பச்சைத்தண்ணீர் குளியல் சிறந்ததா? சுடு நீரில் குளிப்பது சிறந்ததா?
அறிந்துக் கொள்ளுங்கள் !
குளியல் என்பது நமது அன்றாட வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கும் ஒன்று.
அன்றைய நாளை புத்துணச்சியுடன் தொடங்குவதிலிருந்து நாளின் இறுதியில் நமது சோர்வை போக்கும் வரையில் அனைத்திற்கும் குளியல் என்பது முக்கியமானது.
my
இரவு தூங்கும் முன் குளித்து விட்டு தூங்குவது நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
ஆனால் பலகாலமாக குளிப்பதில் உள்ள சந்தேகம் என்னவென்றால் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? அல்லது சூடான நீரில் குளிப்பது நல்லதா? என்பதுதான்.
குளிப்பது நன்மையாக இருந்தாலும் எந்த நீரில் குளிக்கிறோம் என்பதும் அவரவர் உடலின் தன்மையை பொருத்தும் மாறுபடும்.
இந்த பதிவில் குளிர்ந்த நீர் குளியல் நல்லதா அல்லது சூடான நீர் குளியல் நல்லதா என்ற கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் பயன்கள்:-
குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு காலை நேரத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு உதவியாய் இருக்கிறது.
இது உங்கள் நரம்புகளை புத்துணர்ச்சி அடைய செய்து தூக்க கலக்கத்தையும், சோம்பலையும் விரட்டும்.
குளிர்நீர் குளியல் மனஅழுத்தத்திற்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது மனஅழுத்தத்தை விரட்டக்கூடிய நார் அட்ரிலின் மற்றும் பீட்டா எண்டோர்பின் போன்ற ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கிறது.
இது உங்கள் மனஅழுத்தத்தை போக்கி உங்களை சுறுசுறுப்பாக உணர செய்யும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது நிணநீரை அதிகரிப்பதுடன் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.
மேலும் இது உடலில் நோயை எதிர்த்து செயல்பட கூடிய ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் உங்களுடைய நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுடைய நுரையீரல் செயல்பாட்டை சீராக்கும்.
குளிர்ந்த நீரை தலையில் ஊற்றும் போது உங்களுக்கு சிறிது மூச்சுத்திணறல் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்றால் குளிர்ந்த நீரை முகத்தில் ஊற்றும்போது உங்கள் சுவாசம் தடுக்கப்பட்டு மீண்டும் அது நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது, இது உங்கள் நுரையீரல் தடையின்றி செய்லபட உதவும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது ஆண்மையை அதிகரிக்கும் என்று மருத்துவ ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்படி குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உங்கள் டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு அதிகரிக்கிறது.
இதனால் உங்கள் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன், அவற்றின் தரமும் அதிகரிக்கிறது
சூடான நீரில் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்:-
சூடான நீர் உங்கள் உடலை சுத்தப்படுத்தும் அற்புத பொருளாகும். இதன் வெப்பநிலை உடலில் உள்ள கிருமிகளை அழிக்க கூடியது.
இதன் சுடுநீரில் குளிப்பது உங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத்தையும் மேம்படுத்தும்.
இவை உங்களுடைய சளி மற்றும் இருமலுக்கான அற்புத மருந்தாக செயல்படுகிறது.
இதன் நீராவி உங்கள் சுவாச மண்டலத்தை சுத்தம் செய்து மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய உதவுகிறது.
சுடுநீர் குளியல் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இன்சொமேனியாவை விரட்டக்கூடியது. அதுமட்டுமின்றி இவை அற்புதமான தூக்கத்தை கொடுக்க கூடியதாகும்.
இரவு தூங்கும் முன் கதகதப்பான நீரில் குளித்து விட்டு படுத்தல் சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடுவீர்கள்.
சூடான நீரில் குளிப்பது உங்கள் உடல் சோர்வு மற்றும் மனஅழுத்தத்தை நீக்க கூடியது. அதுமட்டுமின்றி இது தசைகளில் உள்ள வலியை குணப்படுத்த கூடியது. இது தசைப்பிடிப்புகளை நீக்கி தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.
ஆய்வுகளின் படி சூடான நீரில் குளிப்பது சர்க்கரை நோய் உள்ளவர்களின் சர்க்கரை அளவை குறைப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வில் தினமும் 20 முதல் 30 நிமிடம் வரை சூடான நீரில் குளிப்பது சர்க்கரை நோய் உள்ளவர்களின் சர்க்கரை அளவை 12% சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
எது சிறந்தது?
குளியல் என்றாலே சிறந்ததுதான். ஆனால் உங்களுடைய வயது, குளிக்கும் நேரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பொருத்து உங்களுக்கு ஏற்ற குளியல் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பதின்ம வயதில் இருப்பவர்கள் பெரும்பாலும் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவதே அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல முதியவர்கள் மற்றும் கடினமான பணியில் உள்ளவர்கள் சுடுநீரில் குளிக்கலாம். அதுபோல காலத்தை பொருத்தும் குளிக்கும் நீரை மாற்றிக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பது நிச்சயம் நல்லதல்ல. குளிக்கும் நேரமும் முக்கியம்.
*🍃Sri Yoga & Naturopathy*🍃
9952133415
(Whatsapp to join yoga and naturopathy group)