Friday, 27 November 2015

ஏழாவது ஊதிய குழு easy calculation formula...

NEWS:
Fill basic pay and grade pay then new payment will be calculate after 1 second.
: https://www.easycalculation.com/finance/7th-pay-commission-calculator.php

7th pay calculator

Thursday, 26 November 2015

7 வது ஊதிய குழு பற்றி தகவல்; courtesy: www.tnnurse.com

7th Central Pay Commission Notes

The  concept  of  separate  grade  pay  has been  done  away  with  and  the  grade  pay  at  all  levels  has  been  subsumed  into  the  pay  matrix.

All  the  employees belonging  to  various  services  will  proceed  according  to  their  respective  service  conditions  by earning  increment  on  the  basis  of  merit

Almost  the  whole lot  of  government  employees  appointed  on  after  01.01.2004  were  unhappy  with  the  new pension  scheme.  While  the  National  Pension  System  does  not  form  a  part  of  our  Terms  of Reference,  we  have  recorded  the  sentiments  of  the  affected  employees.  The  government  should take  a  call  and step in to look into their complaints.

We  also  suggest  that  an  appropriate  body  may  be  created to  look  into  anomalies,  if  any  arising  out  of  the  implementation  of  the  recommendations  of  the Seventh  CPC.  The  body  so  created  may  be  in  position  for  a  period  of  six  months  at  least  so that  if  any  anomaly  arises  in  implementation  of  the  recommendation  of  this  Commission,  it can be  immediately  attended to and the affected persons need not wait  for  another  decade

After  considering  all  relevant  factors  the  Commission  is  of  the  view  that  the  minimum pay  in  government  recommended  at  ₹18,000  per  month,  w.e.f.  01.01.2016,  is  fair  and reasonable  and  one  which,  along  with  other  allowances  and  facilities,  would  ensure  a  decent standard of  living  for  the  lowest ranked  employee  in the  Central Government.

Friday, 20 November 2015

இந்திய அரசின் வலிமை:ஓராண்டு கால இந்திய அரசின் சாதனை

நீங்கள் பாரத பிரதமர் மோடியை வெளிநாட்டு பிரதமர், கார்ப்பரேட் கைக்கூலி,உலகம் சுற்றும் வாலிபன்,விளம்பரபிரியர் என கூறி சுய இன்பம் அடைந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மரம் வெட்டி கொண்டு இருக்கிறீர்கள் அவர் விதை விதைத்து கொண்டு இருக்கிறார்...
தூற்றுவோர் தூற்றட்டும் எங்களுக்கு எப்போதும் தேசநலனே முக்கியம்...

வாழ்க பாரதம்...
வளர்க பாரதம்... ////

1.இப்பொழுதுள்ள பாஜக அரசு சௌதி அரசை வற்புறுத்தி " On-Time Delivery Premium Charges on Crude Oil" வசூலிக்காமல் செய்துள்ளனர். இது நமது பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சாதனை

2. இந்தியா 4 ஹைட்ராலிக் பவர் ப்ரோஜெக்ட்ஸ் மற்றும் அணைகளை பூடானில் கட்டவிருக்கிறது. இதிலிருந்து பெறப்படும் கிரீன் எனர்ஜியில் பெரும்பகுதி (Lion'sShare) இந்தியாவிற்கு கிடைக்க ஒப்பந்தம்

3. நேபாலில் இந்தியா மிகபெரிய அணை கட்ட ஒப்பந்தம் போட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் 83% கிரீன் எனர்ஜி இந்தியாவிற்கு இலவசமாக கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தை சீனாவிற்கு எதிராக இந்தியா வென்றது

4. வியட்னாமின் கடல் எல்லையில் எண்ணை கண்டறியும் ( Oil Exploration) பணியை இந்தியாவிடம் கொடுத்துள்ளது. இது முந்தைய UPA அரசால் சீன அச்சுறுத்தலுக்கு பயந்து கைவிடப்பட்ட பணியாகும்.

5. சீனாவிடம் நட்பு பாராட்டிய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்க்ஷா அவர்களுக்கு அளித்த ஹம்பண்டோடா துறைமுகம் கட்டும் ஒப்பந்தத்தை இப்பொழுதுள்ள அரசு ரத்து செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அமெரிக்காவின் CIA தனது அறிக்கையில் இலங்கையின் இந்த அதிகார மாற்றத்திற்கு முக்கிய காரணம் இந்தியாவின் RAW என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவும்.

6. திரு அஜித் டோவலை இந்திய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Advisor) நியமித்தது திரு மோடி எடுத்த முடிவுகளிலேயே மிகவும் பாராட்ட தக்க முடிவு. அவரின் ஆலோசனை பேரில் நடந்தவை தான் பெண்டகன், இஸ்ரேல், மற்றும் ஜப்பானுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள். திரு குஜரால் பிரதம மந்திரியாக இருந்தபோது நமது RAW வை மற்ற நாடுகளில் எந்த இரகசிய தாக்குதலும் (Covert Operation) நடத்த கூடாது என்று உத்தரவு போட்டு இருந்தார். அதையே பின்னால் வந்த UPA அரசும் கடைபிடித்து. இப்பொழுது நடப்பது என்ன என்று உங்களுக்கே தெரியும் ( தீவிரவாதிகள் வந்த படகு தகர்த்தது) .. மும்பையில் நடந்தது போல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு இப்பொழுது தெரிந்து இருக்கும்.

7. வட கிழக்கு எல்லையை ஒட்டி ரோடு போட இந்த அரசு உத்தரவு போட்டுள்ளது. தவிர இந்திய எல்லைகளை சுற்றி ரோடு போடும் ஆணையையும் பிறப்பித்துள்ளது. முந்தைய அரசு சீன அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து நமது ராணுவ வீரர்களை பற்றய கவலை இல்லாமல் இதை தள்ளிவைத்தது.

8. உங்களுக்கு நமது ராணுவமும் ,வெளிவுறவு துறையும் , RAW வும் இணைந்து நமது மக்களையும் (4500+) 28 அந்நிய நாட்டு மக்களையும் ஏமனில் இருந்து மீட்டு வந்தது நினைவிருக்கும்.. சண்டை நடக்கும் ஒரு நாட்டின் உள்ளே போய் அங்கிருக்கும் மக்களை மீட்டு எடுக்கும் ஆற்றல் நமது ராணுவத்திற்கு உண்டு.. ஆனால் அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து அந்த பணியை அவர்களிடம் ஒப்படைக்கும் வலிமை இந்த அரசிடம் தாம் உள்ளது.

9. இந்தியாவின் விண்வழி பாதுகாப்பு ( Air Defence) நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்டே போகின்றது என்ற நமது ராணுவத்தின் குறிப்பை லட்சியம் செய்யாது இருந்த சென்ற அரசு எங்கே ?... தானே நேராக சென்று பிரான்ஸ் அரசிடம் பேசி 36 பைட்டர் ஜெட் வாங்கிய நமது பிரதமர் எங்கே ( இடை தரகர்கள் இல்லை என்பது அடுத்த விஷயம் )

10 . ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே அவர்கள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் வாங்கி கொண்டிருந்த அணு உலைகள் இப்பொழுது இந்த அரசின் திறமையால் , இப்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே ( Make In India) பிரான்ஸ் துணையுடன் உற்பத்தி செய்யப்படும்...

ஒரு வருஷத்துல இது போதுமா இன்னும் வேணுமா ?.... இன்னும் வரும்

Sunday, 15 November 2015

இராமா் பாலத்தைப் பற்றிய நாசாவின் ஆராய்ச்சி உண்மைகள்...

இராமர் பாலத்தைப்பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்......
இராமர் பாலம்!
இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம்.
இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்!
இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள்.
இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது.
நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர்.
கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
அதற்கு நமது தஞ்சை பெரியக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பலவன அறிந்து வைத்திருப்போம்.
ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது.
அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்…
நாசா கூறும் விளக்கம்
நாசா விண்வெளி மூலம் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தை0க் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல.
மற்றும் இது வெறுமென கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை.
மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது.
என கூறியிருக்கிறார்கள்
இராமாயணம் சொல்வது உண்மை
இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது.
அதனால் இராமாயணம் சொல்வது உண்மை தா உபயோகத்தில் இருந்த இராம சேது இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது.
கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன.
எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது.
அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.
மனிதர்களால் கட்டப்பட்டதா..?
இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர்.
இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது.
மிதக்கும் கற்கள்
மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது.
இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர்.
ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும்.
அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தொடக்கமும், முடிவும்
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது.
இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது.
கிட்டதாட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர்.
இராம சேதுவின் அளவு
இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது.
இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான்
இராம சேது பாலத்தின் வயது
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி,
இராம சேது பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள்.
ஐந்தே நாட்களில்
வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம்.
ஆதாம் பாலம்
இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.

Tuesday, 3 November 2015

டெங்கு காய்ச்சலுக்கு, சித்த வைத்தியம்...

டெங்கு காய்ச்சல்.

தோழர்களே உங்களுக்கு காய்ச்சலின் போது நீர்தாகம் அதிகமாக வருகிறதா?
தொண்டை வரண்டு போகிறதா?
இது டெங்குவின் அறிகுறி.

சட்டென்று பப்பாளி இழையை பிடுங்கி அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து 4 வேளையாக பகிர்ந்து குடிக்கவும்.
டெங்கு வைரஸ் உடம்பில் உள்ள நீர்சத்தை அழித்துதான் மரணத்தை வரவைக்கிறது.

முடிந்த அளவு நீர், பழச்சாறுகள் அருந்துகள். சிறுநீரை அடிக்கடி கழியுங்கள்.
சர்க்கரை உப்பு கரைசலை இரண்டு மூன்று வேளை பருகுங்கள்.
நிலவேம்பு பொடியை நீரில் கொதிக்க வைத்து பருகுங்கள்.

சாதாரன காய்ச்சல் என்று அஜாக்கிரதை கொள்ளாதீர்.
ஒரு கொசு ஒரு இரவில் 25 கிலோமீட்டர் வரை பயனிக்கும்.

டெங்குவை குணமாக்க மருத்துவத்தில் முழுமையான மருந்து இதுவரை இல்லை. நான் சொன்ன முறையை பயன்படுத்துயங்கள். முழுமையாக குணமடையும்.

எந்த ஒரு நோய் குணமாகுவதிற்கு மனசுதான் காரணம். உங்கள் மனசை ஏமாற்றுங்கள், தைரியமாக இருங்கள்.

பாதிக்கபட்டவருக்கு தைரியம் சொல்லாதீர்கள். ஏனென்றால் நீங்கள் தைரியம் சொல்லும்போது அவர்களுக்கு அதிக பயத்தை உண்டுபன்னும். மாறாக அவருக்கு பிடித்தமான விஷயங்களை உரையாடுங்கள்.

உங்கள் வீட்டில் இருப்பு பொருட்கள், சமையலறை, பயன்படுத்தாத பாத்திரங்களில் இவ்வகை கொசு இருக்கலாம். இதை அழிக்க விளம்பரங்களில் வரும் கொசு அழிப்பான் வேண்டவே வேண்டாம்.
தீக்கனியின் மீது பச்சையான வேப்பிலை போட்டு உங்கள் வீடு முழுவதும் புகை காட்டுங்கள். (சாம்பிரானி புகை காட்டுவது பொல்)
கொசு முற்றிலுமாக அழிவதுடன் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா வைரஸ் உம் முற்றிலும் அழித்து விடும்.

அருகிலிருப்பவரிடம் எடுத்துரையுங்கள்.
உங்களால் ஒரு உயிர் முதல் பல உயிர் வரை காப்பாற்ற படலாம்.

Sunday, 1 November 2015

இயேசு இந்தியாவில் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளா் ஹோல்கா் கொ்ஸ்டனின் கூற்று

இந்து தத்துவத்தின் மாண்பு:திரு.U.கண்ணன்

இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...
கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...
மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...
கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...
நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...
கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...
காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...
சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....
உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....
‬: நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :👇👇👍

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று  சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக  முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள்,
நானும் கடவுள்...
பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க
👉இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க
👉மகாபாரதம்,

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
👉பகவதம்,

அரசியலுக்கு
👉அர்த்தசாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு
👉காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு
👉சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு
👉வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு
👉யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு
👉வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு
👉கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. , கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
"கொல்லாமை " "புலால் மறுத்தல்",
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம்   வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
👉👉இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
👉💪👑👑இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்👏💫🌟.
😇😇😇😇😇
🙏🙏🙏🙏🙏

மதுரை மீனாட்சி அம்மனின் வரலாறு: திரு.U.கண்ணன் அவா்களிடமருந்து...

மாலிக்கபூரின் மதுரை மீனாட்சி கோவில் படையெடுப்பு! மதுரைக்கு வந்து கொண்டிருந்தான் கொடுங்கோலன் மாலிக்கபூர். அவன் வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல்.நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் விக்கிரக மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் நம் மக்கள். இப்படியாக துவங்கியது தான் படையெடுப்பு.* இவன் மதுரை நோக்கி படையெடுத்து வருவதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும் வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.* சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன் மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறிய படியே கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப் போலவே நகை, விளக்கு,மாலை, எல்லாம் ஏற்பாடுசெய்தார்கள்.* மதுரை வந்தான் மாலிக்கபூர்.ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். போலி விக்ரகத்தை உண்மையென்று நினைத்து இடித்தான்.செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு போனான்.* அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.* அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் மறுசீரமைப்பு செய்தார்கள். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.* அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்கிரகமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள்! இதோ இடித்து விட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்கிரகமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும் வரை எப்படியாவது நான் இதை சொல்லி விட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று மகிழ்ச்சியுடனும் அழுதுகொண்டே சொன்னார்.உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.......--- உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்ப்பகிரகத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!! * 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும் போது இருந்த படியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புதுபொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.* இன்றும் மதுரை மீனாட்சி கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விவரம் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மதுரை கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதி போடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.* ॐ ஓம் நம: சிவாய ॐ