Sunday, 13 December 2015

இந்துத்துவத்தின் புனிதம் பற்றி திரு.நாகராஜ் அவா்கள்,பரமக்குடியிலிருந்து....

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம். . . !

இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...
கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...
மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...
கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...
நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...
கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...
காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...
சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....
உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....
: நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :👇👇👍

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தால் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள்,
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பகவதம்,

அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு
👉வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. , கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
👉👉இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
👉💪👑👑இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்👏💫🌟.
😇😇😇😇😇
🙏🙏🙏🙏🙏

Saturday, 12 December 2015

உணவு உண்ணும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி சகோதரா் திரு.சதீஷ் அவா்கள் மதுரையிலிருந்து...

🍇🍎🍏🍑🍓🍉🍇🍒🍋🍐🍍🍌🍊🍈🌽🍅🍆

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

🍴🍹🍡
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

🍴🍹🍡
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

🍴🍹🍡
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

🍴🍹🍡
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.

🍴🍹🍡
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

🍴🍹🍡
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

🍴🍹🍡
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

🍀🌹
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

🍀🌹
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

🍀🌹
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.

🍀🌹
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.

🍀🌹
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.

🍀🌹
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

🍀🌹
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

🍀🌹
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!

🍀🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.

🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.

🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

🍀🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.

🍀🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

🍀🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

🍀🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

🍀🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

🔥🔥🍍
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்
💖💖💖🍎🍏🍑🍉🌺🌸

Friday, 11 December 2015

சந்தோசத்திற்கான வழிகள்: The book of way to happiness...

Dont miss to Read
📗📘📙📓📔
வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தைs எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?
இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

“சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது,அள்ளிக்கொடுங்கள். ஏனென்றால் நாம்  போகும்போது  சிறிதும்   அள்ளிச்செல்ல முடியாது 😎
🌷🍀🌹🌻🌺🍁
HAVE A NICE DAY.

Wednesday, 9 December 2015

Inverter பராமாிப்பு பற்றி அவசியமான தகவல்கள் இதோ...

அவசியம் படிக்கவும். பகிறவும்.உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்.அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும்ஒரு சில ஆபத்துகள் உள்ளன.எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில்பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில்ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள்என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர்ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்குஅழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான்கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்குஅதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின்தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார்.இப்படிப்பட்ட பாதிப்புகளுக்குகுறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர்விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்கவேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதாஎன்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர்,பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சிபெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.படித்தேன் பகிர்ந்தேன்....பயனென்று நினைத்தால் பகிருங்கள்.....