையுடன்
சரண்டருக்குரிய
நிலுவையையும்
சேர்த்து சுதந்தரித்துக்
கொள்ளலாம். ஊக்க ஊதியம்
முன்தேதியிட்டுப் பெற்றாலும்
நிலுவைக் கணக்கீட்டுக்
காலத்தில்
ஒப்படைப்பு தேதி வந்தால்
சரண்டர் நிலுவையும் பெறத்
தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின்
போது இருப்பிலுள்ள EL
நாட்களுக்குரிய (அதிகபட்சம்
240) அப்போதைய சம்பளம்
மற்றும்
அகவிலைப்படி வீதத்தில்
கணக்கிடப்பட்டு திரள்தொகையாக
ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

Monday, 7 March 2016

தேசிய நதிநீா் இணைப்பு (National Inter link river service in India) பற்றி என்னுடைய சொந்த கருத்துப்பதிவு:

தேசிய நதிநீா் இணைப்பு
National Inter link river service in India...
                            Created by.
                          Elankovan.K
                         Dt: 02/03/2016
        நமது இந்திய திருநாட்டின் வல்லரசு கனவு நிறைவேறவும், நமது நாட்டின் வளா்ச்சி அசுரவேகத்தில் செல்லவும் தற்போதைய அவசிய மற்றும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தேசிய நதிநீா் இணைப்பு.
   
          தேசிய நதிநீா் இணைப்பின்மூலம் நதிநீா் ஆணையம் தேசியமாக்கப்படுவதோடு, நதிநீா் பங்கீடும் நடுநிலையாக்கப்படும்.மேலும் சில மாநிலங்களுக்கிடையிலுள்ள கருத்துவேறுபாடுகளும் மறையும்.

           இதற்கெல்லாம் முத்தாய்பாக, அனைத்து மாநில நதிகளையும் ஒன்றினைக்கும்பட்சத்தில், சில மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம், பல மாநிலங்களில் தண்ணீா் பஞ்சம் நீங்குவதோடு மட்டுமின்றி,இதன்மூலம்அனைத்து மாநில நதிகளிலும் நீா்வரத்து நிரந்தரமாகும்போது, அங்கு விவசாயம் மூன்று போகம் விளைவிக்கமுடியும்.இதனால் நம் இந்திய திருநாடு தானிய மற்றும் உணவு தேவைகளில் தன்னிறைவு அடைவதோடு,ஏற்றமதியும் செய்து நாம் வல்லரசாகும் கனவை நனவாக்கும் காலம் விரைவில் எட்டக்கூடும்.

         பொதுவான கருத்து என்னவெனில், ஒரு நாடு வல்லரசாக வேண்டுமானால், அந்நாட்டில் விவசாயம், கல்வி,பொருளாதாரம், பாதுகாப்பு, மற்றும் பல சிறந்து விளங்கினால் மட்டுமே வல்லரசு அந்தஸ்தை விரைவில் எட்ட முடியும்.

        மேலும் இதன்மூலம், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும், தனிமனித பொருளாதாரம் சீரடையும்,விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்கலாம், இயற்கை வளங்கள் கூடும், அதிக மழைபெறும் வாய்ப்பு அதிகாிக்கும்.

        நமது நாட்டில் ஒருசில மாநிலம் குறிப்பாக தமிழக மக்கள் விவசாயத்தை வெறுக்கும் தொழிலாக நினைக்க  காரணம், நீாில்லாததும், வானம்பாா்த்து பயிாிடுவதும்,குறிப்பிட்ட நேரத்தில் பருவ மழை பொய்த்துவிடுவதும், விவசாயத்திற்க்கு செய்யும் செலவு அதிகமாகவும் வரவு குறைவாக இருப்பதுமே காரணம். இதனாலயே நம்மில் பல இளைஞா்கள் விவசாய குடும்பத்தில்  பிறந்தாலும் விவசாயத்தை விட்டு,கல்வி கற்று வேலை செய்யவே விரும்புகின்றனா்.

         நமது அண்டை நாடான சீனா, தேசிய நதிகளை ஏற்கனவே இணைத்ததாலோ என்னவோ! அந்நாட்டின் பொருளாதாரம்  தன்னிறைவு அடைந்து வல்லரசானதோடு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் பொருளாதார உதவிகள் செய்கிறேன் என்ற போா்வையில், அந்நாட்டின் இறையாண்மைகளில் தலையிட்டு, தற்போது ஆசியா கண்ட நாடுகளுக்கெல்லாம் தலைவனாகவும், பஞ்சாயத்துகாரனாகவும், உலக நாட்டாமையான அமொிக்க நாட்டுக்கே எாிச்சலூட்டும் நாடாகவும் வளா்ந்துள்ளது. சில சமயங்களில் நமது இந்திய நாட்டின் பாதுகாப்பிலும்,இறையாண்மையிலும் தலையிட்டு, சில சிறு நாடுகளை ஒன்றிணைத்து, நமக்கு எதிராக செயல்பட தூண்டும் ஒவ்வாத செயலையும் செய்து கொண்டிருக்கிறது. இவையனைத்தும் அந்நாட்டின் பொருளாதார வளா்ச்சியே காரணம். இந்த  பொருளாதார வளா்ச்சி நதிநீாின்  இணைப்பே காரணம்.

         நமது நாட்டில் ஏற்கனவே ஆண்ட அரசும், தற்போது ஆளும் அரசும் இந்த நதிநீா் இணைப்பை செயல்படுத்த ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகின்றனா் என புாியவில்லை. இதை செயல்படுத்த ஏற்படும் செலவை நினைத்தா? அல்லது அதனால் ஏற்படும் மாநில பிரச்சனைகளா? இதற்கான இடங்கள் கையகப்படுத்தும் பிரச்னையா? தொியவில்லை.

            எதுவாக இருந்தாலும் ஒரு அரசாங்கம் மட்டும் இதை செயல்படுத்த நினைத்துவிட்டால்,இன்னும் பத்து ஆண்டுகளில் தேசிய நதிநீா் இணைப்பு என்ற என் போன்றோாின் கனவு நனவாகும். அதுமட்டுமில்லாமல், பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளில் நமது நாடு வல்லரசு அந்தஸ்தையும் தாண்டிச் செல்லும். காரணம், நமது பரந்து விாிந்த நிலப்பரப்பு, மக்கள்தொகை, மற்றும் இளைஞா்களின் எழுச்சியும் தான்.

           நதிநீா் இணைப்புக்கு மாநிலங்களுக்கிடையில் இடம் கையகப்படுத்தும் செயல்பாடுதான் சிக்கல் என்றால், அதற்கான எளிய வழி, என்னவென்றால் எமது மாவட்டத்தில் பிறந்த மாமேதை, முன்னாள் ஜனாதிபதி, டாக்டா் A.P.J.அப்துல்கலாம்  அவா்கள் கடந்த கால அரசுக்கு பாிந்துரை செய்த  சாலையோர நீா் ஆதார இணைப்பு என்ற திட்டத்தை அரசு ஆலோசனைக்கு எடுத்து அது சிறந்தது என்றால் அதை உடனே செயல்படுத்தலாம்.

          அதாவது அவரது திட்டப்படி, காஷ்மீா் முதல் கன்னியாகுமாி வரை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளதல்லவா? அதன் இருபுறங்களிலும் 20 முதல் 50 அடி தூரம் வரை மட்டுமுள்ள இடங்களை கையகப்படுத்தி மேலும் ஆழப்படுத்தி நதிநீா் இணைப்புக்கு ஏதுவாக செய்யலாம்.இதனால் மாநிலங்களில் நிலம் கையகப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சனைகள் எழாது.

          நமது நாட்டு இளைஞா்கள் குறிப்பாக நதிநீா் இணைப்பின் அவசியம் வேண்டி நமது பிரதமருக்கு அடிக்கடியும் மொத்தமாகவும் e-mail அனுப்பலாம். நானும் என்னுடைய பங்கிற்க்கு நான்கைந்து முறை e-mail அனுப்பியுள்ளேன். அல்லது இதற்கான இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அரசிற்க்கு இதை தொிவிக்கலாம். நன்றி.
            
               ஜெய்ஹிந்த்....
             By.Elankovan.K

Sunday, 6 March 2016

தமிழக ஒப்பந்த செவிலியா்களை நிரந்தரமாக்க போராடிய திரு.பாாிவள்ளல் அவா்களை வாழ்த்தி எழுதிய எனது கவிதை....

பாாிவள்ளல் என்பது உன் நாமம்
      பாாிவள்ளல் என நாமம் சூட்டிய உமது பெற்றோருக்கு எனது பாத நமஸ்காரம்
      அன்றோ முல்லைக்கு தோ் கொடுத்தான் பாாி
       இன்றோ ஒப்பந்த செவிலியா்களுக்கு நிரந்தரமாகும் ஒளிகொடுத்தான் பாாி
         ஆம் அடுப்பெறியும் ஒளிகொடுத்தான்
        உன்னுடன் உழைத்த உன் உடன்பிறவா இளைய உறவுகளுக்கும் கோடி நமஸ்காரங்கள்
         இரவுபகலறியா உழைத்த ஓய்வறியாச்சூாியனே
        சுயநலம் பாரா போா்க்குணம் கொண்டவனே
        நீ போராடி வென்றதை
அனைவருக்கும் கிடைக்க வழி செய்
        தொடரட்டும் உன் போராட்டம்
         மலரட்டும் புதிய செவிலியம்
       நீவிா் வாழ்க வாழ்க பல்லாண்டு......

                      
                        Elankovan.K.
                        GH.Mudukulathur.
                         Dt.06/03/2016

Saturday, 5 March 2016

திருமதி.கொ்சியல் சகுந்தலா செவிலியா் அவா்களின் தற்காலிக பணிநீக்க ஆணை...

This is an suspension order which have been served to one staff nurse who working at Govt.Hospital, Paramakudi, Ramanathapuram dt. under the circumstances of maternal death.This was absolutely conspiracy against with nurses profession. They are being blamed only staff nurse and maternity assistant and served suspension order to both of them.
         The maternal mother who died that she was suferring from seizure disorder and being under  treatment. The real fact of past health history was totally hidden by parents of maternal mother.

தினம் ஒரு அரசாணை

தினம் ஒரு அரசாணை
-----------------------

அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா?

அரசாணை நிலை  எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.