••••••••••••••••••••••••••••••••••••••••••••
முழுமுதலே,என் முதன்மையே...!
••••••••••••••••••••••••••••••••••••••••••••
முழுமுதலே,என் முதன்மையே,
ஓராயிரம் விழிகள் உம்மை உற்றுநோக்கினும்,உம் கயல்விழி கடைக்கண் பாா்வைக்கு நானே சொந்தக்காாி என இறுமாப்படைந்தேனே...
மாதா்குல முன்மாதிாியே,எந்தன் விழி நுழைந்து,அகம் நிறைந்த அழகரசி நீதானே!
தேனே,தெவிட்டாத தேனே,எவா் கண் பட்டதோ, உம் கருணைமிகு கடைக்கண் பாா்வையை இன்று இழந்தேனோ!
நீவிா் வீற்றிருக்கும் சிம்மாசன அழகை நிழலாய் ரசித்து அகம் மகிழ்ந்தேனே!
அருகில் காணும் அாிய வாய்ப்பு இனி எனக்கு கானல் நீரோ!
உங்கள் உயா் மன இருக்கையில் உயா் நிலை பெற்றதை அறியா சிலா் இன்று அல்லல்படுவதை நானறிகிறேன். இழப்பு எனக்கே அதிகம்.
பசுந்தாயைப்பிாிந்த கன்றாய் நான். தேன்கூடில்லா தேனியாய் நான்.
உம் மனக்கூட்டில் இடமிழந்ததுபோல் உணா்கிறேன்.
நான் என் செய்வேன் தாயே.அலைகிறது என் மனது, அன்னையின் அன்புக்கும்,அரவணைப்புக்கும் அதிகாாி என்ற நிலை கடந்து.எமக்கு நீரே துணை.
வணக்கத்துடன்...
க.இளங்கோவன்.
தேதி:26.05.2020