Wednesday, 22 June 2016
Emergency Numbers.....
இனியவை எப்போதும்............
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...! 📲
>🗡
🚌பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
🗡
🛍பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
🗡
👴🏼👩🏻மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
🗡
👩🏻வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
🗡
🚂🚃ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044-25353999 / 90031 61710 / 99625 00500
🗡
🚕ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445
🗡
🏃🗣சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
🗡
🗣👤மனிதஉரிமைகள் ஆணையம் ————-–– 044-22410377
🗡
🚌மாநகரபேருந்தில அத்துமீறல்————–—- 09383337639
🗡
🚨🚔📲
போலீஸ் SMS :- —————————————- 9500099100
🗡
👮👞💸போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—- 9840983832
🗡
🚎போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—– 98400 00103
🗡
💳வங்கித் திருட்டு உதவிக்கு ———————- 9840814100
🗡
👩🏻வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———- 044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365
🗡
👩🏼தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
🗡
🐯🦁🐶🐒🐘🐎🐅
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666
🗡
👮🏽🚓போலீஸ் : —————————————–—— 100
🗡
🚒தீயணைப்புத்துறை:————————-—–101
🗡
🚑ஆம்புலன்ஸ் : —————————————- 102, 108
🗡
🚌🚦போக்குவரத்து விதிமீறல———————– 103
🗡
🚌🚨விபத்து :———————————————-– 100, 103
🗡
👩🏻பெண்களுக்கான அவசர உதவி : ——-—-– 1091
🗡
👶🏻🙇குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-– 1098
🗡
🚨🚑அவசர காலம் மற்றும் விபத்து : ———-— 1099
🗡
👴🏼முதியோர்களுக்கான அவசர உதவி:—-— 1253
🗡
🛣🚌தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033
🗡
🏝🏖கடலோர பகுதி அவசர உதவி : ———-—– 1093
🗡
💉🌡ரத்த வங்கி அவசர உதவி : —————-—– 1910
🗡
👁👁கண் வங்கி அவசர உதவி : —————-—– 1919
🗡
📲🇮🇳நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
🗡
📲🔐நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள்
மட்டும் இயங்கும்.
இது அனைத்திற்குமான அவசர உதவி எண்கள்
☎☎☎☎☎☎☎☎☎☎. By. K J N
Tuesday, 21 June 2016
திரு ஆப்பனூா் இளைய கவிஞா்.திரு.இராஜ்குமாா் NRN... அவா்களின் முகநூல் கவிதை தொகுப்பு....
எங்க ஊரு ஆப்பனூரு
எங்க நீயும் வந்துபாரு
ஆதிசிவன் வந்ததாலே
ஆப்பனூரு என்ற பேரு
ஊருக்கு முன்னாலே
உயரமா ஒரு சிலை
உலகமே வணங்கும்
எங்க ஐயா தேவர்சிலை
யாருக்கும் முன்னாலே
கையை கட்டி நின்னதில்லை
யாராச்சும் வம்பு பன்ன
உயிரோட விட்டதில்லை
மழையை நம்பி நாங்க இல்லை
மலேசியா தாண்டியும் எங்க எல்லை
அகிலமெல்லாம் சென்றாலும்
அரியவள் அருளில் குறைவில்லை
ஆயிரம் வீடுகள் இங்குண்டு
அத்தனை வீடுக்கும் உறவுண்டு
எத்தனை எதிரி வந்தாலும்
எதிர்த்து நிற்க்கும் வீரமுண்டு
எல்லா சாமியும் இங்குண்டு
அல்லா சாமிக்கும் இடமுண்டு
நல்லா நீயும் வணங்கி வந்தால்
நன்மை எல்லாம் உனக்குண்டு
நல்லா நீயும் வணங்கி வந்தால்
நன்மை எல்லாம் உனக்குண்டு...!
Tuesday, 14 June 2016
ஆய கலைகள் 64 என்பது...
ஆய கலைகளை அறுபத்து நான்கு வகையாக பிரித்துள்ளனர், அவைகளின் பட்டியல்..
1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம். கா ஜெ நாகராஜன் பரமக்குடி
Monday, 13 June 2016
Indian law for employees.....
மக்களுக்கு தெரியாத சில முக்கியமான சட்ட பிரிவுகள்
1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166
5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)
7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.
8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43
10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.
11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)
12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.
13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.
14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)
15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)
16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)
17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.
18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.
19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267
20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403
21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.
22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96
23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295
24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295
25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419
26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.
27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484
28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494
29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495
30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட
இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.
இப்படி தகவல் வருது.உறுதிப்படுத்திய பிறகு செயல்படுத்த ஆரம்பியுங்கள்
Details of TN.Govt.Leave......
🌷தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!🌷*
*🌹 அரசு விடுமுறை நாட்கள்*
*(GOVT HOLIDAYS)*
*பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.*
*🌹மதச்சார்பு விடுப்பு* *(RELIGIOUS / RESTRICTED HOLIDAYS)*
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர்.
ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம்.
அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
*🌹தற்செயல் விடுப்பு*
*(CASUAL LEAVE)*
ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.
*🌹ஈட்டிய விடுப்பு*
*(EARNED LEAVE)*
ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில் பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.
*🌹மருத்துவ விடுப்பு*
*(MEDICAL LEAVE)*
மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்ப விடுப்பு எடுக்க தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர் 90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540 நாட்கள் வரை எடுக்க தகுதி உண்டு.
*🌹சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு*
*(UNEARNED LEAVE ON PRIVATE AFFAIRS)*
சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.
*🌹 மகப்பேறு விடுப்பு*
*(METERNITY LEAVE)*
திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.
*🌹 சிறப்பு தற்செயல் விடுப்பு*
*(SPEACIAL CASUAL LEAVE)*
குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.
*🌹மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு*
*(TURN DUTY,COMPENSATE LEAVE)*
அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.
*🌹 இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம்*
*(TRANSFER-JOINING TIME)*
இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள் சம்பளத்துடன் துய்க்கலாம்.
இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம். கா ஜெ நாகராஜன் பரமக்குடி.
ருத்திராட்சத்தின் மகிமைகள்....
ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் உண்டான பலன் மற்றும் ஒவ்வொரு முகத்திற்கும் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்களும் :
ஒரு நாள் ஜமதக்கினி மகரிஷியின் வயலில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு நெற்கதிர் எடுத்து விரட்டினார். அந்தப்பசு இறந்துவிட்டது. இதனால் பாவம் செய்து விட்டோம் என்று கருதி அவர் சுகமகரிஷியிடம் சென்று தன் துன்பத்தை கூறினார். உடனே அவர், ஜமதக்கினி நீ காசிக்கு சென்றால் ஒரு முகம் ருத்ராஷம் கிடைக்கும். அதை நீ அணிந்துக் கொண்டால் உன்னுடைய ‘கோ ஹத்திய தோஷம்’ நீங்கும் என்று கூறினார். ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக இருப்பார்கள். அவரவர் அந்தந்த பாவங்களை அழித்து விடுவார்கள். இந்த ருத்ராஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் பாவத்தை அழிக்கும் என்று சொன்னாராம்.
ஒரு முகம்:
ஒரு முகம் கொண்ட ருத்திராட்சம் பிரம்ம ஹத்திய தோஷம் அழிக்கும். இது சிவனின் மற்றொரு உருவம் என்று கருதப்படுகிறது. இதை அணிந்தால் சிவனைப் பூஜை செய்த பலன் கிடைக்கும்.
இரண்டு முகம்:
இரண்டு முக ருத்ராஷம் அர்த்த நாரிஸ்வர சொரூபம். அனைத்து பாவங்களையும் அழிக்கும். இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.
மூன்று முகம்:
மூன்று முகம் ருத்ராஷத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ருத்ராஷம் ஸ்ரீ ஹத்தியா தோஷத்தை நீக்கும். (ஒரு பெண்ணை கொன்றால் வரும் பாவம்). மும்மூர்த்திகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கும் மூன்று முக ருத்ராஷம் மணமானப் பெண்கள் அவர்களின் தாலிக்கொடியில் அணிந்தால் பூவும், பொட்டும் நிலைத்து மகிழ்ச்சியை அளிக்கும்.
நான்கு முகம்:
நான்கு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி பிரம்மன். ஞாபசக்தியை பெருக்கும் சர்வஹத்தியா தோஷம் நீங்கும்.
ஐந்து முகம்:
ஐந்து முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி காலாக்கினி ருத்திரன். இது அனைத்து பாவங்களையும் அழிக்கும். மனதிற்கு சாந்தி தரும். இரத்த அழுத்தத்தை நீக்கும். அஜீரணத்தைப் போக்கும் மார்பு வலியை நீக்கும். தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்கள் ஒரு ருத்ராஷக்கொட்டை எடுத்து அதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை எடுத்து கண்ணின் இமையின் மீது தடவினால் நல்ல உறக்கம் வரும். விஷ பூச்சிகள் தீண்டினால் உடனே ஒரு ருத்ராஷக் கொட்டை எடுத்து எலுமிச்சைப் பழச்சாரில் குழைத்து அந்த சாந்தை எடுத்து தீண்டிய இடத்தில் தடவினால் வலி குறைந்து குணமாகும். காய்ச்சிய நீர் அல்லது காய்ச்சியை பாலில் இரண்டு ருத்ராஷக் கொட்டைப் போட்டு உடன் எடுத்து விட வேண்டும். அப்படி எடுத்த நீர் அல்லது பாலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்த விஷ பூச்சிகளும் அருகில் நெருங்காது. 32 கொட்டை கொண்ட மாலையை அணிந்தால் விரோதி கூட மரியாதை செலுத்துவான்.
ஆறு முகம்:
ஆறு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி கார்த்திகேயன் பனிரெண்டு ருத்ராஷ கொட்டை கையில் (மணிக்கட்டில்) அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளை வராமல் காக்கும். மாணவர்கள் அணிந்தால் ஞாபசக்தி பெருகும் கண்திருஷ்டியைப் போக்கும்.
ஏழு முகம்:
ஏழு முகம் ருத்ராஷத்திற்கு இதற்கு அணங்கம் என்று பெயர். இதற்கு அதிபதி காமதேவன். ஜாதகம் சரி இல்லாதவர்கள் இதை அணியலாம். இதை அணிந்தால் அகால மரணம் வருவதைத் தடுக்கும்.
எட்டு முகம்:
எட்டு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி விக்னேஷ்வரன். பஞ்ச மகா பாதகத்தை அழிக்கும். மன தைரியம் உண்டாக்கும். கணேசனை பூஜை செய்த பலன் கிடைக்கும். காய்ச்சியப் பாலில் இதைப்போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் பக்கவாதம் மூன்று மாதங்களில் குணமாகும்.
ஒன்பது முகம்:
ஒன்பது முக ருத்ராஷத்திற்கு அதிபதி பைரவன். இதற்குள் ஒன்பது சக்தி இருக்கிறது. ஒரு கொட்டை அணிவதாக இருந்தால் வலது கையில் அணியலாம். துர்கை பூஜை செய்பவர்களும் இதை அணியலாம். மனிதன் கிரக சாந்திக்காக நவரத்தினங்களை மோதிரமாக அணிகின்றான். நவரத்தின மாலை அணிகின்றான். நவகிரக பூஜையும் செய்கிறான். இவையாவும்; ஒரு ஒன்பது முக ருத்ராஷக் கொட்டை அணிந்தால் கிடைக்கும்.
பத்து முகம்:
பத்துமுக ருத்ராஷத்திற்கு ஜனார்த்தனம் என்று பெயர். இதற்கு அதிபதி ஸ்ரீ மகா விஷ்ணு அனைத்து கஷ்டத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு. பாம்பு மற்றும் விஷபூச்சிகளில் இருந்து நம்மை காக்கும் சக்தி இதற்கு உண்டு. காய்ச்சியப் பாலில் இந்த ருத்ராஷக் கொட்டையைப் போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் கக்குவான் வராமல் தடுக்கும். ஒரு முக ருத்ராஷம் எப்படி சிவசொரூபமோ, அதேபோல் தஸமுகி ருத்ராஷம் சம்பூர்ண விஷ்ணு சொரூபம். இது மிகமிக குறைவாக கிடைக்கிறது.
பதினொன்று முகம்:
பதினொன்று முக ருத்ராஷம் ஏகாதஸ ருத்ர சொரூபம். இதை அணிந்தால் அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். முனிவர்களின் பத்தினிகள் கூட இதை அணிந்து கொண்டார்களாம். இதைப் பெண்கள் அணிவதால் இரக்கக்குணம் உண்டாகும்.
பனிரெண்டு முகம்:
பனிரெண்டு முகம் ருத்ராஷம் ஆதித்தியம் ஆகும். இதற்கு அதிபதி சூரிய பகவான். இதை காதில் அணிந்தால் சூரியனின் கருணை நமக்கு கிடைக்கும்.
பதிமூன்று முகம்:
பதிமூன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் கார்த்திகேயன், காமதேவன், இதை அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
பதினான்கு முகம்:
பதினான்கு முக ருத்ராஷம் பரமசிவனுக்கு நிகரானது.
பதினைந்து முகம்:
பதினைந்து முக ருத்ராஷம் கடவுளின் மேல் பக்தியை உண்டாக்கும் சக்தி இதற்கு உள்ளது.
பதினாறு முகம்:
பதினாறு முக ருத்ராஷம் தந்திரம் செய்பவர்களுக்கு இந்த ருத்ராஷம் பயன் தரும்.
பதினேழு முகம்:
பதினேழு முக ருத்ராஷத்திற்கு அதிபதி விஸ்வகர்மா. இதை அணிந்தால் சகல வசதி கிடைக்கும்.
பதினெட்டு முகம்:
பதினெட்டு முக ருத்ராஷத்திற்கு அதிபதி பூதேவி.
பத்தொன்பது முகம்:
பத்தொன்பது முக ருத்ராஷம் அணிந்தால், ஞானம் பெருகும். சாந்திக் கிடைக்கும்.
இருபது முகம்:
இருபது முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் பிரம்ம தேவன். சரஸ்வதி இதை அணிந்தால் ஞானம் பெருகும். மனதிற்கு சாந்தி தரும்.
இருபத்தி ஒன்று முகம்:
இருபத்தி ஒன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதி குபேரன். சொத்து சுகம் கிடைக்கும். எல்லா பாவத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு.
ருத்திராஷம் கொட்டையின் உட்பகுதியில் வெற்றிடம் உள்ளது. இதனால் புதிய ருத்திராஷம் தண்ணிரில் மிதக்கும். பயன்படுத்த பயன்படுத்த ருத்திராஷத்திற்கு எடை கூடும். இதனால் ருத்திராஷம் நிரில் முழ்கும். ருத்ராஷக் கொட்டை அணிவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது நாம் எந்த நிலையிலும் ருத்திராஷத்தை பயன்படுத்தலாம். இதனால் எவ்விதத்திலும் ருத்திராஷத்திற்கு சக்தி குறையாது. ஆனால் மனதிற்கு தவறு என்று நினைத்தால் ருத்திராஷத்தை அணிய வேண்டாம்.
நாக ருத்திராட்சம்
இந்த ருத்திராட்சம் மிகவும் அரிதான ஒன்று எவருக்கும் எளிதில் கிடைக்காது. அதிலும் உண்மையான நாக ருத்திராட்சமாக இருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒருமுக ருத்திராட்சத்துடன் பாம்பு படம் எடுப்பது போல் ஒட்டியிருக்கும். இது மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். இதன் பயன்பாட்டை அறிந்து அணிவது நலம். ஒரு ருத்திராட்ச மரத்தில் நாகம் ஏறினால் அந்த மரத்தில் ஒரு ருத்திராட்ச கொட்டையில் மட்டும் நாகம் இருப்பது போல் உருவாகும். பின்பு அம்மரத்தில் ருத்திராட்ச கொட்டை உருவாகாது மேலும் அம்மரத்தை வெட்டி விடுவார்கள்.
ஒரு ருத்திராட்சக் கொட்டையை அணிந்தால் பயனில்லை 108 அல்லது 54 கொட்டை மாலையின் நடுவில் ஒரு பெரிய ருத்திராட்சம் போடவேண்டும். அப்பொழுது தான் முழுமையான பலன் கிடைக்கும். உண்மையான ருத்திராட்சத்திற்கு புஜத்துவாரம் தட்டையாகத்தான் இருக்கும். போலி ருத்திராட்சம் புஜத்துவாரம் உருண்டையாக இருக்கம். இதை வைத்தது போலியைக் கண்டுபிடித்து விடலாம்.
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் ....🐒