Tuesday, 27 October 2020

இந்து சமய ஆசாரத்தில் மகளிருக்கு உள்ள அங்கீகாரம்:

இந்து சமய ஆசாரத்தில் மகளிருக்கு உள்ள அங்கீகாரம்:

1) திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது.

2) மனைவி இல்லாதவன் யாகம் செய்யக்கூடாது.

3) மனைவி இல்லாதவன் கும்பாபிஷேகம் போன்ற யாகங்களில் பங்கேற்க தகுதி கிடையாது.

4) மனைவி இல்லாதவன் தானம் செய்ய முடியாது.

5) மனைவி இன்றி செய்யும் தானம் பலன் தராது.

6)மனைவி இல்லாதவன் பித்ரு கடன்களை செய்ய வாய்ப்பற்றவன்.

7) மனைவி இல்லாதவன் கோயில் உள்ளே சென்று ஸ்வாமியை தீண்டி பூஜை செய்ய அருகதை அற்றவன்.

8) மனைவி இல்லாதவன் பஞ்சாயத்தில் தலைமையாக உட்காரும் தகுதி இல்லாதவன்.

9) மனைவி இல்லாதவன் நேரில் வந்தால் சகுனப் பிழை என பொருள்.
( இதுவே ஒத்தை பிராமணன் என திரிக்கப்பட்டது)

10)மனைவி இல்லாதவனுக்கு ஆகமங்களின்படி ஆச்சார்ய தீக்ஷை கிடையாது.

11) மனைவி இல்லாதவனுக்கு கும்ப மரியாதை கிடையாது.

12) மனைவி இன்றி ஒற்றை நபராக பசுவை வணங்கக்கூடாது.

13) மனைவி இன்றி ஒற்றை நபராய் புண்ணிய தீர்த்தம் ஆடுதல் கூடாது.

14)மனைவி இன்றி பெரியோர்களை நமஸ்கரிக்கக் கூடாது. அதாவது முழு பலன் இல்லை என்பதாகும்.

   இப்படி பல பல நியதிகள் உள்ளது. இவை இல்லற வாழ்வியல் அல்லது அந்நிலை சூழலில்  உள்ளவர்களுக்கே.

மனைவி என்ற பெண் உடன் இல்லையெனில் இல்லறத்தான் இந்து சாஸ்திரங்களின் படி வெறும் ஜடமே.மனைவி என்ற பெண் உடன் இல்லையெனில் இல்லறத்தான் இந்து சாஸ்திரங்களின் படி வெறும் ஜடமே   '  ,
         #பெண்களை தாய் உள்ளம் கொண்ட கருணை கடல்களை பார்த்து #விபச்சாரிகள் என கூறும் திருமணம் நடக்காத குடும்பம் என்பது என்ன என்றுதொரியத  #திருமாவளவன் பேன்றவர்களுக்கு பெண் தெய்வாங்களின் #சாபம் கிடைக்கட்டும் #சமர்பணம்                         

Wednesday, 14 October 2020

ஏவுகணை நாயகன்

1962ல் அந்த சீன யுத்தம் படுதோல்வியில் முடிந்தது, சீனாவின் எல்லைகோட்டை தாண்டி கூட இந்திய குண்டுகள் பாயமுடியவில்லை, இந்திய பலவீனமான டாங்கிகள் மலைக்கு செல்லமுடியா நிலையில் , பீரங்கிகளும் இல்லா நிலையில் துப்பாக்கி ஒன்றையே நம்பி சென்ற இந்தியா மிகபெரும் தோல்வியினை சந்தித்தது

அன்றுவிமானபடையில் ஹெலிகாப்டர் மட்டும் இருந்தது அதுவும் தாக்குதல் ரகம் அல்ல‌

ஆம், எல்லை தாண்டி ஒரு வலுவான ஆயுதம் கூட வீசமுடியாத பலவீனமான இந்தியாவாக அது இருந்தது

அப்பொழுதும் "பாதுகாப்பு அறிவியல் மையம்" இருந்தது, ஆனால் அன்றுபிறந்த குழந்தை போல் அது திணறிகொண்டிருந்தது

எல்லையில் சீனாவிடம் இந்தியா பகிரங்கமாக அடிவாங்கும் பொழுது சாதாரண அனுபவமற்ற இளைஞனாக, விமான பொறியியல் பட்டயபடிப்பு மட்டும் வைத்திருந்த இளைஞனாக அழுது கொண்டிருந்தார் கலாம்

இந்தியா வீழ்ந்தது டெல்லி கூட சீனாவால் கைப்ற்றபடலாம் எனும் செய்திகள் வந்த நிலையில் கண்ணீர் விட்டு அழுத விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர்.

ஆம், அந்த அவமானத்தை தன் அவமானமாக கண்டார், அந்த பாதுகாப்பு அறிவியல் மையத்தின் அமைப்பின் அவசியமும் நாட்டுக்கு அது ஆற்ற வேண்டிய மிகபெரிய கடமையும் அவர் கண்முன் நின்றன, வெறும் 29 வயது வாலிபனான கலாம், அன்றுதான் உறுதி எடுத்தார்

இனி இந்தியா மிகபெரிய ஏவுகனை பலம் வாய்ந்த நாடாக மாறும் வரை சொந்தமில்லை, பந்தமில்லை, திருமணமில்லை, வாரிசு இல்லை, ஊர் இல்லை உலகம் இல்லை

ஆம் அப்பொழுதுதான் அந்த விஞ்ஞான துறவினை அந்த விஞ்ஞானி ஏற்றார், தவத்தில் இறங்கினார்

அந்த தலைமுறைக்கு சாஸ்திரி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம் உருவானது அப்படித்தான்

இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட விஞ்ஞானி அவர்

ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது,

மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி அனுதாபம் தேடியவரில்லை, இட ஒதுகீடு, போராட்டம் , பார்ப்பணீயம் என ஒப்பாரி வைத்தவர் அல்ல‌

அவருக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு, தேசாபிமானம் மட்டுமே

நவீன இந்தியாவில் விக்ரம்சாராபாய், ஜஹாங்கீர் பாபா, சதிஷ் தவான் , அணுசக்தி சிதம்பரம் (ப.சிதம்பரம் அல்ல) , போன்ற வரிசையில் மிக முக்கியமான பெயர் அப்துல்கலாம்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் யுத்தம் என்பது விண்வெளிக்கு மாறிற்று, செயற்கை கோள்களும், ஏவுகனைகளும்தான் ஒரு தேசத்தின் பாதுகாப்பினை நிர்ணயம் செய்தன.

அது இல்லாத சமயத்தில் தான் சீனா நமது முதுகில் குத்திய வஞ்சம் நடந்தது.

உலக நாடுகள் எல்லாம் மிக ஏளனமாக பார்த்த இந்திய ராணுவ ஏவுகனை துறையையும், அதற்கு மிக பக்கபலமான விண்வெளி துறையும் உலகின் மிக முண்ணனி நாடாகளுள் ஒன்றாக மாற்றிய பெருமை அப்துலகாலாமிற்கு உண்டு,

அவரது முதல் படைப்பே மிக சிறியரக ராணுவ ஹெலிகாப்டர், இறுதியாக கொடுத்தது (ஓய்வுபெற்றாலும் அவரின் வழிகாட்டல் உண்டு) இன்று உலகின், கவனியுங்கள் உலகிலே அதிவேக ஏவுகனையான பிரம்மோஸ், இன்று இந்தியாவின் பிரம்மாஸ்திரம், இன்று சீனாவின் தூக்கத்தை தொலைதுவிட்ட பாசுபதகனை.

ஆம் ஒலிவேக ஏவுகனைகளுக்கு அவர் முன்வடிவம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்

1980வரை இந்தியாவிடம் சொல்லிகொள்ளும் ஏவுகனைகள் கிடையாது, ரஷ்யா ஒருவகையான‌ நண்பன் தான் எனினும் சொல்லிதராது, அல்லது சொல்லிதர விடமாட்டார்கள். இந்திராவின் எழுச்சியான இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணத்தில் ஒரு பகுதி தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி அலுவலகம் என மாற்றபட்ட பின் அப்துல் கலாம் யுகம் உருவாகிறது.

பெரும் தோல்விகள், ஏராளமான அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் அவரால் ஏவுகனை திட்டத்தை செயல்படுத்த முடிந்தது, காரணம் ஏவுகனை என்பது மிக மிக சக்திவாய்ந்தது மட்டும் அல்ல பெரும் சிக்கல் வாய்ந்த நுட்பம்., விமான அறிவும் விண்வெளி தொழில்நுட்ப அறிவும் நிரம்ப கலந்து இல்லாமல் அது சாத்தியமே இல்லை.

அதுவும் அன்று செயற்கை கோள் வழிகாட்டல் இல்லாமல் அட்சரேகை தீர்க்க ரேகை பயன்படுத்தி செலுத்தபட்ட ஏவுகனைகள் மிகுந்த சிரமமான விஷயம்

அக்னி,ப்ரித்வி,நாக்,திரிசூல்,ஆகாஷ் என வரிசையாக செய்து கொடுக்கும்பொழுது உலகம் ஆடத்தான் செய்தது, அக்னி நீண்ட தூர ஏவுகனை சீனாவிற்கானது என சொல்லி தெரிவதில்லை.

இன்று பிஜீங்க் வரை அதனால் தாக்க முடியும்

ஆனால் பிரித்வி நடுத்தரமானது, அதன் தாக்கும் தூரத்தை கூட கணிக்காமல் "பிரித்வி" என்ற பெயரை கேட்டதும் அலறியது

பாகிஸ்தான், காரணம் பிரித்விராஜன் என்ற இந்திய‌ மன்னன் அக்காலத்தில் ஆப்கான் முஸ்லீம் கொள்ளையனுக்கு பெரும் எதிரி.

(அந்த ராஜஸ்தான் மன்னனை குறிப்பிட்டு அதாவது இதனை ராஜஸ்தான் எல்லையில் நிறுத்துவோம் என சொல்லாமல் சொல்லது இந்தியா :))

உடனே புறவாசல் வழியாக ஏதோ ஒரு மொக்கை ஏவுகனையை வாங்கி "கோரி" (கோரி முகமது) என பெயரிட்டு மகிழ்ந்து பாகிஸ்தான் (ஆனால் அது வேலை செய்யுமா என கூட தெரியாது :) )

இன்றும் ஐரோப்பாவில் களவெடுத்து சீனாவிடம் கொடுத்து, 1950 மாடலில் செய்த பழைய அணுகுண்டு பாகிஸ்தானிடம் இருப்பதாக நம்பபடுகின்றது,

மற்றபடி சொந்த தொழில்நுட்பம் ஏதும் அவர்களிடம் கிடையாது தீவிரவாதம் தவிர.

ஆனால் நிச்சயமாக சொல்லலாம் இந்தியா ஓரளவு சொந்த தயாரிப்பு கொண்டது, இன்று ஓரளவிற்கு இந்திய ராணுவம் வலிமையுடையது என்றால் அதன் ஏவுகனை பலம் ஒரு காரணம், அதன் மூலம் சந்தேகமே இல்லாமல் அப்துல் கலாம்.

அன்று கிரையோஜெனிக் நுட்பம் இல்லா நிலையில் அப்துல் கலாம் முன்னோட்டமாக சாதித்து நின்றார்

ஒய்வு பெற்றபின் அல்ல, அவர் நினைத்திருந்தால் உலகில் எந்த நாட்டிற்கும் சென்று கோடிமேல் கோடி குவித்திருக்கலாம், அந்த துறை அப்படி.அவர் கல்வி அப்படி, அனுபவம் அப்படி,

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு மாபெரும் தேசத்தின் ராணுவத்தையே உயர்த்திய சாதுர்யம், இதற்கு மேல் என்ன வேண்டும்?

எல்லா நாடுகளும் ரத்தின கம்பளம் குவித்து வரவேற்றிருக்கும். அது கூட வேண்டாம் தனியாக ஒரு ஆயுதகம்பெனி தொடங்கியிருந்தாலும் அவர் உலகின் முண்ணனி வியாபாரியாக மாறி இருப்பார்,

அட வியாபாரம் வேண்டாம் ஆலோசகராக இருந்தாலும் "அள்ளி அள்ளி" எடுத்திருப்பார், அவர்களும் தங்க வீட்டிலே வைத்து தாங்கியிருப்பர். கிட்டதட்ட அரபு அரசர்கள் அல்லது ஐரோப்பிய தொழிலதிபர்களின் அளவிற்கு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கலாம்,

ஆயுத வியாபாரம் என்றென்றும் உலகில் நம்பர் 1 லாபகரமான தொழில்

உண்மையில் அவர் அதற்கெல்லாம் ஆசைபடவில்லை, நாடு உயரவேண்டும், சுபிட்சமாக வாழ பாதுகாப்பு அவசியம், அதற்காகத்தான் உழைத்தார். குடியரசு தலைவர் பதவி அவரை தேடிவந்தது, அங்கு உரை நிகழ்த்தும் பொழுதெல்லாம் "திருகுறளை" மேற்கோள் காட்டி தமிழராக நின்றார்.

உலகமெல்லாம் கொண்டாடிய அந்த படித்த விஞ்ஞான தமிழன், தமிழகத்தின் சில இடங்களிலும் சில அரசியல் காட்சிகளிலும், 5ம்வகுப்பு கூட தாண்டாத தமிழக அரசியல்வாதிகளால் மட்டம் தட்டபட்டு அவமானபடுத்தபட்டார், ஆனால் அப்துல்கலாம் ஒரு வார்த்தை கூட பதில்பேசாது தனது பெருந்தன்மையை காட்டிய நிகழ்வுகளும் உண்டு.

இரண்டாம் முறை அவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பும் இருந்தது, அவ்வாறு நடந்தும் இருக்கலாம், ஆனால் சில வஞ்சக திட்டங்களால் வீழ்த்தபட்டார்.

நிச்சயமாக அவர்கள் வட இந்தியர்கள் அல்ல, திராவிடர்கள் தான்.

கலாம் .ராமேஸ்வரத்து மண்ணை சேர்ந்தவர், அம்மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, என இன்னும் ஏராளமான சர்ச்சைகள் அவர்மேல் உண்டு, அணுசக்தியை ஆதரித்தார் என்ற பழியும் உண்டு, நிச்சயமாக அவர் அணுவிஞ்ஞானி அல்ல ஆனால் மூத்த விஞ்ஞானி எனும் பதவியில் இந்திய அணுசக்தி குறித்த அனுபவம் அவருக்கு அத்துப்படி.

இன்னொன்று அணுஆலை என்பது சர்வதேச அரசியல், பல மர்மங்களை கொண்டது, அந்த அரசியல் அவருக்கு தெரியாது, ஆனால் ஒரு இந்திய தலமை விஞ்ஞானியாக ஒரு பதிலை கொடுக்கவேண்டிய கட்டாயம், ஆனால் கவனித்து பாருங்கள் அவர் சொல்வது எல்லாம் ஆறுகள் இணைப்பு, சூரிய ஓளி மின்சாரம், இயற்கையோடு இணைந்த அறிவியல்.

சிலர் சொல்வார்கள் கலாம் ராமேஸ்வரம் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, கூடங்குளம் அணுவுலையினை நிறுத்தவில்லை, அவர் தமிழுக்கு என்ன செய்தார்? ஈழ மக்கள் விடுதலைக்கு என்ன செய்தார்? சிலர் ஒருபடி மேலே சென்று சொல்வார்கள், நல்ல தமிழர் என்றால் கலாம் ராக்கெட் நுட்பத்தை புலிகளுக்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டமா?

அவர் இந்திய குடிமகனாக வாழ்ந்தார், அதனால் சிலர் அவரை ஒரு வகை ஆர்எஸ்எஸ் என்றார்கள். அப்படியானால் காமராஜரும் ஆர் எஸ்எஸ் , காந்தி என சகலரும் அப்படியே
இந்த மொத்த தேசத்தின் பாதுகாப்பையும், வளத்தையுமே பற்றி கவலைபட்டாரே ஒழிய , தனியாக தமிழருக்கு மட்டும் என்ன செய்ய முடியும்?

அப்படி தமிழகத்திலே முடங்கி இருந்தால் கலாம் கிடைத்திருப்பாரா?, சரி வாதத்திற்கு அப்படி தமிழக பிரச்சினையில் இறங்கினாலும் என்ன நடக்கும்?

வீண் அரசியலும் வெற்று கூச்சலுமாகவே அவர் வாழ்வு முடிந்திருகும்

கலாமினை குறை கூறுபவர்களுக்கு ஒன்று மனசாட்சி இல்லாமல் இருக்கவேண்டும், அல்லது நாட்டுபற்றில்லா குறுகிய மனப்பான்மை இருக்கவேண்டும்

அழிவு ஆயுதங்களை உருவாக்கிய கலாம் நல்ல மனிதராக இருக்கமுடியுமா? என்று சில வாதங்கள். அணுகுண்டை உருவாக்கிய ஐன்ஸ்டீனை விடவா மனிதநேயம் பேசிவிட முடியும்?

இது பாதுகாப்பு, தேச பாதுகாப்பு இத்தனை ஏவுகனைகளை வைத்திருக்கின்றோமே தவிர யார் மீது வீசினோம், மீணவனை காப்பாற்ற நாட்டிற்கு ஏவுகனை எதற்கு என்பதெல்லாம் அலட்டல். அது தேசபிரச்சினை என்றால் என்றோ கடற்படை புகுந்துவிடும், இது வேறு அரசியல் விட்டுவிடலாம்

காமராஜர் (அவரும் விருதுநகருக்கு என்ன செய்தார்? :) )வரிசையில் ஒரு சலசல்ப்புமே இல்லாமல் கலாமையும் வைக்கலாம். இந்தியா அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கௌரவ படுத்தியது, அது என்ன பாரத ரத்னா.

இப்பொழுதெல்லாம் அது யாருக்கெல்லாமோ வழங்கபட்டத்து, வழங்கபடுகிறது இன்னும் வழங்குவார்கள்.

ஆனால் மோடியின் அரசு புதிய ஏவுகனை திட்டங்களுக்கு கலாம் சீரியஸ் என பெயரிட்டிருக்கின்றார்கள் அல்லவா? அதுதான் உண்மையான‌ மரியாதை.

அதைவிட இன்னொரு உச்சபெருமை வேண்டுமென்றால், விரைவில் குலசேகரபட்டனத்தில் ஸ்ரிகரிஹோட்டா போல ஒரு தளம் அமைக்கும் திட்டத்தில் இஸ்ரோ இருக்கின்றது, காரணம் அதன் அமைவிடம் மற்றும் கண்ணாணிக்கும் வசதிகள் மிக மிக பொருத்தமானது, அப்படி அமையும் பட்சத்தில் அதற்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டினால் அது பெரும் பாராட்டக அமையும்.

வெடிமருந்து நிரம்பிய மூங்கில் குழாய்களில் ஆயுதம் வைத்து ஏவுகனை உருவாக்கியது திப்பு சுல்தானே, அந்நாளைய பீரங்கி தத்துவத்தில் இருந்து அவன் அதை உருவாக்கினான்

அது ஈட்டிகள் எறியபடும் இடத்தில் அது கொஞ்சம் தூரமாக செல்ல உதவிற்று , 15,000 அடி பாயும் ஏவுகனையை உருவாக்கினார்

(இன்றும் அதன் மாதிரி அமெரிக்க ஏவுகனை திட்ட அலுவலகத்தில் உண்டு )அதன்பின் அதனை செயல்படுத்தியது ஜெர்மன்.

நவீன ஏவுகனைகளின் தந்தை என "வார்ண் பிரவுன்" ணை கொண்டாடும் உலகம், ஹிட்லரிடம் பணியாற்றியவர் பின்னாளில் அமெரிக்காவிற்கு யுத்த கைதியாக கொண்டு செல்லபட்டார், அதன்பின் செயற்கை கோள் ராக்கெட் மற்றும் ஏவுகனைகளை தயாரித்து அமெரிக்காவை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றார்,

அந்த தலைமுறைக்கு ஐன்ஸ்டீனுக்கு அடுத்து அவர்தான் ஹீரோ.

இந்தியாவிற்கு ஏவுகனைகளை கொடுத்து பலமான நாடாகியதில் இந்த எளிய தமிழனின் சாதனை மிக பலமானது, அதனினும் மேல் இன்னும் இந்த நாட்டையும் அதன் தூண்களாகிய மாணவர்களையும் நேசித்த‌ அவரின் மனமும் மிக விலாசமானது.

மொழி,இனம்,மதம் என சகலமும் கடந்து ஓரு இந்தியனாக தன்னை முன்னிலைபடுத்திய தமிழர்களின் வரிசையில் காமராஜருக்கு பின் இடம்பிடித்துகொண்டவர் கலாம், இருவருக்கும் குடும்பமில்லை, இருவருமே சொந்தபந்தங்களுக்கோ அல்லது சொந்தமக்களுக்கோ ஏதும் செய்ததுமில்லை.

கலாம் காலமாகி இருக்கலாம், ஆனால் அவரது முத்திரை இந்தியாவில் அழிந்துவிடகூடியது அல்ல. இந்திய ராணுவம் இருக்கும் வரைக்கும் என்றல்ல, இந்திய கல்விநிலையங்கள் இருக்கும் வரை, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

பலநூறு ஆண்டுகள் செய்யவேண்டிய சேவையை 60 ஆண்டுகள் உழைப்பினில் இந்தியாவிற்கு செய்திருக்கும் விஞ்ஞான மகான் அவர்.

ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், இந்நாடு விசாலமான மனதுடையது, நாட்டிற்காய் நீங்கள் உழைத்தால், நல்ல கல்வியோடு பெரும் சிந்தனையோடு உழைத்தால் எந்த சாதியில் பிறந்தாலும், எந்த மதத்தில் பிறந்தாலும், எந்த குலத்தில் பிறந்தாலும் இந்நாடு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போகாது

கலாம், இஸ்ரோ சிவன் போன்றோரெல்லாம்  கல்வியாலும் நாட்டு சிந்தனையாலும் முத்திரை பதித்தவர்கள், தங்கள் சாதியாலோ மதத்தாலோ அல்ல, மாறாக கல்வியால், பரந்த சிந்தனையால்

சிந்தனை பெரிதாகவும் பரந்த மனத்தோடும் இருந்துவிட்டால் அவனுக்கு சாதி, மத, இன அடையாளம் தேவைபடாது, இந்தியன் எனும் ஒற்றை அடையாளம் போதும்

அப்படித்தான் தமிழக மீணவ தீவில் பிறந்த ஏழை இஸ்லாமிய தமிழனை இந்ந்தியா இன்று நாடெங்கும் வணங்கிகொண்டிருக்கின்றது, அவனை அறியா இந்தியரில்லை அவர் படமில்லா பள்ளிகளில்லை.

கலாமிற்கு இந்த பாஜக அரசு செய்யும் மரியாதை பாராட்டதக்கது, அவருக்கு பாரத ரத்னா வழங்கினார்கள், ஜனாதிபதியாக ஆக்கி வைத்தார்கள்

கலாம் சீரியல் ஏவுகனை என அந்த திட்டத்திற்கு பெயரிட்டார்கள், இதோ பெரும் மணிமண்டபமும் திறந்தார்கள்

மாநில அரசு அப்படி ஒரு மணிமண்டபம் கட்டியிருக்கும் என நம்புகின்றீர்கள்? ஒரு காலமும் நடந்திருக்காது

மாணவர்களை நிரம்ப நேசித்தவர் அவர், அவரின் இன்னாளில் மாணவர்கள் நிச்சயம் அவரை நினைவு கூறவேண்டும்,எல்லா மாணவர்களும் அவரை படிக்கட்டும் கோடி மாணவர்களில் ஒரு கலாம் வருங்காலத்தில் வரமாட்டானா?

நிச்சயம் வருவான்

இத்தேசத்தை அரசியல்வாதி காக்க மாட்டான், போலி சிந்தனைவாதியோ இம்சை பிடித்த கொள்கைகளை வைத்திருப்பவனோ காக்க மாட்டான், சுயநலம் கொண்ட கும்பலெல்லாம் காக்காது

நாட்டுபற்றோடு கூடிய அறிவாளியே இத்தேசத்தை காக்க முடியும் கலாம் அப்படி காத்தார, கலாமின் காலடி சுவடில் இருந்து பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள், வந்து கொண்டே இருப்பார்கள்

1962ல் ஒரு மோட்டார் குண்டை கூட எதிரி எல்லையில் வீசமுடியா நிலையில் இருந்தது இந்தியபடை

இன்று அந்த இந்தியாவிடம் அக்னி, நாக், திரிசூல்,பிரித்த்வி, அஸ்திரா, நிர்பாய், பிரம்மோஸ், தனுஷ், ருத்திரம், பிரகார், ஆகாஷ் என ஏகபட்ட வகைகள் உண்டு

இது செயற்கை கோளை தகர்க்கும் தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகனை முதல், விமானம், ஏவுகனை, கப்பல், டாங்கி , நீர்மூழ்கி என எல்லா வகை ஆபத்துக்களையும் விரட்டி அடிக்கும்

மிக நுட்பமான வகையில் எதிரியின் இலக்கினை தேடி பிடித்து அழிக்கும் வகையில் அவை இப்பொழுது வடிமைக்கபட்டுள்ளன‌

இதன் மேம்படுத்தபடும் வடிவம் ரஷ்ய எஸ் 400 , இஸ்ரேலிய அயன்டோம் போல நமக்கு வான் தடுப்பு சாதனமாகவும் விரைவில் மாறும்

கலாம் காலத்தால் பிரிந்திருக்கலாம் ஆனால் அவரின் உழைப்பால் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்

கே சீரிஸ் ஏவுகனைகள் நாட்டை காத்து கொண்டிருகின்றன, ஓடிசா பக்கம் அப்துல் கலாம் தீவு (முன்பு வீலர் தீவு) அனுதினமும் ஏவுகனை சோதனைகளை செய்து கொண்டே இருக்கின்றது

சீனாவுடன் யுத்த நிலை பரபரப்பு காணப்படும் நேரம் சீனா பின்வாங்கி நிற்க இந்த ஏவுகனைகளும் காரணம்

1962ல் பெரும் தோல்வியில் திரும்பிய இந்தியா, இன்று மாபெரும் பலத்துடன் எதிர்த்து நிற்க கலாம் மிக பெரும் காரணம், அவர் ஏற்றிவைத்த வெளிச்சமும், கட்டி வைத்த வான் கோட்டையும் அவ்வளவு பெரும் விஷயங்கள்

ஆனால் அந்த தமிழன் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைகழகம் கிடையாது, கல்லூரி கிடையாது

ஒரு சிலை கூட கிடையாது

கல்வி அறிவு இல்லா, தேசபிரிவினைவாதி ஈரோட்டு ராம்சாமிக்கும், அவரின் அடிப்பொடி அண்ணாதுரை, கேமரா ஹீரோ ராம்சந்தருக்கு இருக்கும் சிலைகளில் 1000ல் ஒரு பங்கு கூட கலாமுக்கு இங்கு கிடையாது

இந்நிலை மாற வேண்டும், கலாம் நினைவு போற்றபட வேண்டும், மாணவர்களில் பலர் அவர் வழியில் நாட்டுக்காய் வருதல் வேண்டும்

ஒருமனிதன் நாட்டுக்காய் 100% வாழ்ந்தான், இந்தியனாக கடைசிவரை வாழ்ந்தான், மதம் இனம் மொழி தாண்டி இந்தியனாய் நின்றான் என்றால் அப்துல்கலாம் எனும் விஞ்ஞான ரிஷிக்கு தனி இடம் உண்டு

அந்த தவமுனிக்கு, பிரம்மாஸ்திரமும் பாசுபத கனையும் கொடுத்த ரிஷிக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

(காமராஜர் திமுகவினரால் எப்படி அவமானபடுத்தபட்டார் என்பதை நமக்கு முந்தைய தலைமுறை கண்டது

கலாம் எப்படியெல்லாம் திமுகவினரால் அவமானபடுத்தபட்டார் என்பதை கண்ட தலைமுறை நாம்

ஆம், நாட்டுபற்றாளர்களாக ஒரு தமிழர் இருந்தால் திமுகவுக்கு ஒரு காலமும் பொறுக்காது என்பதற்கு இவை எல்லாம் சாட்சிகள், கலாம் எனும் மாமனிதனுக்கு திமுக செய்த இழிவுகளெல்லாம் ஒரு காலமும் மனதில் இருந்து நீங்காதவை)

Thursday, 8 October 2020

பிரம்ம முகூர்த்தம்: முக்கியத்துவமும் பலன்களும் !.

பல கோடீஸ்வரர்களை / சாதனையாளர்களை / யோகிகளை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்:
            முக்கியத்துவமும் பலன்களும் !.

பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி பல அபூர்வமான ரகசியங்களை இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்...
அதி காலையில் எழு! பல நன்மைகளை தரும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன!

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன!!!!! சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால் பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும். காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான் பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம் உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான தொரு கடமையாகும்.

இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது. அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள் எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது. பொழுது புலராத முன்பு பூமியில் சப்தங்கள் குறைவாக இருக்கும். நிசப்தம் எங்கும் பரந்து இருக்கும் இவ்வேளையே தியானம் செய்ய மிகவும் அருமையான நேரம். அதிகம் சலனமில்லாது இருக்கும் நம் மனமும் எளிதில் வசப்படும். ஆனால் பகலில் சப்தங்களிடையே மனதை நிலை நிறுத்துவது இயலாத காரியம். விடியற்காலை நேரம் கடவுளை நினைத்து மனமொன்றி இருக்க ஏற்றது. இந்த வேளையில் படித்தால் மனதில் நன்கு பதியும். அதிக முயற்சி இல்லாமல் நினைவு வைத்துக் கொள்ளலாம்!

வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புது தன்மை பெறுகின்றன. உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்!.

சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால் அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன!                          

இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும் ஆரோக்யமாக இருக்கும். சத்தம் இல்லாமலும் பரபரப்பு இல்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும்!                                      

உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவதால் விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.
கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்:

உஷத் காலத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யலாம். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தைத் தரும். மேலும், தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுபகாரியங்களைப் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம்.

இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், விண்ணில் வாழும் தேவர்களும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ரிஷிகளும் அருவமாகப் பூமியில் சஞ்சரிப்பதாகவும், அந்நேரத்தில் நாம் தூக்கத்திலிருந்து எழுந்து மனதார அவர்களை நாம் நினைத்து வணங்க, நம்மை அவர்கள் ஆசீர்வதிப்பதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர்.

கிரக தோஷம், ராகு - கேது தோஷம், களத்திர தோஷம் இருப்பவர்கள் தோஷ பரிகாரம் செய்வதுமட்டுமல்லாமல், அதிகாலை நேரமான பிரம்ம முகூர்த்தத்தில் இவர்களுக்கு திருமணம் செய்தால் தம்பதிகளுக்கிடையே எந்தவொரு தோஷமும் அண்டாது. பிரிவினை ஏற்படாது அவர்களின் வாழ்க்கை சிறக்கும்.

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது!

தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்தம். ஒவ்வொரு நாள் காலையிலும் 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரிசெய்ய லட்சுமி கடாட்சத்தை நினைத்த காரியங்களை நிறைவேற்ற நீங்கள் இந்த பிரம்மமுகூர்த்தத்தில் பயன்படுத்தலாம்!

நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை மீண்டும் மீண்டும் நினைப்பதற்கும் மந்திரம் யந்திரம் தந்திரம் நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்றால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நேரம் பிரம்மமுகூர்த்தம்!

அதுபோல் நமது மனதில் இருக்கும் எண்ணங்களை வைப்பதற்கான நேரம் தான் இந்த பிரம்மம் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்த தினம் தினமும் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.

சாதித்திருக்கக் கூடிய மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் எழுந்து செயல்பட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஆதிக்கால தமிழர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செயல்பட ஆரம்பிப்பார்கள். ஆரம்பிப்பது சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும் .ஆரம்பிக்கும் நேரம் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும். ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும். பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4 மணி முதல் 6 மணி வரை கடைபிடியுங்கள் வளமும் நலமும் பெற்று வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!!!

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்றால் முந்திய இரவு ஆகாரம் மிதமாக இருக்க வேண்டும். சரியான வேளையில் சாப்பிட வேண்டும். அலாரம் மணி அடித்து எழுந்த பிறகு மேலும் சுழலும் தூக்கத்தோடு இருக்கக் கூடாது. அதிகாலையில் எழும் மனம் உடையவர்களுக்கு சோம்பல் கிட்டே நெருங்காது. நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருப்பர். காலையில் பல் தேய்த்த பின் ஒரு தம்ளர் தண்ணீர் அருந்துவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஆயுளை விருத்தி செய்யும். கிழத்தன்மையை நீக்கும். கடவுள் பெயரை நினைத்துக் கொண்டே காரியங்களை தொடர்ந்தால் அந்தக் காரியம் பலிதமடைவது நிச்சயம்.

காலையில் எழுந்ததும் இன்றைய தினம் எல்லாம் நல்லபடியாக அமையவேண்டும் என்று மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும். அமைந்ததாக எண்ண வேண்டும். நாம் தியானம் செய்ய இந்தப் பயிற்சியே முதல் படியாக உதவும்.
காலையில் கடமைகள் ஒவ்வொன்றாக ஆற்றிவரும் போதே, கடவுளை மனதில் நினைத்தப்படி செய்வதால் அச்செயல்கள் சிறப்பாக நடக்கும். இந்த சிந்தனையால் நமது பல சங்கடங்களும் தீரத்துவங்கும். நமது கவலைகளின் கூர்மையான முட்கள் கட்டாயம் அகற்றப்படும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோபம், வெறுப்பு, எரிச்சல், எதுவுமே நம்மை அண்ட விடக்கூடாது. ஏனெனில் அது அதிகாலைப் பயனைக் கெடுத்து விடக்கூடும். எனவே மனதை லேசாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மனதிற்குள் உணர வேண்டும். சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், காலைக்குளிர் மென்மையாக நமது உடலைத் துவட்டிவிட்டு, சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். நிம்மதியின் அறிகுறியான புன்னகை நமக்கு பல நன்மைகள் தரும். அதனால் பிரம்ம முகூர்த்த வேளையில் நம் செயல்களைத் துவக்கினால், வாழ்க்கையில் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்தான்…..

(அடியேனும் அனுபவபூர்வமாக உணா்ந்துஇருக்கிறேன்.....)

ஓம் ஜெய் குருவே துணை.

               - சித்தர்களின் குரல் shiva shangar